சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 சமீபத்திய தகவல்கள்

உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளில் 75%
10 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ளன

प्रविष्टि तिथि: 24 SEP 2020 1:05PM by PIB Chennai

தொடர்ந்து ஆறாவது நாளாக, புதிய பாதிப்புகளை விட, புதிதாக குணமடைபவர்களின் எண்ணிக்கை நாட்டில் அதிகமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 86,508 புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளில் 75 சதவீதம் 10 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ளன

மகாராஷ்டிராவில் மட்டுமே 21 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், ஆந்திப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவிலும் அதிக அளவில் புதிய தொற்றுகள் (முறையே 7,000 மற்றும் 6,000) கண்டறியப்பட்டுள்ளன.

கொவிட்-19 தொற்று காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 1,129 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 83%  பேர் 10 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் அடங்குவர்.

மகாராஷ்டிராவில் 479 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 87 பேரும், பஞ்சாப்பில் 64 பேரும் உயிரிழந்துள்ளனர்

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1658567

-------


(रिलीज़ आईडी: 1658664) आगंतुक पटल : 224
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam