சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 பரிசோதனைகளின் எண்ணிக்கையில் புதிய உயரங்களை இந்திய தொடர்ந்து தொடுகிறது


கடந்த 24 மணி நேரத்தில் 11.5 லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டன

प्रविष्टि तिथि: 09 SEP 2020 1:10PM by PIB Chennai

குணமடைதல்கள் எண்ணிக்கையில் புதிய உச்சமாக கிட்டத்தட்ட 75,000-த்தை இந்தியா தொட்ட அதே நாளில், கொவிட்-19 பரிசோதனைகளின் எண்ணிக்கையிலும் புதிய உயரங்களை நாடு தொடர்ந்து அடைகிறது.

உலகத்திலேயே அதிக அளவில் பரிசோதனைகளை செய்யும் நாடுகளில் ஒன்றாக இருக்கும் இந்தியாவில்,  தினசரி பரிசோதனை திறன் 11 லட்சத்தை ஏற்கனவே கடந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 11,54,549 பரிசோதனைகளை செய்திருப்பதன் மூலம், தனது தேசிய பரிசோதனை திறனை இந்தியா மேலும் வலுப்படுத்தியிருக்கிறது.

குணமடைதல்கள் கடந்த 24 மணி நேரத்தில் 75 ஆயிரத்தையும், இதுவரை ஒட்டுமொத்தமாக 34 லட்சத்தையும் நெருங்கியுள்ளது. ஜூலை மூன்றாவது வாரத்தில் 1,53118 ஆக இருந்த இந்த எண்ணிக்கை, செப்டம்பர் முதல் வாரத்தில் 4,84,068 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1652562


(रिलीज़ आईडी: 1652777) आगंतुक पटल : 231
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu