குடியரசுத் தலைவர் செயலகம்
ஆசிரியர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கிய குடியரசுத் தலைவர், கோவிட் சமயத்தில் டிஜிட்டல் கல்வி மூலம் குழந்தைகளை எதிர்காலத்துக்குத் தயார்படுத்தியதற்காக அவர்களைப் பாராட்டினார்
இடுகை இடப்பட்ட நாள்:
05 SEP 2020 1:19PM by PIB Chennai
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் 47 ஆசிரியர்களுக்கு தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் காணொளிக் காட்சி மூலம் இன்று வழங்கினார்.
ஆசிரியர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கி உரையாற்றிய குடியரசுத் தலைவர், கோவிட் சமயத்தில் டிஜிட்டல் கல்வி மூலம் குழந்தைகளை எதிர்காலத்துக்குத் தயார்படுத்தியதற்காகவும், தேசிய கல்விக் கொள்கையை மாணவர்களுக்கு எடுத்துச் செல்வதற்காகவும் அவர்களைப் பாராட்டினார்
"தேசிய விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும், எனது பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள். ஆசிரியர்களின் உறுதி, அர்ப்பணிப்பு மற்றும் சிறந்த பங்களிப்புகளுக்கு நாம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்," என்று அவர் கூறினார்.
முன்னதாக, இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர்
டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கு அவருடைய பிறந்த நாளில் குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று அஞ்சலி செலுத்தினார்.
டாக்டர் ராதாகிருஷ்ணனின் திருவுருவப்படத்திற்கு குடியரசுத் தலைவரும் குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள அதிகாரிகளும் மலரஞ்சலி செலுத்தினர்.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1651526
(வெளியீட்டு அடையாள எண்: 1651541)
வருகையாளர் எண்ணிக்கை : 257
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam