சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கடந்த 24 மணி நேரத்தில் 68,584 பேர் குணமடைந்த நிலையில், குணமடைதல்களில் புதிய சிகரத்தை இந்தியா எட்டியது
இடுகை இடப்பட்ட நாள்:
03 SEP 2020 3:00PM by PIB Chennai
ஒரே நாளில் 11.7 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா வைரஸ் பரிசோதனைகள் என்னும் சாதனையைத் தொடர்ந்து, இன்னொரு சிகரத்தை இந்தியா தற்போது எட்டிப் பிடித்துள்ளது.
அதாவது, ஒரு நாளில் குணமடைபவர்களின் எண்ணிக்கையில் இது வரை இல்லாத அளவில், கடந்த 24 மணி நேரத்தில் 68,584 பேர் இந்தியாவில் கொவிட்-19-இல் இருந்து குணமடைந்துள்ளனர்.
இதன் மூலம், இது வரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 30 லட்சத்தை எட்டியுள்ளது (2,970,492). மேலும், இந்தியாவின் குணமடைதல் விகிதம் 77 சதவீதத்தை தாண்டியுள்ளது.
தற்போதைய பாதிப்புகளை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3.6 மடங்கு அதிகமாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 11.7 லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் (11,72179) செய்யப்பட்டுள்ளன. இந்த சாதனையின் மூலம், ஒட்டுமொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 4.5 கோடியை கடந்துள்ளது (4,55,09,380).
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1650970
****
(வெளியீட்டு அடையாள எண்: 1651032)
வருகையாளர் எண்ணிக்கை : 317
இந்த வெளியீட்டை படிக்க:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu