பிரதமர் அலுவலகம்
அரசுத் துறைகளில் மனிதவள மேம்பாட்டை கர்மயோகி இயக்கம் பெரிய அளவில் மேம்படுத்தும்: பிரதமர்
प्रविष्टि तिथि:
02 SEP 2020 7:48PM by PIB Chennai
அரசு ஊழியர்களுக்கான தேசிய திறன் கட்டமைத்தல் திட்டமான கர்மயோகி இயக்கம், அரசுத் துறைகளில் மனிதவள மேம்பாட்டை பெரிய அளவில் மேம்படுத்தும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கூறினார்.
பிரதமரின் தலைமையிலான மத்திய அமைச்சரவை இந்த இயக்கத்துக்கு இன்று ஒப்புதல் அளித்தது. இதைக் குறித்து சுட்டுரைகளை வெளியிட்டுள்ள பிரதமர், அரசு ஊழியர்களின் திறன்களை மேம்படுத்த நவீன உள்கட்டமைப்பு பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
"வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் அரசு ஊழியர்களை இன்னும் படைப்பாற்றல் மிக்கவர்களாகவும், ஆக்கப்பூர்வமானவர்களாகவும் & புதுமைகளை புகுத்துபவர்களாகவும் ஆக்குவதே கர்மயோகி இயக்கத்தின் நோக்கமாகும்," என்று அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1650755
****
MBS/GB
(रिलीज़ आईडी: 1650771)
आगंतुक पटल : 300
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam