மத்திய அமைச்சரவை
நிலவியல் மற்றும் கனிம வளங்கள் துறையில் ஒத்துழைப்பு: இந்தியா - பின்லாந்து இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
02 SEP 2020 4:09PM by PIB Chennai
இந்திய நிலவியல் கணக்கெடுப்பு நிறுவனம் மற்றும் பின்லாந்து அரசின் நிலவியல் கணக்கெடுப்பு நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே, நிலவியல் மற்றும் கனிம வளங்கள் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நிலவியல் துறை, பயிற்சி, கனிம ஆய்வு, நில அதிர்வு மற்றும் நிலவியல் கணக்கெடுப்புகள் தொடர்பான பல்வேறு அம்சங்களில் இரு நிறுவனங்களுக்கும் இடையேயான ஒத்துழைப்பை உறுதிப்படுத்துவதற்கும், அறிவியல் இணைப்புகளை வலுப்படுத்துவதற்கும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.
விரிவான தகவல்களுக்கு - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1650631
(Release ID: 1650656)
Read this release in:
Punjabi
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam