பிரதமர் அலுவலகம்

லெபனான், பெய்ரூட் நகரில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடி விபத்து குறித்து பிரதமர் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 05 AUG 2020 9:30AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, லெபனான் நாட்டில் உள்ள பெய்ரூட் நகரில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடிவிபத்து குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

“பெய்ரூட் நகரில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடிவிபத்து சம்பவத்தில் உயிரிழப்பு மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டதை அறிந்து அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். உயிரிழந்தோரின்  குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களுடன் நமது பிரார்த்தனைகள் உடனிருக்கும்” என்று பிரதமர் கூறியுள்ளார்.

 

*****


(வெளியீட்டு அடையாள எண்: 1643466) வருகையாளர் எண்ணிக்கை : 188