பிரதமர் அலுவலகம்
நாளை நடைபெறவுள்ள ராமர் கோவில் பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்பு.
இடுகை இடப்பட்ட நாள்:
04 AUG 2020 6:36PM by PIB Chennai
நாளை அயோத்தியில் நடைபெறவுள்ள ராமர் கோவில் பூமி பூஜையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார்.
இந்த விழாவுக்கு முன்னர், பிரதமர் ஹனுமன்காரியை தரிசனம் செய்து பூஜையில் பங்கேற்பார். பின்னர் அவர் திரு. ராமர் பிறந்த ஜன்மபூமிக்கு பயணம் செய்வார். அங்கு அவர் 'பகவான் திரு ராம்லாலா விராஜ்மான்'ஐ தரிசனம் செய்து அங்கு நடைபெறவுள்ள பூஜையில் பங்கேற்பார். பின்னர் அவர் ஒரு பரிஜத் மரக்கன்றை நடுவார். பின்னர் பூமி பூஜையினை செய்வார்.
'திரு.ராமர் ஜன்மபூமி கோவில்' அடிக்கல் நடப்பட்டதைக் குறிக்கும் வகையில் பிரதமர் கல்வெட்டைத் திறந்து வைப்பார். மேலும் இது குறித்த நினைவு தபால் தலையையும் அவர் வெளியிடுவார்.
****
(வெளியீட்டு அடையாள எண்: 1643364)
வருகையாளர் எண்ணிக்கை : 332
இந்த வெளியீட்டை படிக்க:
Marathi
,
Kannada
,
English
,
Urdu
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam