சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இந்தியாவில் கொவிட்-19 தொற்று நோயாளிகளின் இறப்பு விகிதம் ஏப்ரல் மாதத்திலிருந்து மிகக் குறைந்த அளவான 2.23 சதவீதத்தை அடைந்துள்ளது

தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தை நெருங்குகிறது

கடந்த 24 மணி நேரத்தில் 35,000க்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்துள்ளனர்

Posted On: 29 JUL 2020 3:37PM by PIB Chennai

மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் ஒருங்கிணைந்து  செயல்படுத்திய “பரிசோதனை, தடம் அறிதல் மற்றும் சிகிச்சை” என்ற உத்தியாலும், தொடர் நடவடிக்கைகளாலும், கொவிட்-19 தொற்று நோயாளிகளின் இறப்பு விகிதம் குறைவான அளவிலேயே உள்ளது. இந்தத் தொற்றினால் உயிரிழக்கும் விகிதம், உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது இ்ந்தியாவில் குறைந்த அளவிலேயே உள்ளது.

கொவிட்-19 தொற்று நோயாளிகளின் இறப்பு விகிதம் ஏப்ரல் மாதம் முதல், குறைந்த அளவிலேயே உள்ளது. இது தற்போது 2.23 சதவீதமாக உள்ளது

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தை நெருங்குவது குறிப்பிடத்தக்கது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 35,286 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்களில் எண்ணிக்கை மொத்தம் 9,88,029 ஆகும். குணமடையும் விகிதமானது 64.51 விழுக்காட்டை எட்டியுள்ளது.

தொடர்ந்து ஆறாவது நாளாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30,000-க்கும் கூடுதலாக உள்ளது.

கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட 5,09,447 பேர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்.  இந்த எண்ணிக்கையை விட, 4,78,582 பேர் குணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

*****

 



(Release ID: 1642036) Visitor Counter : 189