பிரதமர் அலுவலகம்
ஆச்சார்யா மஹாபிராக்யாவின் நூறாவது பிறந்தநாள் விழாவில் பிரதமர் ஆற்றிய உரை
இடுகை இடப்பட்ட நாள்:
19 JUN 2020 11:34AM by PIB Chennai
வணக்கம்!
தீரபந்தி மஹாசபாவின் தலைவர் ஆச்சாரியா திரு மஹாஷ்ரமன் அவர்களே, திரு சுரேஷ் சந்திர கோயல் அவர்களே, சிறப்பு விருந்தினர்களே மற்றும் தொழில்நுட்பம் மூலம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நண்பர்களே!
ஞானி ஆச்சாரியா திரு மஹாபிராக்யா அவர்களின் நூறாவது பிறந்தநாளின் புனிதமான தருணத்தில் நாம் அனைவரும் இணைந்திருப்பது நமக்குப் பெருமையான விஷயம் ஆகும். நீங்கள், நான் ஏன் ஒவ்வொருவருமே அவரது ஆசிகளை உணர முடியும். ஞானி ஆச்சாரியா திரு மஹாபிராக்யா அவர்களுக்கு எனது புகழஞ்சலியைச் செலுத்துகிறேன் மற்றும் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆச்சாரியா திரு மஹாஷ்ரமன் அவர்களுக்கு எனது சிறப்பு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா வைரஸ் பெருந்தொற்றுப் பரவலால் ஏற்பட்டுள்ள இந்தச் சவாலான சூழலிலும்கூட தொழில்நுட்பம் மூலம் அவர் இந்த நிகழ்ச்சியை திறம்பட ஏற்பாடு செய்துள்ளார்.
நண்பர்களே,
உங்களில் பலருக்கும் ஆச்சாரியா ஸ்ரீமஹாபிராக்யா அவர்களைச் சந்திக்கும் பாக்கியம் கிடைத்திருக்கக் கூடும். அந்தத் தருணத்தில் நீங்கள் அவரின் ஆன்மீக ஆற்றலை அனுபவித்து இருப்பீர்கள். நான் ஏன் இதைக் கூறுகிறேன் என்றால் எனது வாழ்நாள் முழுவதும் நான் தொடர்ச்சியாக ஆச்சாரியாவின் அன்பையும் ஆசிகளையும் பெற்று வந்திருக்கிறேன்.
எனக்கு ஞாபகம் இருக்கிறது, நான் குஜராத்தின் முதலமைச்சராக இருந்த போது, அந்தச் சமயத்தில் அவர் குஜராத்திதற்கு வருகை புரிந்து இருந்தார். அவரது அகிம்சை பயணத்திலும் மனித குலத்துக்கான சேவையில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது ”தீரபந்த் எனது சமயப் பிரிவாக மாற வேண்டும் என்று விரும்புகிறேன்” என நான் அவரிடம் கூறி இருந்தேன். ஆச்சாரியா அவர்களின் அருளாசியால் தீரபந்த் என்னுடைய சமயப்பிரிவாக ஆனது. நானும் ஆச்சாரியா அவர்களைப் பின்பற்றுபவனாக மாறினேன்.
நண்பர்களே,
அவரது பிரசன்னத்தில், அவரைப் போன்ற யுகரிஷியின் வாழ்க்கையில் அவருக்கு என்று எதுவும் இல்லை என்பதை நான் எப்போதும் உணர்ந்து இருக்றேன். அவரது வாழ்க்கை, அவரது சிந்தனை, அவரது எண்ணம் மற்றும் அனைத்துமே சமூகத்துக்கும், ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் மட்டுமேயானதாக இருக்கிறது.
ஆச்சாரியா மஹாபிராக்யா அவர்கள், ”எனக்கு, என்னுடைய என்பதைத் தாண்டி நாம் பார்க்க முயன்றால், அனைத்துமே நம்முடையது ஆகும் என்று கூறுவார்கள். அவரது மந்திரமும் தத்துவமும் அவரது வாழ்க்கையிலேயே தெளிவாகப் புலப்படும். தனது வாழ்வில் அவர் எதையும் வைத்திருக்கவில்லை என்பதை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம். ஆனால் ஒவ்வொருவருமே அவருக்குச் சொந்தம் என்றும் புரிந்து கொண்டுள்ளோம். அவரது வாழ்வில் எந்த ஒன்றையும் “பற்றி” இருக்கும் விருப்பம் இல்லை. ஆனால் ஒவ்வொரு நபருக்கான “அன்பு” மட்டுமே இருந்தது.
நண்பர்களே,
வாழ்க்கையை வாழ்வதற்கான தத்துவத்தை நாம் எளிதில் கண்டடடைய முடியும். ஆனால் இந்த விதமாக வாழ்க்கையை ஒருவர் வாழ்வது என்பது எளிதில் முடியக் கூடியது அல்ல. வாழ்வில் அத்தகைய நிலைக்கு வரவேண்டுமென்றால், ஒருவர் சுயநலம் இல்லாமல் சமூகத்துக்காக கடுமையாக பணியாற்ற வேண்டும். இது சாதாரணமான காரியம் அல்ல. “அசாதாரணமானது” என்பதை சித்தரிப்பது என்பது அசாதாரணமான ஆளுமைதான். அதனால்தான் ராஷ்ட்ரகவி ராம்தாரி சிங் திங்கர் கூறுவார், ”ஆச்சாரியா மஹாபிராக்யா அவர்கள் நவீன யுகத்தின் விவேகானந்தர்”. அதேபோன்று திகம்பர மரபின் மாபெரும் ஞானியான ஆச்சாரியா வித்யானந்தா மஹாபிராக்யா அவர்களை டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுடன் ஒப்பிடுவார். ஆச்சாரியா மஹாபிராக்யாவின் இலக்கியப் படைப்புகள் ஈடு இணையற்றவை ஆகும்.
மிகப்பெரும் இலக்கிய அறிஞரும் சிறந்த அறிவாளியுமாகிய நமது பெருமதிப்புக்குரிய அடல் அவர்கள், ”ஆச்சாரியா மஹாபிராக்யா அவர்களின் இலக்கியத்துக்கும் அவரது இலக்கிய மேதமைக்கும் அவரது அறிவு மற்றும் சொற்களுக்கும் நான் மிகப் பெரும் ரசிகன்” என்று கூறுவார். பேச்சு. அவரது மயக்கும் குரல் வளம் மற்றும் வார்த்தைகளைத் தேர்ந்தெடுப்பதில் சமநிலை ஆகியவை எல்லாம் அவருக்கு இறைவனின் கொடை மற்றும் ஆசிகள் ஆகும்.
நண்பர்களே,
ஆச்சாரியா ஸ்ரீ அவர்களின் இலக்கியத்தை நீங்கள் படித்திருந்து அவருடைய சொற்களை நினைவு கூர்ந்தால் அவருடைய அறிவு எவ்வளவு ஆழமானது என்பதையும் பல்வேறு சிறப்பான ஆளுமைகளின் பிரதிபலிப்பை அவர் எவ்வாறு சித்திரித்துள்ளார் என்பதையும் நீங்கள் உணரக்கூடும். ஆன்மீக விஷயங்கள் குறித்து அவர் ஆழமாக சிந்தித்து எழுதி உள்ளதோடு தத்துவம், அரசியல், உளவியல் மற்றும் பொருளாதாரம் போன்ற விஷயங்களையும் அவர் எழுதி உள்ளார். சமஸ்கிருதம், இந்தி, குஜராத்தி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் மஹாபிராக்யா 300க்கும் அதிகமான நூல்களை எழுதி உள்ளார். குடும்பம் மற்றும் தேசம் என்ற அவரது புத்தகம் உங்களுக்கு நினைவில் வரக்கூடும். இந்தப் புத்தகத்தை மஹாபிராக்யா அவர்கள் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களுடன் இணைந்து எழுதி உள்ளார். இந்தப் புத்தகத்தில் இந்த இரண்டு சிறந்த ஆளுமைகளும் ஒரு குடும்பம் எவ்வாறு மகிழ்ச்சியான குடும்பமாக மாறுவது, ஒரு மகிழ்ச்சியான குடும்பம் ஒரு வளமான தேசத்தை எப்படிக் கட்டமைப்பது என்பது குறித்தும் தங்களது தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்தியுள்ளனர்.
நான் முதலமைச்சரான பிறகு குஜராத்துக்கு டாக்டர் கலாம் வருகை புரிந்த நாளை ஞாபகத்தில் வைத்துள்ளேன். அந்த நாளில் அவருடன் சேர்ந்து ஆச்சாரியா அவர்களை சென்று பார்த்தோம். ஒரே நேரத்தில் இரண்டு பெரிய மனிதர்களுடன் இருக்க நேர்ந்தது என்னுடைய அதிர்ஷ்டம்தான். அந்த இருவருடைய இருப்பிலும் ஒரு ஞானி எவ்வாறு அறிவியல் தொலைநோக்குப் பார்வையை பெற்றிருக்க முடியும் என்பதையும் ஒரு விஞ்ஞானி ஒரு ஞானியை எப்படி விரும்புவார் என்பதையும் அனுபவித்துப் பார்த்துள்ளேன்.
அவருடைய வாழ்க்கையில் ஒரே ஒரு நோக்கம்தான் இருந்தது – நடந்து செல், பெற்றுக்கொள் மற்றும் திரும்பக்கொடு – என்று மஹாபிராக்யா அவர்களைப் பற்றி டாக்டர் கலாம் எப்போதும் சொல்வார். அதாவது சலிப்பில்லாமல் பயணம் மேற்கொள்ளுதல், அறிவைப் பெறுதல், வாழ்க்கையில் எது இருந்தாலும் அதை சமுதாயத்திற்காக வழங்குதல் என்பதுதான் இதன் அர்த்தமாகும்.
நண்பர்களே,
மஹாபிராக்யா அவர்கள் தனது வாழ்நாளில் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்துள்ளார். அவரது இறுதி காலத்திலும் கூட அகிம்சைக்கான பயணத்தில்தான் அவர் இருந்தார். ”ஆன்மா தான் எனது கடவுள், தியாகம்தான் எனது பிரார்த்தனை, நட்புதான் எனது பக்தி, சமரசம்தான் எனது வலிமை மற்றும் அகிம்சை தான் எனது மதம்” என்று அவர் கூறுவார்.
அவர் இதே விதமான வாழ்க்கை முறையில் தான் வாழ்ந்தார், இதையே லட்சக்கணக்கான மக்களுக்கும் கற்பித்தார். யோகாசனம் மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு மனம் அழுத்தம் இல்லாத வாழ்க்கைக் கலையை கற்றுத் தந்தார். சர்வதேச யோகா தினம் அடுத்து வரும் நாளில் கொண்டாடப்பட இருக்கிறது என்பது ஒரு ஆச்சரியமான தற்செயலான இணைப்பாக இருக்கிறது. நாம் அனைவரும் மஹாபிராக்யா அவர்களின் கனவான மகிழ்ச்சியான குடும்பம் மற்றும் வளமான தேசம் என்பதை நிஜமாக்குவதற்கும் அவருடைய சிந்தனைகளை சமூகத்திற்கு எடுத்துச் சொல்வதற்கும் இது ஒரு வாய்ப்பாக அமைகிறது.
நண்பர்களே,
ஆச்சாரியா மஹாபிராக்யா அவர்கள் நமக்கு ”ஆரோக்கியமான நபர், ஆரோக்கியமான சமுதாயம் மற்றும் ஆரோக்கியமான பொருளாதாரம்” என்ற மற்றொரு மந்திரத்தையும் அளித்துள்ளார். இன்றைய சூழலில் அவரது மந்திரம் நம் அனைவருக்கும் மிகப் பெரிய உந்துதலாக அமைகிறது. இன்று நமது நாடு இந்த மந்திரத்துடனும் சுய உறுதியுடனும் முன்னேற்றத்தை நோக்கி நகர்கிறது.
நமது ஞானிகளும் சாதுக்களும் தெரிவித்துள்ள குறிக்கோள் சமுதாயம் மற்றும் குறிக்கோள் தேசம் என்ற கருத்தாக்கத்தை நமது நாடு விரைவில் அடையும் என்று நான் நம்புகிறேன். நீங்கள் அனைவரும் அந்தக் கனவை நிஜமாக்க வேண்டும். நீங்கள் அனைவரும் ஆரோக்கியத்துடனும் பாதுகாப்புடனும் இருங்கள். அதே போன்று ஞானி பிரவார் ஆச்சாரியா ஸ்ரீ மஹாபிராக்யா அவர்களின் போதனைகளை புதிய தலைமுறையினரிடம் நீங்கள் கொண்டு செல்லுங்கள். உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள், மிக்க நன்றி!
*****
(வெளியீட்டு அடையாள எண்: 1637503)
வருகையாளர் எண்ணிக்கை : 244
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam