பிரதமர் அலுவலகம்

பிரதமர் சுயசார்பு இந்தியா மென்பொருள் செயலி (app) புதுமை சவாலில் பங்கேற்க தொழில்நுட்பத் துறையினரை வலியுறுத்தினார்.

Posted On: 04 JUL 2020 5:20PM by PIB Chennai

சுயசார்பு இந்தியா மென்பொருள் (app) கண்டுபிடிப்பு சவாலில் தொழில்நுட்பத் துறையினர் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

 

லிங்கிடு இன்னில் (Linkedin) வெளியிடப்பட்ட ஒரு இடுகையில், இந்தியாவின் துடிப்பான தொழில்நுட்பம் மற்றும் வளர்ந்து வரும் சுற்றுச்சூழல் அமைப்பைப் பற்றி பிரதமர் குறிப்பிட்டுள்ளதுடன், பல்வேறு துறையில் தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்குவதில் இளைஞர்கள் எவ்வாறு சிறந்து விளங்குகின்றனர் என்பதையும் சுட்டிக் காட்டினார். உள்நாட்டு மென்பொருள்களை உருவாக்கி ஊக்குவிக்கவும், புதுமைப்படுத்தவும், தொடக்க மற்றும் தொழில்நுட்பச் சுற்றுச்சூழல் அமைப்புகள் நிறைய ஆர்வம் காட்டுவதுடன், சுயசார்பு  இந்தியாவை உருவாக்குவதற்கு நாடு செயல்பட்டு வரும் அதே வேளையில், நமது சந்தையை திருப்திப்படுத்துவதோடு, சரியான திசையில் வேகமாக, அதே சமயம் உலகத்துடன் போட்டியிடக்கூடிய மென்பொருள்களை (app) உருவாக்க இது ஒரு நல்ல வாய்ப்பாகும் என்று அவர் கூறினார்.

 

இந்த நோக்கத்தை மனதில் கொண்டு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அடல் புதுமை திட்டத்துடன் இணைந்து சுயசார்பு இந்தியா மென்பொருள் புதிய கண்டுபிடிப்பு சவாலை இரண்டு தடங்களில் இயக்கும்: தற்போதுள்ள மென்பொருள்களை மேம்படுத்துதல் மற்றும் புதிய மென்பொருள்ளை உருவாக்குதல். இந்த சவாலை முழுமையடையச் செய்ய அரசாங்கமும் தொழில்நுட்பத் துறை வல்லுநர்களும் இணைந்து நடத்துவார்கள்.

 

ணைய வழிக் கற்றல் (e-learning), வீட்டிலிருந்து வேலை, விளையாட்டு, வணிகம், பொழுதுபோக்கு, அலுவலகப் பயன்பாடுகள் மற்றும் சமூக வலைத்தளம் ஆகிய பிரிவுகளில் இருக்கும் மென்பொருள்கள் மற்றும் அதற்கான தளங்களை மேம்படுத்துவதற்காக, அரசாங்கம் வழிகாட்டுவதுடன் தனது ஆதரவையும் வழங்கும். லீடர்-போர்டுக்கான நல்ல தரமான மென்பொருள்களை அடையாளம் காண ட்ராக் -01 மிஷன் முறையில் செயல்பட்டு அந்தப் பணியானது ஒரு மாதத்தில் முடிக்கப்படும். புதிய மென்பொருகள் மற்றும் அதற்கான தளங்களை உருவாக்குவதற்கு, ட்ராக் -02 வின் முன்முயற்சி இந்தியாவில் புதிய சாம்பியன்களை உருவாக்க உதவும் வகையில் எண்ணங்களுக்கு உருக்கொடுத்தல் (ideation), வளர்ச்சி (incubation), முன்மாதிரி (Prototyping) மற்றும் சந்தை அணுகலுடன் இணைந்து செயல்பாடு ஆகியவற்றை வழங்க உதவும்     .

 

இந்த சவாலின் விளைவாக, தற்போதுள்ள மென்பொருள்களின் குறிக்கோள்களை அடைவதற்கு சிறந்த தெரிவு நிலையையும் தெளிவையும் அளித்தல் மற்றும் தொழில்நுட்பப் புதிர்களுக்கான தீர்வுகளைக் கண்டறிய உதவும் தொழில்நுட்பத் தயாரிப்புகளை உருவாக்க வழிகாட்டுதல் வழங்கப்படுவதுடன், இந்த முழு செயல்முறையின் போதும், தொழில்நுட்ப ஆதரவும் வழிகாட்டுதலும் வழங்கப்படும் என்று பிரதமர் தெரிவித்தார்.

 

பாரம்பரிய இந்திய விளையாட்டுகளை மிகவும் பிரபலமாக்க தொழில்நுட்பம் உதவ முடியுமா அல்லது மக்களுக்கு மறுவாழ்வு அளிக்க அல்லது ஆலோசனைகளைப் பெற உதவும் பயன்பாடுகளை (apps) உருவாக்க முடியுமா என்றால் அல்லது அந்தந்த வயதினருக்கு ஏற்ற கற்றல், கேமிங் போன்றவற்றுக்கு சரியான அணுகல் உள்ள மென்பொருளை (Apps) உருவாக்க முடியுமா என்று பிரதமர் கேட்டறிந்ததுடன் அது குறித்த தனது கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டு, இத்தகைய மென்பொருள்கள் (Apps) உருவாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். சுயசார்பு இந்தியா மென்பொருள் (App) சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில் தொழில்நுட்ப துறையினர் பங்கேற்று உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

 

*****


(Release ID: 1636524) Visitor Counter : 254