பிரதமர் அலுவலகம்

தர்ம சக்கர நாள் துவக்க நிகழ்ச்சியை ஒட்டி பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று காணொளி மூலம் உரையாற்றினார்

Posted On: 04 JUL 2020 10:17AM by PIB Chennai

தர்ம சக்கர நாள் துவக்க நிகழ்ச்சியை ஒட்டி பிரதமர்  திரு. நரேந்திர மோடி இன்று காணொளி மூலம் உரையாற்றினார். கலாச்சார அமைச்சகத்தின் ஆதரவுடன் சர்வதேச புத்திஸ்ட் பேரமைப்பு 4 ஜூலை 2020 அன்று அத பூர்ணிமா, தர்மசக்கரம் தினமாக கொண்டாடுகிறது இந்த நாளில் தான் புத்தபிரான் தனது முதல் 5 சீடர்களுக்கு ர்சிபட்னாவில் (Rsipatna) மான் பூங்காவில் முதல் சொற்பொழிவாற்றினார். உத்திரப்பிரதேசம் வாரணாசிக்கு அருகே சாரநாத் என்று தற்போது வழங்கப்படும் இடம்தான் ர்சிபட்னா தர்ம சக்கர பர்வதனா அல்லது தர்ம சக்கரம் சுழல்கிறது என்ற நாளாக இந்த நாள் உலகம் முழுவதும் உள்ள புத்தமதத்தைச் சேர்ந்தவர்களால் கொண்டாடப்படுகிறது.

 

குருபூர்ணிமா என்றும் அழைக்கப்படும் அஷத பூர்ணிமாவை ட்டி பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார் புத்தபிரானையும் போற்றிப் புகழ்ந்துள்ளார். மங்கோலிய கஞ்சூரின் நகல்கள், மங்கோலிய அரசாங்கத்திடம் அளிக்கப்படுவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்

 

புத்தபிரானின் அறிவுரைகள் குறித்தும் பிரதமர் பேசினா.ர் பல சமுதாயங்களும், தேசங்களும் நலமுடன் வாழ்வதற்கான வழியை காட்டும் பத்தபிரானின் எட்டு வழிப்பாதை குறித்தும் பிரதமர் கூறினார். மக்கள், பெண்கள், ஏழைகள் ஆகியோருக்கும் , , அகிம்சைக்கும் மரியாதை அளிக்க வேண்டும் என்று புத்த மதம் போதிக்கிறது. இந்தக் குறிக்கோள் தொடர்ந்து நீடிக்க இந்த போதனைகள் வழிமுறைகளாக உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

நம்பிக்கை, நோக்கம் ஆகியவை குறித்து புத்தபிரான் பேசியிருக்கிறார். இரண்டுக்கும் இடையே வலுவான தொடர்பு இருப்பதையும் அவர் கண்டிருக்கிறார் என்று பிரதமர் குறிப்பிட்டார். இருபத்தோராம் நூற்றாண்டு குறித்து தாம் நம்பிக்கையுடன் இருப்பதாகவும், இந்த நம்பிக்கை தற்போதைய இளைஞர்களிடம் இருந்து கிடைப்பதாகவும் அவர் கூறினார் பொதுவான பிரச்சினைகளுக்குத் திறமையான இளைஞர்கள் தீர்வு காணும் சுற்றுச்சூழல் கொண்ட ஏராளமான துவக்கநிலை நிறுவனங்கள் கொண்டதாக இந்தியா இருப்பதன் அவசியத்தை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்

 

தற்போது உலகம் முழுவதும் அசாதாரணமான சவால்களுக்கு எதிராகப் போராடி வருகிறது என்று கூறிய பிரதமர் இவற்றுக்காக நிரந்தரத் தீர்வுகளை புத்தரின் போதனைகளில் இருந்தும் பெறலாம் என்று கூறினார் பாரம்பரிய தங்களுடன் அதிகளவிலான மக்களை இணைப்பது, இந்த தங்களுக்கு இடையிலான தொடர்பை மேம்படுத்துவது ஆகியவற்றின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். உத்திரப்பிரதேசத்தில் உள்ள குஷிநகர் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது பற்றி குறிப்பிட்ட பிரதமர், இது யாத்திரிகர்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் பயணத்தை வசதியாக்க உதவும் என்றும் இந்த மண்டலத்தில் பொருளாதாரத்தையும் ஊக்குவிக்கும் என்றும் கூறினார்.

***(Release ID: 1636387) Visitor Counter : 120