சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட் – 19 கூடுதல் விவரங்கள்


நோய் தொற்றிலிருந்து மீண்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை விஞ்சுகின்றனர்.

தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குமான எண்ணிக்கை வேறுபாடு ஒரு லட்சத்தைக் கடந்தது.

தொற்றிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 58.56 சதவீதமாக அதிகரிப்பு.

நாள் தோறும் நோய் தொற்றுக்காக நடத்தப்படும் பரிசோதனைகள் 2.3 லட்சத்தை கடந்தன.

Posted On: 28 JUN 2020 12:27PM by PIB Chennai

கோவிட்-19 நோய்த் தொற்றுத் தடுப்பு, கட்டுப்பாடு மற்றும் மேலாண்மைக்கு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து இந்திய அரசு முன் கூட்டியே எடுத்த தரமான செயலில் உள்ள நடவடிக்கைகள் ஊக்கமளிக்கும் முடிவுகளைக் காட்டுகின்றன.

 

நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் மற்றும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடையிலான இடைவெளி 1,00,000 ஐ தாண்டியுள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை விட 106,661 ஐ தாண்டி விட்டன. இவ்வாறு, இதுவரை மொத்தம் 3,09,712 நோயாளிகள் கோவிட் – 19இல் இருந்து குணமடைந்துள்ளனர். கோவிட்-19 நோயாளிகளில் மீட்பு விகிதம் 58.56 சதவீதம் ஆகும். கடந்த 24 மணி நேரத்தில், மொத்தம் 13,832 கோவிட்-19 நோயாளிகள் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.

 

தற்போது, தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ​​2,03,051 ஆகும். இவர்கள் அனைவரும் மருத்துவ மேற்பார்வையில் உள்ளனர்.

 

பரிசோதனை வசதிகளை மேம்படுத்துவதற்கான சான்றாக, இந்தியாவில் இப்போது கோவிட்-19 ஐ கண்டறிய 1036 ஆய்வகங்கள் உள்ளன. இதில் அரசுத் துறையில் 749 மற்றும் 287 தனியார் ஆய்வகங்கள் உள்ளன.

அதன் விவரங்கள் கீழே உள்ள:

  • நிகழ்நேர RT PCR அடிப்படையிலான பரிசோதனை ஆய்வகங்கள்: 567 (அரசு: 362 + தனியார்: 205)
  • ட்ரூநாட் (TrueNat) அடிப்படையிலான பரிசோதனை ஆய்வகங்கள்: 382 (அரசு: 355 + தனியார்: 27)
  • CBNAAT அடிப்படையிலான பரிசோதனை ஆய்வகங்கள்: 87 (அரசு: 32 + தனியார்: 55)

தினசரி 2,00,000க்கும் மேற்பட்ட மாதிரிகள் சோதிக்கப்படுகின்றன. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் சோதிக்கப்பட்ட மாதிரிகள் 2,31,095 ஆக அதிகரித்துள்ளன. சோதனை செய்யப்பட்ட மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை, இன்றைய தேதியின்படி, 82,27,802 ஆகும்.

ஜூன் 28, 2020 நிலவரப்படி, 1055 கோவிட் மருத்துவமனைகளில் அர்பணிப்புடன் 1,57,529 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், 23,168 தீவிர சிகிச்சைப் பிரிவுப் படுக்கைகள் மற்றும் 78,060 ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கைகள் என கோவிட் சுகாதாரம் தொடர்பான உள்கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 1,40,099 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், 11,508 தீவிர சிகிச்சைப் பிரிவுப் படுக்கைகள் மற்றும் 51,371 ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கைகள் கொண்ட 2,400 கோவிட் சுகாதார மையங்களும் அர்ப்பணிப்புடன் செயல்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், நாட்டில் கோவிட்-19 ஐ எதிர்த்து போராட 8,34,128 படுக்கைகள் கொண்ட 9,519 கோவிட் பராமரிப்பு மையங்களும் தயார் நிலையில் உள்ளன. மத்திய அரசு 187.43 லட்சம் N95 முகக்கவசங்கள் மற்றும் 116.99 லட்சம் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை (பிபிஇ) மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் / மத்திய அரசு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது.

 

****


(Release ID: 1634962) Visitor Counter : 286