சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 பற்றிய அண்மைச் செய்திகள்.


கொவிட் நோயிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை சிகிச்சை பெற்று வருபவர்களை விட 50,000-க்கும் அதிகமானது.

குணமடைந்தோர் விகிதம் 55.49 சதவீதமாக உயர்வு.

Posted On: 21 JUN 2020 11:32AM by PIB Chennai

கொவிட்-19 நோயிலிருந்து குணமடைந்து வரும் நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து  அதிகரித்து வருகிறது. இதுவரை , மொத்தம் 2,27,755 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், மொத்தம் 13,925  கொவிட்-19 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.. கொவிட்-19 நோயாளிகளில், குணமடைந்தோர் விகிதம் 55.49 சதவீதமாக அதிகரித்துள்ளது.

தற்போது, 1,69,,451 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் தீவிர மருத்துவக் கண்காணிப்பின் கீழ் உள்ளனர்.

இன்று, குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை, சிகிச்சை பெற்று வருபவர்களை விட 58,305 அதிகரித்துள்ளது.

பரிசோதனைக் கூடங்கள், சோதனைக் கட்டமைப்புகளை விரிவுபடுத்தும் ஒருங்கிணைந்த முயற்சியின் பலனாக, அரசு பரிசோதனைக்கூடங்களின் எண்ணிக்கை 722 ஆக அதிகரித்துள்ளது. தனியார் ஆய்வகங்களின் எண்ணிக்கை 259 ஆக உயர்ந்துள்ளது. ( மொத்தம் 981).

அவற்றின் விவரம் வருமாறு;

ரியல் டைம் ஆர்டி பிசிஆர் அடிப்படையிலான ஆய்வகங்கள்; 547 ( அரசு; 354+ தனியார்; 193)

ட்ரூநேட் அடிப்படையிலான சோதனைக் கூடங்கள்; 358( அரசு; 341+ தனியார் 17)

சிபிஎன்ஏஏடி அடிப்படையிலான சோதனைக் கூடங்கள் ; 76( அரசு;27+ தனியார் ;49)

ஒவ்வொரு நாளும் சோதிக்கப்படும் மாதிரிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில், 1,90,730 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. மொத்தம் சோதிக்கப்பட்ட மாதிரிகள் இதுவரை 68,07,226.

கொவிட்-19 தொடர்பான தொழில்நுட்ப விஷயங்கள், விதிமுறை  வழிகாட்டுதல்கள், அறிவுரைகள் அடங்கிய அனைத்து அதிகாரபூர்வ, அண்மைத் தகவலுக்கு அவ்வப்போது https://www.mohfw.gov.in/ மற்றும் @MoHFW_INDIA தளங்களை அணுகவும்.

தொழில்நுட்பம் தொடர்பான கேள்விகளை technicalquery.covid19[at]gov[dot]in என்ற தளத்துக்கு அனுப்பலாம். மற்ற கேள்விகளுக்கு ncov2019[at]gov[dot]in மற்றும் @CovidIndiaSeva என்ற தளங்களை அணுகலாம்.

கொவிட்-19 பற்றிய தகவல் ஏதேனும் தேவையென்றால், தொடர்பு கொள்ள வேண்டிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தின் உதவிமைய எண்கள்;+91-11-23978046 or 1075 ( கட்டணமில்லா தொலைபேசி). மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் உதவிமைய எண்கள் பட்டியல் https://www.mohfw.gov.in/pdf/coronvavirushelplinenumber.pdf என்ற தளங்களில் கிடைக்கும்

 

****


 



(Release ID: 1633118) Visitor Counter : 218