சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட்-19 அண்மைத் தகவல்கள்
குணமடையும் விகிதம் 52.8 விழுக்காடாக அதிகரிப்பு
Posted On:
17 JUN 2020 2:06PM by PIB Chennai
கடந்த 24 மணி நேரத்தில், 6922 கொவிட்-19 நோயாளிகள் குணமாகியுள்ளனர். இதுவரை, கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட மொத்தம் 1,86,934 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 52.8 விழுக்காடாக அதிகரித்துள்ளது. தற்போது 1,55,227 நோயாளிகள் மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறார்கள்.
அரசு பரிசோதனைச் சாலைகள் 674 ஆகவும், தனியார் பரிசோதனைச் சாலைகள் 250 ஆகவும் (மொத்தம் 924) அதிகரித்துள்ளன.
நிகழ்நேர பிசிஆர் (Real Time – RT PCR) அடிப்படையிலான சோதனைச் சாலைகள் – 535 (அரசு : 347 + தனியார் : 188), ட்ரூனேட் (TrueNat) அடிப்படையிலானச் சோதனைச் சாலைகள் – 316 (அரசு : 302 + தனியார் : 14), CBNAAT அடிப்படையிலான சோதனைச் சாலைகள் – 73 (அரசு : 25 + தனியார் : 48) ஆகும்.
கடந்த 24 மணி நேரத்தில், 1,63,187 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 60,84,256 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
------
(Release ID: 1632056)
Visitor Counter : 180
Read this release in:
Bengali
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam