பிரதமர் அலுவலகம்

முதற்கட்ட ஊரடங்கிற்குப் பிந்தைய நிலைமை குறித்து முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை

உயிர் மற்றும் வாழ்வாதாரம் ஆகிய இரண்டு அம்சங்கள் குறித்தும் நாம் கவனம் செலுத்த வேண்டும்; சுகாதாரக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன், சோதனை மற்றும் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிவதோடு, பொருளாதார நடவடிக்கைகளையும் மேம்படுத்த வேண்டும்: பிரதமர்.

ஒவ்வொரு உயிரையும் பாதுகாக்க நாம் முயற்சி மேற்கொண்டுள்ளோம்; நாட்டில் குணமடைவோர் எண்ணிக்கை தற்போது 50சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது : பிரதமர்


கொரோனா வைரஸால் குறைந்த அளவில் உயிரிழப்பு ஏற்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது : பிரதமர்

சுயபாதுகாப்பு, குடும்பத்தினர் மற்றும் சமுதாயப் பாதுகாப்பு கருதி, முகக்கவசம் இன்றி வீட்டை விட்டு வெளியே வருவதைப் பற்றி யாரும் நினைத்துக் கூடப் பார்க்க வேண்டாம்: பிரதமர்


அண்மையில் மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக பொருளாதாரம் மேம்பட்டு வருவதைக் காண முடிகிறது, இது மேலும் முன்னோக்கிச் செல்ல நம்மை ஊக்குவிக்கும்: பிரதமர்


அந்தந்த மாநிலத்தின் கள நிலவரம் குறித்து முதலமைச்சர்கள் கருத்து தெரிவித்தனர், தற்போதைய சுகாதாரக் கட்டமைப்பு வசதிகள் மற்றும் அதனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குற

Posted On: 16 JUN 2020 5:35PM by PIB Chennai

முதற்கட்ட ஊரடங்கிற்குப் பிந்தைய நிலைமை மற்றும் கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்கொள்வதற்கான செயல் திட்டங்கள் குறித்து, பிரதமர் திரு.நரேந்திரமோடி, இன்று கானொளிக்காட்சி வாயிலாக மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.    மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நடத்தும் 6-வது ஆலோசனைக் கூட்டம் இதுவாகும்இதற்கு முன்பு மார்ச்20, ஏப்ரல் 2,  ஏப்ரல் 11, ஏப்ரல்27 மற்றும் மே-11 ஆகிய நாட்களில் பிரதமர் ஆலோசனை நடத்தியுள்ளார்.  

கொரொனாதொற்றைஎதிர்த்துப்போரிடஉரியநேரத்தில்முடிவுகள்

கொரோனா பெருந்தொற்றை ஒழிக்க உரிய நேரத்தில் தக்க முடிவுகளை மேற்கொண்டதன் காரணமாக, நாட்டில் நோய்த்தொற்று பரவுவது வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என பிரதமர் தெரிவித்தார்.   கடந்த காலத்தை திரும்பிப் பார்ப்போமானால்கூட்டாட்சித் தத்துவத்தை உலகிற்கு நாம் எடுத்துக்காட்டியிருக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்

ஒவ்வொரு உயிரையும் பாதுகாக்க முயற்சித்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்தற்போது அனைத்து வகையான போக்குவரத்தும் தொடங்கியுள்ள நிலையில், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் லட்சக்கணக்கானோர், தங்களது சொந்த கிராமங்களுக்குத் திரும்பியுள்ளனர்வெளிநாடுகளில் சிக்கித் தவித்த ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்இந்தியா அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இருந்தாலும்உலகின் பிறநாடுகளைப் போன்று உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடிய நிலையை கொரோனா வைரஸ் ஏற்படுத்தவில்லை.    இந்தியர்கள் கடைப்பிடிக்கும் கட்டுப்பாடுகளை உலகெங்கிலும் உள்ள சுகாதார நிபுணர்கள் பாராட்டுவதாகக் குறிப்பிட்ட அவர்நோய்த்தொற்றிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை தற்போது 50சதவீதத்தைத் தாண்டி விட்டதாகவும் கூறினார்.    மேலும், கொரோனாவால் குறைந்த அளவிலான உயிரிழப்பு ஏற்படும் நாடுகளில் ஒன்றாகத்தான் இந்தியா உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.    நாம் தொடர்ந்து கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வதோடு, விதிமுறைகளையும் முறையாகப் பின்பற்றினால், கொரோனா வைரலசால் மிகக் குறைந்த அளவிலேயே பாதிப்பு ஏற்படும் என்பது, நாம் அறிந்து கொண்ட பாடம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.   முகக்கவசங்கள் அணிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர்முகக்கவசம் அணியாமல் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.   ‘இரண்டு கஜ தூரம்இடைவெளி என்ற மந்திரத்தைப் பின்பற்றுவதோடு, சோப் மற்றும் சானிடைசர் பயன்படுத்தி கைகளை, அடிக்கடி கழுவ வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.    இந்தக் கட்டுப்பாடுகளில் எவ்விதக் குறைபாடு ஏற்பட்டாலும்அது, கொரோனாவுக்கு எதிரான நமது போராட்டத்தைப் பலவீனப்படுத்திவிடும் என்றும் அவர் எச்சரித்தார்.  

மேம்பட்டுவரும் பொருளாதாரம்

கடந்த சில வாரங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக, நமது பொருளாதாரம் மேம்பட்டு வருவதையும்,    முன்பு மிகக்குறைந்த அளவில் இருந்த மின்சாரப் பயன்பாடு தற்போது அதிகரித்து வருவதையும்மே மாதத்தில் உரவிற்பனை கணிசமாக அதிகரித்துள்ளதையும் கண்கூடாகக் காண முடிவதாகவும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.   கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், குறுவை சாகுபடிப் பரப்பு மற்றும்இரு சக்கர வாகன உற்பத்தி,கணிசமாக அதிகரித்திருப்பதும்சில்லரை வணிகத்தில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைஊரடங்கிற்கு முந்தைய நிலையை எட்டியிருப்பதுடன்மே மாதத்தில் சுங்கக் கட்டண வசூலும், ஏற்றுமதியும் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.   இது போன்ற சமிக்ஞைகள், நாம் தொடர்ந்து முன்னோக்கிச் செல்ல ஊக்கமளிக்கும்

சுயசார்பு இந்தியா திட்டத்தின் பலன்கள்

இன்றைய ஆலோசனையில் பங்கேற்ற மாநிலங்களில்சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ், வேளாண்மை, தோட்டக்கலை, மீன்வளம் மற்றும் குறு,சிறு, நடுத்தரத்தொழில் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருப்பது முக்கியமானது என்றும் பிரதமர் தெரிவித்தார்.   குறு,சிறு,நடுத்தரத்தொழில்துறையினருக்கு உரிய நேரத்தில் கடனுதவி வழங்கப்படுவது பற்றிக் குறிப்பிட்ட அவர்வங்கிகள் தொழிற்சாலைகளுக்கான கடனுதவி விரைவாக வழங்கினால்,   இந்தத் தொழில் நிறுவனங்கள் விரைவில் செயல்படத் தொடங்குவதோடு, வேலைவாய்ப்புகளையும் உறுதிசெய்யும் என்றும் சுட்டிக்காட்டினார்சிறுதொழில் நிறுவனங்களுக்கு உரிய வழிகாட்டுதல் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.   வர்த்தக மற்றும் தொழில்துறையின் மதிப்புச்சங்கிலி-க்கு ஊக்கமளிக்க, இணைந்து பாடுபடுவதன் அவசியத்தையும் பிரதமர் எடுத்துரைத்தார்.   மாநிலங்களில்குறிப்பிட்ட சில பொருளாதார நடவடிக்கைகள் வேகமெடுத்து, 24 மணி நேரம் பணியாற்றுவதோடு, சரக்குகளை ஏற்றிஇறக்குவதையும் விரைவுபடுத்தினால், அது பொருளாதார நடவடிக்கைகளுக்கு மேலும் ஊக்கமளிக்கும் என்றும் தெரிவித்தார்.     

விளைபொருள்களை விற்பனை செய்ய புதிய இடவசதி உட்பட, வேளாண் துறையில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் விவசாயிகளுக்கு உரிய பலனை ஏற்படுத்துவதோடுவருமானம் அதிகரிப்பது, பொருளாதாரத்தில் தேவையை அதிகரிக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்வட-கிழக்கு மற்றும் பழங்குடியினர் பகுதிகளில், விவசாயம் மற்றும் தோட்டக்கலைத்துறைகளில் புதியவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதுடன்இயற்கை விளைபொருள்கள், மூங்கில் பொருள்கள் மற்றும் இதர பழங்குடியின உற்பத்திப் பொருள்களுக்கு புதிய சந்தை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.   உள்ளூர் உற்பத்திப் பொருள்களுக்கு தொகுப்பு அடிப்படையிலான அணுகுமுறையைப் பின்பற்றுவதன் மூலம் மாநிலங்களும் பலன் அடையும் என்று குறிப்பிட்ட பிரதமர்அது போன்ற உற்பத்திப்பொருள்களைஒவ்வொரு வட்டார மற்றும் மாவட்ட அளவில் அடையாளம் காண்பதன் மூலம், அவற்றைப் பதப்படுத்திதிறமையான சந்தை வாய்ப்பை எட்ட முடியும் என்றும் தெரிவித்தார்.   சுயசார்பு இந்தியா திட்டத்தின் அறிவிப்புகள் மூலம் விரைவில் பலன் பெற ஏதுவாகஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.   

முதலமைச்சர்கள்பேச்சு

இரண்டு நாட்கள் நடைபெற உள்ள கலந்துரையாடல் கூட்டத்தின் முதல் நாளான இன்றுபஞ்சாப், அஸ்ஸாம், கேரளா, உத்தராகண்ட், ஜார்க்கண்ட், சட்டிஸ்கர், திரிபுரா, ஹிமாச்சலபிரதேசம், சண்டிகர், கோவா, மணிப்பூர், நாகாலாந்து, லடாக், புதுச்சேரி, அருணாச்சலபிரதேசம், மேகாலயா, மிசோரம், அந்தமான்-நிகோபார்தீவுகள், தாத்ராநாகர்ஹவேலி மற்றும் டாமன்டையூசிக்கிம் மற்றும் லட்சத்தீவுகள் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன்பிரதேசங்கள் பங்கேற்றன.  

இன்றைய கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர்கள்சவாலான நேரத்தில் பிரதமரின் தலைமைப்பண்பு குறித்தும், கொரோனா வைரசுக்கு எதிரான கூட்டுநடவடிக்கையில் நாட்டை ஒருங்கிணைத்துக் கொண்டு செல்வதற்கும் பாராட்டு தெரிவித்தனர்.    கொரோனா பாதிப்புகளை எதிர்கொள்ளஅந்தந்த மாநிலங்களில் உள்ள சுகாதாரக் கட்டமைப்பு வசதிகள் மற்றும் இதனை அதிகப்படுத்த மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர்கள் எடுத்துரைத்தனர்.   மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் விழிப்புணர்வு முகாம்கள்சொந்த ஊர் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான உதவிகள்ஆரோக்யசேது செயலியின் பயன்பாடு மற்றும் மாநிலங்களில் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கான செயல் திட்டங்களையும் அவர்கள் விரிவாக எடுத்துக் கூறினர்.

உயிர்மற்றும்வாழ்வாதாரம்ஆகியவற்றின்மீதுகவனம்

முதலமைச்சர்கள் தெரிவித்த கருத்துக்களுக்காக, அவர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.   ஒரு புறம் சுகாதாரக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, பரிசோதனைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்களைக் கண்டறிவதையும் அதிகப்படுத்துவதோடு, பொருளாதார நடவடிக்கைகளையும் அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.   தற்போதைய மற்றும் எதிர்காலத் தேவைகளைக் கருத்திற்கொண்டு முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.    

நோய்த்தொற்றின் அபாயம் இன்னும் குறையவில்லை என்பதை மனதிற்கொண்டு செயல்படுவதுடன்பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறும் தலைவர்களை அவர் கேட்டுக்கொண்டார்.  

கூட்டத்தில்பேசியமத்தியஉள்துறைஅமைச்சர்திரு.அமித்ஷா, கொரோனாபெருந்தொற்றுக்குஎதிராகஇதுவரைநாம்வெற்றிகரமாகபணியாற்றிவரும்போதிலும்இந்தப் பாதையில் நாம் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியிருப்பதாகவும் கூறினார்.   பிரதமர் தெரிவித்த யோசனைப்படி, அனைவரும் முகக்கவசம் அணிவதோடுஇரண்டு கஜ தூர இடைவெளியைப் பராமரிக்குமாறும் உள்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.  

முந்தைய ஆய்வுக்கூட்டங்கள்

கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகள் குறித்துஜுன் 13 அன்று மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் விரிவான ஆலோசனை நடத்தினார்.   தேசிய அளவிலான நிலவரம் குறித்தும்தொற்றுப்பரவல் அதிகரித்தால் அதனை எதிர்கொள்வதற்கான ஆயத்தநிலை குறித்தும் இந்தக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.  

நாட்டின் மொத்த பாதிப்பில் மூன்றில் இரண்டு பங்கு, பெருநகரங்களில் அதிக பாதிப்புகளைக் கொண்ட 5 மாநிலங்களில் தான் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.   தற்போது எதிர்கொள்ளும் சவால்கள், ,  குறிப்பாக பெருநகரங்களில் எழுந்துள்ள சவால்களைக் கருத்தில் கொண்டுபரிசோதனைகள் மற்றும் படுக்கை வசதிகளை அதிகரிப்பதன் மூலம்அன்றாடம் அதிகரித்து வரும் பாதிப்புகளைத் திறம்படக் கையாள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது

மாநரங்கள் மற்றும் மாவட்ட அளவில் தேவைப்படும் படுக்கை வசதிகள்/ தனிமைப்படுத்தப்பட்ட படுக்கை வசதிகள் தொடர்பாக, அதிகாரமளிக்கப்பட்ட குழு அளித்துள்ள பரிந்துரைகள் குறித்து ஆய்வு செய்த பிரதமர்மாநிலங்கள் / யூனியன்பிரதேச அரசுகளுடன் கலந்தாலோசித்து, அவசரகால செயல்திட்டத்தை வகுக்குமாறு மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளை அறிவுறுத்தினார்மேலும், பருவமழைக் காலம் தொடங்கியிருப்பதைக் கருத்தில் கொண்டு, அதற்கேற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்யுமாறும் சுகாதாரத்துறையை பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.  

*****(Release ID: 1631996) Visitor Counter : 238