வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

கோவிட்-19 முன்னிட்டு நகர்ப்புறப் போக்குவரத்து சேவைகளை வழங்குவதற்கு மாநிலங்கள்/ யூனியன்பிரதேசங்கள்/ நகரங்கள்/ மெட்ரோ ரயில் நிறுவனங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்

Posted On: 12 JUN 2020 11:44AM by PIB Chennai

மாநிலங்கள், யூனியன்பிரதேசங்கள், நகரங்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிறுவனங்களுக்கு, மத்திய வீட்டுவசதித்துறை மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் வழங்கியுள்ள அறிவுறுத்தலில், மும்முனை உத்திகள் பரிந்தரைக்கப்பட்டுள்ளன. இவற்றை ஒவ்வொருகட்டமாக [குறுகிய (6மாதங்களுக்குள்), நடுத்தரம் (ஓராண்டுக்குள்) மற்றும் நீண்டகாலம்(1 முதல் 3 ஆண்டுகள்) மேற்கொள்ளலாம். மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்தறை செயலாளர் திரு.துர்காசங்கர் மிஸ்ரா, அனுப்பியுள்ள ஆலோசனையில் கூறப்பட்டுள்ளதாவது:-

  1. பெரும்பாலான நகர்ப்புறப் பயணங்கள் 5 கி.மீ அளவுக்குள்வருவதால்,மோட்டார் அல்லாத போக்குவரத்தை(NMT) ஊக்குவித்து உயிரூட்ட வேண்டும். இதற்கு குறைந்த செலவு, குறைந்த மனிதவளம் தேவைப்படுவதாலும், எளிதாக மற்றும் விரைவில் அமல்படுத்தக்கூடிய தன்மை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த்தாக இருப்பதாலும்,  கோவிட்-19 நெருக்கடி நேரத்தில், மோட்டார் அல்லாத போக்குவரத்தை அமல்படுத்த சரியான வாய்ப்பு உருவாகியுள்ளது.

 

  1. பயணிகளின் நம்பிக்கையுடன் பொதுப்போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும். இதுதான் நகர்ப்புறங்களில் முதுகெலும்பாக உள்ளது. குறிப்பாக குறைந்த/நடுத்தரவருவாய்ப்பிரிவினரின் அன்றாட போக்குவரத்துத் தேவைகளை நிறைவேற்றுவதில் பொதுப்போக்குவரத்து சேவைகள் முக்கியமான பங்கு வகிக்கிறது. எனினும், இந்த நேரத்தில் பொதுப்போக்குவரத்து மூலம் தொற்று பரவலாம் என்பதால், முறையான சுகாதார மற்றும் கட்டுப்பாடு மற்றும் சமூக இடைவெளி நடவடிக்கைகள் மூலம் அது தடுக்கப்பட வேண்டும்.

 

  1. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தொழில்நுட்பங்களைத் தீவிரமாகப் பயன்படுத்த வேண்டும். பொதுப்போக்குவரத்தை செயல்படுத்த நுண்ணறிவுப் போக்குவரத்து முறை(ஐடிஎஸ்), மனிதத்தொடர்புகளைக்குறைக்கும் பீம்(BHIM), போன்பே (Phone Pay), கூகுள் பே (Google Pay), பே டி எம் (Paytm) மற்றும் தேசியப் பொதுப் போக்குவரத்து அட்டை (என்சிஎம்சி) போன்ற ரொக்கமில்லாக் கட்டண முறைகளைப் பின்பற்ற வேண்டும்.

 

கோவிட்-19 தொற்றை முன்னிட்டு, இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொற்று, நமது வாழ்க்கை முறையையும், உள்நாட்டு மற்றும் சர்வதேசப் போக்குவரத்தையும் வெகுவாக பாதித்துவிட்டது.

 

  1. பொதுப் போக்குவரத்தின் அளவு 90 சதவீத அளவுக்கு வெகுவாகக் குறைந்து விட்டதை ஆதாரங்கள் காட்டுகின்றன. மேலும், காற்று மாசு 60 சதவீத அளவு குறைந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. முடக்கத்துக்குப் பின் பாதுகாப்பான பயணத்துக்காக மக்கள் தனிப்பட்டப் போக்குவரத்துக்கு மாறிவிட்டதால், நகரங்களில் பொதுப்போக்குவரத்தில் பயணிகள் அளவை முன்பு இருந்த அளவுக்கு மீண்டும் ஏற்படுத்துவது மிகவும் சவாலானது.

 

  1. கார்கள் மற்றும் தனியார் வாகனங்கள் மீண்டும் அதிகரிப்பதைத் தவிர்க்க, உலகம் முழுவதும் பல நகரங்கள் இ-பயணச்சீட்டு, டிஜிட்டல் கட்டண முறைகளை ஊக்குவிக்கின்றன. சைக்கிள் பயணம் மற்றும் நடந்து செல்வதற்கேற்ப சாலைகள் மாற்றியமைக்கப்படுகின்றன. முக்கிய பகுதிகளில் மோட்டார் அல்லாத போக்குவரத்து உருவாக்கப்படுகிறது. இரு சக்கர மோட்டார் வாகனப் பாதைகள், சாலையோர நடைபாதைகள், மின் இணைப்பு சாதனங்கள், சைக்கிள் பயணத்தை ஊக்குவிக்க நிதியுதவி வசதிகள் போன்றவையும் உருவாக்கப்படுகின்றன.

 

  1. நகர்ப்புறப் பயணிகளில் 16 முதல் 57 சதவீதம் பேர் நடந்து செல்பவர்களாகவும், நகரின் அளவைப் பொறுத்து சுமார் 30 முதல் 40 சதவீதம் பேர் மிதிவண்டிகள் பயன்படுத்துவதாகவும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் நடத்திய பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 

இதை ஒரு வாய்ப்பாகக் கருதி, இக்கட்டான நேரத்தில் இது போன்ற போக்குவரத்துக்கு முன்னுரிமை அளிப்பதை அதிகரிப்பது, பயணிகளுக்கு மற்றொரு தனியார் வாகன மாற்றைக் கொடுக்கிறது. இது சுத்தமானது, பாதுகாப்பானது. இதை மற்ற போக்குவரத்துடன் இணைக்கும் போது அனைவருக்கும் உகந்ததாக இருக்கும். தேசிய நகர்ப்புறப் போக்குவரத்துக் கொள்கை-2006 [NUTP-2006]-இல் இது முக்கிய பகுதிகளில் ஒன்றாக உள்ளது. மோட்டார் அல்லாத போக்குவரத்துத் தொழிலில், இது வேலை வாய்ப்பையும் உருவாக்கும்.

 

  1. இந்தியாவில் 18 முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் 700 கி.மீ தூரத்துக்கு இயக்கப்படுகிறது. 11 நகரங்களில் பேருந்து பொதுப் போக்குவரத்து 450 கி.மீ அளவுக்கு உள்ளது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 10 மில்லியன் பயணிகள் பயணிக்கின்றனர். ஆனால், சமூக இடைவெளி விதிமுறைகளால் தற்போது கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு முந்தைய அளவில் 25 முதல் 50 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்படும். தேவை மற்றும் விநியோகத்தில் இத்தகைய வியத்தகு மற்றும் மாறும் மாற்றங்கள், இந்தப் பொதுப் போக்குவரத்து அமைப்புகளை, மாற்றுப் போக்குவரத்து முறைகளுடன் பூர்த்தி செய்ய வேண்டும்.
  2. இந்த விஷயம் தொடர்பாக, நிபுணர்கள், தொழில்துறை நிபுணர்கள், உலக வங்கி அதிகாரிகள் மற்றும் நாட்டில் உள்ள இதர பிரபல நகர்ப்புறப் போக்குவரத்து நிபுணர்கள், வெளிநாட்டு நிபுணர்களுடன் மத்திய வீட்டு வசதித்துறை மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் பல கட்ட ஆலோசனைகள் நடத்தியுள்ளது. அவர்கள் கோவிட்-19க்கு பிந்தைய நகர்ப்புறப் போக்குவரத்தில் இருக்க வேண்டிய மாற்றங்களைத் தெளிவாகக் கூறியுள்ளனர். இந்த இக்கட்டான நேரத்தில், பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்வது பாதுகாப்பற்றது என்ற உணர்வு மக்கள் மனதில் உள்ளதால், சாலைகளில் தனியார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இது காற்று மாசுவை அதிகரிப்பதோடு, பொதுப் போக்குவரத்துக்கான இடத்தையும் ஆக்கிரமித்து சாலைப் பாதுகாப்பை பாதிக்கும். 
  3. ஆனால், இந்தியாவில் தனியார் வாகன உரிமையாளர் குறைவு. பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பெரும்பாலானோர், குறைந்த போக்குவரத்து விருப்பங்களைக் கொண்டவர்கள். சமூக இடைவெளி விதிமுறைகளுக்கு இடையில், இவர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் நம்பகமான போக்குவரத்தை அளிக்க முன்னுரிமை அளிக்க வேண்டும்.

 

பஸ், மெட்ரோ ரயில் போன்ற பொதுப் போக்குவரத்து நகரங்களின் முதுகெலும்பாக உள்ளன. பொருளாதாரம் மீண்டும் தொடங்கியுள்ளதால், பொதுப் போக்குவரத்தில் பயணிகள் ஏற்றும் திறனைப் பாதிக்கும் மேல் குறைப்பதற்கு, மாற்றுப் போக்குவரத்தை நகரங்கள் உறுதி செய்ய வேண்டும்.

 

  1. பல விமானப் போக்குவரத்து விருப்பங்கள் மற்றும் பசுமையான, மாசற்ற, வசதியான, நீடித்து நிலைக்கக் கூடிய தீர்வுகளைச் சந்திக்கவும், கோவிட்-19 நமக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது.

 



(Release ID: 1631146) Visitor Counter : 260