பிரதமர் அலுவலகம்

கம்பீரமான ஆசிய வகை சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்

Posted On: 10 JUN 2020 8:05PM by PIB Chennai

குஜராத் மாநிலத்தின் கிர் காடுகளில் வாழ்ந்து வரும் கம்பீரமான ஆசிய வகைப்பட்ட சிங்கங்களின் என்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது மகிழ்ச்சியை தெரிவித்தார்.

அவர் வெளியிட்ட ட்வீட் ஒன்றில் பிரதமர் கூறியிருந்ததாவது: “ இரண்டு நல்ல செய்திகள் வந்துள்ளன. குஜராத் மாநிலத்தின் கிர் காடுகளில் வாழ்ந்து வரும் கம்பீரமான ஆசிய வகைப்பட்ட சிங்கங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 29 % அதிகரித்துள்ளது.

பூகோள அளவில் இந்தக் காட்டில் அவை வசிக்கும் பகுதியும் 36% அதிகரித்துள்ளது.

இந்த மகத்தான சாதனையை நிகழ்த்தியுள்ள குஜராத் மாநில மக்களுக்கும், இதற்கு பாடுபட்ட அனைவருக்கும் பாராட்டுகள்.

கடந்த பல ஆண்டுகளாகவே, குஜராத் மாநிலத்தில் சிங்கங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. சமூக ரீதியான பங்கேற்பு, தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம், வனவிலங்குகளின் உடல் நலம் குறித்த கவனிப்பு, அவற்றின் வசிப்பிடங்கள் குறித்து முறையான வகையில் மேலாண்மை, மனிதர்களுக்கும், சிங்கங்களுக்கும் இடையேயான மோதலை பெருமளவிற்குக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலமே இது சாத்தியமாகியுள்ளது. இந்த சாதகமான போக்கு தொடர்ந்து நீடிக்கும் என்றும் நம்புகிறேன்!” இவ்வாறு பிரதமர் கூறியுள்ளார்.

----



(Release ID: 1630842) Visitor Counter : 227