பிரதமர் அலுவலகம்

பிரதமர் திரு நரேந்திர மோடி, கம்போடிய பிரதமர் மேதகு சம்டெக் அக்கா மொஹா சேனா படேய் டெகோ ஹுன் சென்னுடன் தொலைபேசி உரையாடல்

Posted On: 10 JUN 2020 8:01PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, கம்போடிய பிரதமர் மேதகு சம்டெக் அக்கா மொஹா சேனா படேய் டெகோ ஹுன் சென்னுடன் தொலைபேசியில் இன்று உரையாடினார்.

கொவிட்-19 பெருந்தொற்று குறித்து இரண்டு தலைவர்களும் விவாதித்தனர். இருநாடுகளிலும் உள்ள கம்போடிய, இந்திய குடிமக்களுக்கு தொடர்ந்து உதவவும், அவர்கள் தாய்நாட்டுக்கு திரும்ப வசதி ஏற்படுத்தித் தரவும், இருவரும் ஒப்புக்கொண்டனர்.

ஆசியான் அமைப்பின் முக்கிய உறுப்பினரும், இந்தியாவுடன் நாகரீக மற்றும் கலாச்சார உறவுகளை கொண்டிருக்கும் நாடுமான கம்போடியாவுடனான உறவை, மேலும் வலுப்படுத்துவதில் இந்தியா  உறுதியுடன் இருப்பதாகப் பிரதமர் தெரிவித்தார்.

ஐடிஇசி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திறன்மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் மெகாங்-கங்கா ஒத்துழைப்பு கட்டமைப்பின் கீழ் செயல்படுத்தப்படும் விரைவுப் பலன் திட்டங்கள் உள்ளிட்ட, இரண்டு நாடுகளுக்கும் இடையேயான வலுவான வளர்ச்சிக் கூட்டுறவையும் இருதலைவர்களும் மீளாய்வு செய்தனர். 

இந்தியாவுடனான உறவுகளுக்கு கம்போடியா அளிக்கும் முக்கியத்துவத்தை அந்நாட்டுப் பிரதமர் எடுத்துரைத்தார். அவரின் உணர்வுகளுக்கு செவிமடுத்த பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தியாவின் கிழக்கு செயல்திட்ட கொள்கையில் கம்போடியாவின் மதிப்புமிக்க பங்கு பற்றி வலியுறுத்தினார்.

------


(Release ID: 1630824) Visitor Counter : 217