உள்துறை அமைச்சகம்
உம்பன் புயலுக்குப் பிந்தைய மேலாண்மைப் பணிகளுக்காக 10 கூடுதல் தேசிய பேரிடர் மீட்புப்படைக் குழுக்கள் அனுப்பப்பட்டன.
Posted On:
23 MAY 2020 4:28PM by PIB Chennai
கூடுதல் குழுக்களைப் பணியமர்த்துமாறு ,மேற்கு வங்க அரசின் பேரிடர் மேலாண்மை மற்றும் குடிமைப் பாதுகாப்பு முதன்மைச் செயலரின் எழுத்துபூர்வமான வேண்டுகோளை அடுத்து, தேசிய பேரிடர் மீட்புப்படையின் 10 கூடுதல் குழுக்கள், மேற்கு வங்கத்துக்கு அனுப்பப்பட்டு, அவை வெகு விரைவில் அங்கு சென்றடைய உள்ளன. குழுக்கள் இன்று பின்னிரவில் கொல்கத்தா சென்றடையக்கூடும்.
மேற்கு வங்க மாநிலத்தின் புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்புப் பணிகளுக்காக ஏற்கனவே 26 தேசிய பேரிடர் மீட்புப் படைக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 10 குழுக்கள் கூடுதலாக அனுப்பப்படுவதால், மொத்தம் 36 குழுக்கள், உம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்கத்தின் 6 மாவட்டங்களில் பணியில் ஈடுபடும்.
*****
(Release ID: 1626437)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam