ரெயில்வே அமைச்சகம்

இந்திய ரெயில்வே மேலும் 2600 ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை அடுத்த பத்து நாட்களுக்கு இயக்கவுள்ளது.


இந்த முடிவினால் சுமார் 36 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் பயனடைவார்கள்.

இந்திய ரயில்வே கடந்த இருபத்து மூன்று நாட்களில் 2600 ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயக்கியுள்ளது.

இதுவரை, புலம்பெயர்ந்த சுமார் 36 லட்சம் பேர், தங்களது சொந்த மாநிலங்களுக்கு ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர்.

प्रविष्टि तिथि: 23 MAY 2020 4:35PM by PIB Chennai

கோவிட்-19 பெருந்தொற்று நோய்க்கு எதிராக நாடு போராடி வருகிறது. இந்த சிக்கலான காலகட்டத்தில், மிக மோசமாக பாதிப்படைந்தவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக, இந்திய ரெயில்வே, அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிச் செல்ல வசதி செய்யும் விதத்தில், ரயில்வே அமைச்சகம் அடுத்த பத்து நாட்களுக்கு நாடு முழுவதும், அந்தந்த மாநில அரசுகளின் தேவைகளுக்கேற்ப மேலும் 2600 ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது. இதனால் நாட்டின் பல்வேறு இடங்களிலும் சிக்கித் தவிக்கும் 36 லட்சம் பயணிகள் பயனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

கோவிட்-19 பொது முடக்கக் காலத்தின்போது பல்வேறு இடங்களில் சிக்கித் தவித்த

புலம்பெயர் தொழிலாளர்கள், யாத்திரீகர்கள், மாணவர்கள் மற்றும் இதர நபர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிச் செல்ல ஏதுவாக 1 மே 2020 முதல், இந்திய ரயில்வே ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயக்கத் துவங்கியது.

இவ்வாறு சிக்கித் தவிப்பவர்களை அவர்கள் புறப்படும் மாநிலம் மற்றும் அவர்கள் சென்றடையும் மாநில அரசுகள், பயணிகள் புறப்படும் இடம், சென்று சேரும் இடம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு நடவடிக்கைகளைப் பின்பற்றி, இரு மாநில அரசுகளும் விடுக்கும் கோரிக்கைகளுக்கேற்ப, இந்த சிறப்பு ரயில்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடம் வரை மட்டும் இயக்கப்படுகின்றன.

 

ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் சுமுகமான முறையில் இயங்குவதற்கும், ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்காகவும், மாநில அரசுகளும், ரயில்வேயும், மூத்த அதிகாரிகளை மைய அதிகாரிகளாக நியமித்துள்ளன.

 

கடந்த 23 நாட்களில், இந்திய ரயில்வே 2600 ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயக்கியுள்ளது.

 

இதுவரை 36 லட்சம் புலம்பெயர் நபர்கள் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர்.

 

ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் தவிர, ரயில்வே அமைச்சகம், 12. 5. 2020 முதல் பதினைந்து சிறப்பு இணை ரயில்களையும் இயக்கி வருகிறது. 1 ஜூன் 2020 முதல் 200 ரயில் சேவைகள் துவக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

****


(रिलीज़ आईडी: 1626418) आगंतुक पटल : 294
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia , Kannada , Malayalam