உள்துறை அமைச்சகம்
ஊரடங்கு 4.0 - மத்திய உள்துறை அமைச்சகம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மென்மைப்படுத்தலாகாது. உள்ளூர் மதிப்பீடு, சுகாதார அமைச்சகத்தின் விதிமுறைகளின்படி கடுமையாக்க மட்டுமே செய்யலாம்- மத்திய உள்துறை அமைச்சகம்
Posted On:
18 MAY 2020 1:43PM by PIB Chennai
கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில், ஊரடங்குக் கட்டுப்பாடுகள் தொடர்பாக, மாற்றியமைக்கப்பட்ட விதிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் 17.05.2020 அன்று வெளியிட்டது. ஊரடங்கு 31.05.2020 வரை நீட்டிக்கப்படுள்ள நிலையில், கட்டுப்பாடுகளில் பரவலான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்று முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிமுறைகளின்படி, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், 17.05.2020 அன்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் விதித்துள்ள திருத்தப்பட்ட விதிமுறைகளைக் கருத்தில் கொண்டு, சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களை வரையறுக்க வேண்டும். சிவப்பு மற்றும் ஆரஞ்சு மண்டலங்களுக்கு உள்ளே, கட்டுப்பாடு மற்றும் பரவல் மண்டலங்களை அந்தந்த பகுதி அதிகாரிகள் , உள்ளூர் நிலவரம் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் வழிமுறைப்படி, அடையாளம் காணுவார்கள்.
கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள், முன்பு போல சுற்றளவுக்குள் விதிமுறைகள் கடுமையாகப் பராமரிக்கப்பட வேண்டும். அத்தியாவசிய நடவடிக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். நாடு முழுவதும், குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்கான தடை தொடர்ந்து நீடிக்கும். மத்திய உள்துறை அமைச்சக விதிமுறைகளின் கீழ், தடை செய்யப்பட்ட நடவடிக்கைகள் தவிர மற்ற அனைத்து நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படும்.
இவற்றைக் கருத்தில் கொண்டு, மாற்றப்பட்டுள்ள விதிமுறைகளின் கீழ், பரவலாகத் தளர்த்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு இடையில், உள்துறை அமைச்சகம் விதித்துள்ள கட்டுப்பாடுகளில் எவ்விதமான தளர்வையும் மேற்கொள்ளக்கூடாது என்று உள்துறை அமைச்சகம் மீண்டும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. உள்ளூர் கள நிலவரங்களின் அடிப்படையில், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தேவையான கட்டுப்பாடுகளை விதிக்கவோ, அல்லது சில நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கவோ செய்யலாம்.
உள்ளூர் அளவில் மண்டலங்களை வரையறுக்கும் போது, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் விதித்துள்ள மாற்றப்பட்ட விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள வரையறைகள், வழிமுறைகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் வசதிக்கு ஏற்ப, உள்ளூர் அளவில், மத்திய, மாநில அரசுகள் விதித்துள்ள விதிமுறைகள் பற்றி விரிவான விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்ட அதிகாரபூர்வ தகவலைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
(Release ID: 1624887)
Visitor Counter : 262
Read this release in:
Hindi
,
English
,
Urdu
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam