நிதி அமைச்சகம்

விவசாயம், மீன்வளம் உணவுப் பதனிடுதல் துறைகளுக்காக, வேளாண் உள்கட்டமைப்பு தளவாடங்கள், திறன் கட்டமைப்பு, ஆளுகை மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் ஆகியவற்றை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை நிதி அமைச்சர் அறிவித்தார்

Posted On: 15 MAY 2020 7:42PM by PIB Chennai

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்துக்கு சமமான ரூ 20 லட்சம் கோடி மதிப்பில் விரிவான சிறப்பு பொருளாதார தொகுப்பை பிரதமர் திரு. நரேந்திர மோடி
மே 12 தேதி அன்று அறிவித்தார். ஆத்ம நிர்பார் பாரத் அபியான் எனப்படும் சுய-சார்பான இந்தியா இயக்கத்துக்கு அவர் அறைகூவல் விடுத்தார். பொருளாதாரம், உள்கட்டமைப்பு, அமைப்பு, துடிப்பான மக்கள் மற்றும் தேவை ஆகிய சுய-சார்பான இந்தியாவின் ஐந்து தூண்களையும் அவர் குறிப்பிட்டார்.

இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், விவசாயம், மீன்வளம் மற்றும் உணவுப் பதனிடுதல் துறைகளுக்காக, உள்கட்டமைப்பு தளவாடங்கள், திறன் கட்டமைப்பு, ஆளுகை மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் ஆகியவற்றை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய நிதி மற்றும் பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சர், திருமதி. நிர்மலா சீதாராமன், அறிவித்தார்

 

விவரங்களை வழங்கிய திருமதி. நிர்மலா சீதாரமான், மொத்தமுள்ள 11 நடவடிக்கைகளில், வேளாண் உள்கட்டமைப்பை மேம்படுத்த 8 நடவடிக்கைகளும், வணிகத் தடைகள் மற்றும் வேளாண் பொருள்களுக்கான சேமிப்பு அளவுகளை நீக்குதல் உள்ளிட்ட நிர்வாக மற்றும் ஆளுகை சீர்திருத்தங்களுக்காக 3 நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதாக தெரிவித்தார்.

 

விவசாயிகளுக்கு ஆதரவு அளிப்பதற்காக இரண்டு முக்கிய வேளாண்-தொடர்பான நடவடிக்கைகள் நேற்று அறிவிக்கப்பட்டதாக தனது முன்னுரையில் மத்திய நிதி அமைச்சர் கூறினார். ரபி பருவ அறுவடைக்கு பிந்தைய மற்றூம் கரிப் பருவ செலவுகளுக்கு பயிர்க் கடன் வழங்குவதற்காக ஊரகக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய ஊரக வங்கிகளுக்கு கூடுதல் அவசர கால பணி மூலதன வசதியாக ரூ 30,000 கோடி நபார்ட் மூலம் வழங்கப்படும். இரண்டாவது, திட்டமிட்ட முறையில் வேளாண் துறையை வலுப்படுத்த 2.5 கோடி உழவர்களுக்கு ரூ 2 லட்சம் கோடி கடன் ஊக்கம். இது பிரதமரின் விவசாயத் திட்ட பயனாளிகளுக்கு விவசாய கடன் அட்டைகள் மூலம் டிசம்பருக்குள் வழங்கப்படும்.

 

கடந்த 2 மாதங்களில் அரசு என்ன செய்துள்ளது என்பதைப் பற்றி விவரித்த நிதி அமைச்சர், ரூ 74,300 கோடிக்கும் அதிகமான குறைந்தபட்ச ஆதரவு விலைக் கொள்முதல்களும், ரூ 18,700 கோடி பிரதமர் விவசாயி நிதி பரிமாற்றமும், பிரதமரின் பசல் பீமா திட்டத்தின் கீழ் ரூ 6,400 கோடி உரிமைகோரல் நிதி வழங்குவதும் பொது முடக்க சமயத்தில் செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.

 

மேலும், பொது முடக்கத்தின் போது, பாலுக்கானத் தேவை 20-25% வரை குறைந்தது. அதைத் தொடர்ந்து, தினசரி விற்பனை அளவான ஒரு நாளைக்கு 360 லட்சம் லிட்டர்களை விட அதிகமாக, ஒரு நாளைக்கு 560 லட்சம் லிட்டர்கள் கூட்டுறவு நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்பட்டன. மொத்தம் 111 கோடி லிட்டர்கள் அதிகமாகக் கொள்முதல் செய்யப்பட்டு ரூ 4100 கோடி

கட்டணம் உறுதி செய்யப்பட்டது.

 

மேலும், 2020-21ஆம் ஆண்டில் பால் கூட்டுறவுகளுக்கு வருடத்துக்கு இரண்டு சதவீதம் அளவில் வட்டித் தள்ளுபடி வழங்க புதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. முறையான திரும்ப செலுத்துதல்/வட்டிக் கட்டுதலுக்கு கூடுதல் இரண்டு சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும்.
இரண்டு கோடி விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் வகையில், ரூ 5000
கோடி கூடுதல் பணப்புழக்கத்தை இந்தத் திட்டம் உருவாக்கும்.

 

மீன் வளத்துறைக்காக மார்ச் 24 அன்று செய்யப்பட்ட 4 கோவிட் தொடர்பான அறிவிப்புகளும் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன. மேலும், மார்ச் 31 ம் தேதி அன்றுடன் பதிவுக்காலம் முதிர்வடைந்த, பதிவு செய்யப்பட்ட 242 இறால் பண்ணைகள் மற்றும் நவுப்லி ஓடுடைய நீர்வாழ் உயிரினக் குஞ்சுகள் வளர்ப்புப் பண்ணைகள் பதிவைப் புதுப்பிக்க கால அவகாசம் மூன்று மாத காலத்திற்கு நீட்டிக்கப் பட்டுள்ளது. கடல்வாழ் உயிரன மீன் வளங்கள் மற்றும் மீன் வளச் செயல்பாடுகள் உள்நாட்டு மீன் வகைக்களுக்கும் பொருந்தும் வகையில் தளர்த்தப்பட்டுள்ளன.

 

விவசாயிகள், மீனவர்கள் மற்றும் உணவுப் பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கு நீண்ட கால மற்றும் நிலையானத் தாக்கத்தை இன்று செய்யப்பட்ட அறிவிப்புகள் வழங்கும் என்று திருமதி. நிர்மலா சீதாராமன் கூறினார்.

 

விவசாயம், மீன்வளம் மற்றும் உணவுப் பதனிடுதல் துறைகளுக்காக, உள்கட்டமைப்பு தளவாடங்கள் மற்றும் திறன் கட்டமைப்பை வலுப்படுத்த கீழ்கண்ட நடவடிக்கைகளை நிதி அமைச்சர் அறிவித்தார்:

1.
விவசாயிகளுக்கான பண்ணை-வாயில் உள்கட்டமைப்புக்காக ரூ ஒரு லட்சம் கோடி வேளாண் உள்கட்டமைப்பு நிதி பண்ணை - வாயில் ஒருங்கிணைக்கும் இடங்களில் (ஆரம்ப வேளண் கூட்டுறவு சங்கங்கள், விவசாயி உற்பத்தியாளர் நிறுவனங்கள், வேளான் தொழில் முனைவோர், புது நிறுவனங்கள் (ஸ்டார்ட் அப்) இன்னும் பல) வேளாண் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதி அளிப்பதற்காக ரூ 1,00,000 கோடி கடன் வசதி. பண்ணை-வாயில் ஒருங்கிணைக்கும் இடங்கள், கட்டுபடியாகும் மற்றும் நிதி ரீதியாக சாத்தியமாகக்கூடிய அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு உத்வேகம். உடனடியாக நிதியம் உருவாக்கப்படும்.

 

2. குறு உணவு நிறுவனங்களை முறைப்படுத்த ரூ 10,000 கோடித் திட்டம்

 

'உள்நாட்டின் உலகளாவிய வீச்சுக்கு ஆதரவு' என்னும் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் கொள்கையை ஊக்குவிக்க, தர நிர்ணயங்களை அடைவதற்கும், வர்த்தக குறியீட்டை கட்டமைப்பதற்கும், சந்தைப்படுத்துதலுக்கும் தொழில்நுட்ப மேம்படுத்துதல் தேவைப்படும் 2 லட்சம் குறு உணவு நிறுவனங்களுக்கு உதவ ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்படும். ஏற்கனவே இருக்கும் குறு உணவு நிறுவனங்கள், விவசாயி உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் கூட்டுறவுகளுக்கு ஆதரவு அளிக்கப்படும். பெண்கள் மற்றும் பட்டியல் வகுப்பினர்/பழங்குடியினர் நடத்தும் நிறுவனங்கள் மீதும் முன்னேறும் உத்வேகம் உள்ள மாவட்டங்கள் மீதும் கவனம் செலுத்தப்பட்டு தொகுப்பு ரீதியான (உதாரணம்: உத்திர பிரதேசத்தில் மாம்பழம், கர்நாடகாவில் தக்காளி, ஆந்திர பிரதேசத்தில் தக்காளி, மகாராஷ்டிராவில் ஆரஞ்சு இன்னும் பல) அணுகுமுறைக் கடைப்பிடிக்கப்படும்.

 

3. பிரதமரின் மீனவர்கள் நலத் திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு ரூ 20,000 கோடி கடல் சார்ந்த மற்றும் உள்நாட்டு மீன்வளத்தின் ஒருங்கிணைந்த, நீடித்த மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக பிரதமரின் மீனவர்கள் நலத் திட்டத்தை அரசு தொடங்கும். கடல் சார்ந்த, உள்நாட்டு மீன்வள நடவடிக்கைகள் மற்றும் மீன் வளர்ப்புக்காக ரூ 11,000 கோடி, மீன்பிடி துறைமுகங்கள், குளிர் பதன வசதிகள் மற்றும் சந்தைகள் போன்ற உள்கட்டமைப்புக்காக ரூ 9,000 கோடி வழங்கப்படும். கூண்டுக்குள் உயிரின வளர்ப்பு, கடல்பாசி வளர்ப்பு, அலங்கார மீன்கள் வளர்ப்பு மற்றும் புதிய மீன்பிடி கலங்கள், தடமறியும் திறன், ஆய்வகக் கட்டமைப்பு ஆகியவை முக்கியமான செயல்பாடுகளாக இருக்கும். மீன்பிடித் தடைக்காலத்தில் (மீன்பிடிப்பதற்குத் தடை செய்யப்படும் காலம்​) உதவும் தனிநபர் காப்பீடு, படகுக் காப்பீட்டுத் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படும். ஐந்து ஆண்டு காலத்தில் 70 லட்சம் டன்கள் கூடுதல் மின் உற்பத்தி நிலையை எட்டுதலுக்கு இது வழி வகுக்கும். 55 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு; ஏற்றுமதியை இரட்டிப்பாக்கி ரூ 1,00,000 கோடியை எட்டுதல். தீவுகள், இமயமலைப் பகுதி மாநிலங்கள், வட கிழக்கு மற்றும் முன்னேறும் உத்வேகத்தில் உள்ள மாவட்டங்கள் மீது கவனம் செலுத்தப்படும்.

 

4. தேசிய விலங்கு நோய்க் கட்டுப்பாட்டுத் திட்டம்

 

கால் மற்றும் வாய் நோய் மற்றும், கன்று வீச்சு நோய்க்காக ரூ 13,343 கோடி மதிப்பீட்டில் தேசிய விலங்கு நோய்க் கட்டுப்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. மாடுகள், எருமை, செம்மறியாடு, ஆடுகள், மற்றும் பன்றி வகையறாக்களுக்கு (மொத்தம் 53 கோடி விலங்குகளுக்கு) கால் மற்றும் வாய் நோய் மற்றும், கன்று வீச்சு நோய்க்காக 100 சதவீதம் தடுப்பு மருந்தேற்றத்தை உறுதிப்படுத்துவது நோக்கமாகும். 1.5 கோடி மாடுகள் & எருமைகளுக்கு இது நாள் வரை தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது.

 

5. கால் நடை வளர்ப்புக் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம் - ரூ 15,000 கோடி

 

பால் பதப்படுத்துதல், மதிப்பு கூட்டுதல், கால்நடைத் தீவனக் கட்டமைப்பு போன்றவற்றில் தனியார் முதலீட்டுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் ரூ 15,000 கோடி செலவில் கால் நடை வளர்ப்புக் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம் அமைக்கப்படும். சிறப்புப் பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கான ஆலைகள் அமைப்பதற்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும்.


6. மூலிகை சாகுபடி மேம்பாட்டுக்கு ரூ 4,000 கோடி ஒதுக்கத் திட்டம்

 

மருத்துவ தாவர சாகுபடியின் கீழ், 2.25 லட்சம் ஹெக்டேர் பரப்புக்கு தேசிய மருத்துவத் தாவரங்கள் வாரியம் ஆதரவு அளித்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரு 4,000 கோடி மதிப்பில் 10,00,000 ஹெக்டேர் பரப்பு மூலிகை சாகுபடியின் கீழ் கொண்டுவரப்படும். விவசாயிகளுக்கு ரூ 5,000 கோடி வருமானத்துக்கு இது வழிவகுக்கும். மருத்துவத் தாவரங்களுக்காக மண்டல மண்டிகள் கட்டமைப்பு உருவாக்கப்படும். கங்கை நதி கரை ஓரத்தில் மருத்துவத் தாவரங்கள் வளாகச் சாலை உருவாக்க, தேசிய மருத்துவத் தாவரங்கள் வாரியம் 800 ஹெக்டேர் நிலம் அளிக்கும்.

 

7. தேனீ வளர்ப்புக்கான முயற்சிகள் - ரூ 500 கோடி

 

கீழ்கண்டவற்றுக்காக அரசு ஒரு திட்டத்தை செயல்படுத்தும்:

 

. ஒருங்கிணைந்த தேனீ வளர்ப்பு மையங்கள், சேகரிப்பு, சந்தைப்படுத்துதல் மற்றும் சேமிப்புக் கிடங்கு மையங்கள், தேன் எடுத்த பிறகு மதிப்புக் கூட்டும் வசதிகள் போன்றவை.


. தரங்கள், தடமறிதல் நடைமுறைகள் மேம்படுத்துதலை அமல் செய்தல்.

. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து திறன் வளர்ப்பு.

. மையமாக்கிய கையிருப்பு மற்றும் தேனீ இனப்பெருக்க மையங்களை தரம் உயர்த்துதல்.

 

இதனால் தேனீ வளர்க்கும் 2 லட்சம் பேரின் வருமானம் அதிகரிக்கவும், நுகர்வோருக்குத் தரமான தேன் கிடைக்கவும் உதவியாக இருக்கும்.

 

8.தக்காளி, வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்குகளில் இருந்து மொத்தமாக- ரூ 500 கோடி

 

உணவுப் பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகத்தின் ஆப்பரேஷன் பசுமைத் திட்டம், தக்காளி, வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்குகளில் இருந்து அனைத்து பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கும் நீட்டிக்கப்படும். உபரியாக உள்ள சந்தைகளில் இருந்து குறைவாக உள்ள சந்தைகளுக்கு எடுத்து செல்வதற்கான செலவில் 50% மானியம், பதப்படுத்துதல் உள்ளிட்ட சேமிப்புகளுக்கு 50% மானியம் ஆகியவற்றை இந்தத் திட்டம் வழங்கும்ஆறு மாதங்களுக்கு சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டு, பின்னர் விரிவுபடுத்தப்பட்டு நீட்டிக்கப்படும். விவசாயிகளுக்கு நல்ல விலைக் கிடைத்தல், குறைவான வீணாக்குதல், வாங்கக்கூடிய விலைகளில் பொருள்களை நுகர்வோருக்கு கிடைக்க செய்தல் ஆகியவற்றுக்கு இது உதவும்.


பத்திரிகையாளர் சந்திப்பின் போது, வேளாண் துறைக்கான ஆளுகை மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களுக்காக, கீழ்கண்ட நடவடிக்கைகளை மத்திய நிதி அமைச்சர் அறிவித்தார்

 

1. விவசாயிகளுக்கு சிறந்த விலை கிடைப்பதற்காக அத்தியாவசிய பொருள்கள் சட்டத்தில் திருத்தங்கள்

 

அத்தியாவசிய பொருள்கள் சட்டத்தில் அரசு திருத்தங்களை செய்யும். தானியங்கள், சமையல் எண்ணெய், எண்ணெய் வித்துகள், பருப்புகள், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஆகிய வேளாண் உணவு வகைகளுக்கு கட்டுப்பாடுகள் நீக்கப்படும். தேசிய பேரிடர்கள், பஞ்சம் போன்ற அசாதாரணக் காலங்களில் மட்டுமே சேமிப்புக் கட்டுப்பாடுகள் விலை ஏற்றத்துடன் அமல்படுத்தப்படும். மேலும், பதப்படுத்துவோர் அல்லது மதிப்பு சங்கிலியில் பங்குபெறுவோருக்கு அவர்களின் நிறுவப்பட்டத் திறன் அடிப்படையிலும், எந்த ஏற்றுமதியாளருக்கும் ஏற்றுமதி தேவை அடிப்படையிலும் எந்தவிதமான சரக்குக் கட்டுப்பாடும் பொருந்தாது.

 

2. விவசாயிகளுக்கு சந்தைப்படுத்துதல் தேர்வுகளை அளிக்க வேளாண் சந்தைப்படுத்துதல் சீர்திருத்தங்கள்

 

கீழ்கண்டவற்றை வழங்க ஒரு மத்திய சட்டம் வகுக்கப்படும்-
*
நல்ல விலையில் பொருள்களை விற்க விவசாயிக்கு போதுமான தேர்வுகள்;
*
மாநிலங்களுக்கிடையேயான தடைகள் இல்லா வணிகம்
* வேளாண் பொருள்களின் மின் வணிகத்துக்கான கட்டமைப்பு.

 

3. வேளாண் பொருள்களின் விலை நிர்ணயித்தல் மற்றும் தர உத்தரவாதம்

 

நியாயமான மற்றும் வெளிப்படையான வகையில் பதப்படுத்துவோர், ஒருங்கிணைப்பாளர்கள், பெரு வணிகர்கள் மற்றும் ஏற்று மதியாளர்களுடன் ஈடுபடுத்திக் கொள்ள விவசாயிகளுக்கு உதவும் வகையில் வசதியளிக்கும் சட்டக் கட்டமைப்பு ஒன்றை அரசு இறுதி செய்யும். விவசாயிகளின் ஆபத்தைக் குறைத்தல், உத்தரவாதமான வருமானம் மற்றும் தர நிர்ணயங்கள் இந்த கட்டமைப்பின் முக்கியப் பகுதியாக இருக்கும்.

 

***
 



(Release ID: 1624453) Visitor Counter : 468