ரெயில்வே அமைச்சகம்
புதுதில்லியிலிருந்து மூன்று சிறப்பு ரயில்களை இந்திய ரயில்வே மீண்டும் இன்று முதல் இயக்குகிறது.
प्रविष्टि तिथि:
12 MAY 2020 3:24PM by PIB Chennai
கோவிட்-19 நோய் பாதிப்பின் காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த பயணிகள் ரயில் சேவைகளில், புது தில்லியில் இருந்து மீண்டும் இயக்கப்படும், முதலாவது சிறப்பு ரயிலாக பிலாஸ்பூர் செல்லும் ரயில் எண் 02442 புது தில்லி ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை 12 மே, 2020 அன்று புறப்பட்டுச் சென்றது. இந்த ரயில் இயக்கப்பட்டதையடுத்து இந்திய ரயில்வே படிப்படியாக பயணிகள் ரயில் சேவையை துவக்கும். மொத்தம் மூன்று சிறப்பு ரயில்கள் இன்று புதுதில்லியில் இருந்து புறப்படுகின்றன. பிற நகரங்களிலிருந்து புதுதில்லிக்கு மொத்தம் ஐந்து சிறப்பு ரயில்கள் புறப்படுகின்றன. இந்திய ரயில்வேயில் இயக்கப்படும் ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் தவிர, கூடுதலாக இந்த சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன
இன்று புது தில்லியிலிருந்து மொத்தம் மூன்று ரயில்கள் பல்வேறு இடங்களுக்கு புறப்படுகின்றன. இந்த ரயில்களில் விவரங்கள் வருமாறு:
|
S.No.
|
Train No
|
From
|
To
|
|
1
|
02692
|
புதுதில்லி
|
பெங்களூரு
|
|
2
|
02424
|
புதுதில்லி
|
திப்ரூகர்
|
|
3
|
02442
|
புதுதில்லி
|
பிலாஸ்பூர்
|
புதுதில்லி - பிலாஸ்பூர் சிறப்பு ரயிலில் செல்லும் 1177 பயணிகளுக்காக மொத்தம் 741 பிஎன்ஆர் (பயணிகள் பெயர் பதிவு விவரங்கள்) பதிவேற்றங்கள் செய்யப்பட்டன. புதுதில்லி - திப்ரூகர் சிறப்பு ரயிலில் செல்லும் 1122 பயணிகளுக்காக மொத்தம் 442 பிஎன்ஆர் பதிவேற்றங்கள் செய்யப்பட்டன.[புது தில்லி - பெங்களூரு சிறப்பு ரயில் மூலமாக பயணம் செய்யும் 1162 பயணிகளுக்காக 804 PNR பிஎன்ஆர் பதிவேற்றங்கள் செய்யப்பட்டன.
இன்று புதுதில்லி உட்பட பல்வேறு நகரங்களிலிருந்து மொத்தம் 8 ரயில்கள் புறப்படுகின்றன இவை குறித்த விவரங்கள் வருமாறு:
|
S.No.
|
Train No
|
From
|
To
|
|
1
|
02301
|
ஹவுரா
|
புதுதில்லி
|
|
2
|
02951
|
மும்பை சென்ட்ரல்
|
புதுதில்லி
|
|
3
|
02957
|
அகமதாபாத்
|
புதுதில்லி
|
|
4
|
02309
|
ராஜேந்திரன் நகர் (T)
|
புதுதில்லி
|
|
5
|
02691
|
பெங்களூரு
|
புதுதில்லி
|
|
6
|
02692
|
புது தில்லி
|
பெங்களூரு
|
|
7
|
02424
|
புது தில்லி
|
திப்ரூகர்
|
|
8
|
02442
|
புது தில்லி
|
பிலாஸ்பூர்
|
(रिलीज़ आईडी: 1623286)
आगंतुक पटल : 313
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Punjabi
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada