சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கோவிட்-19 குறித்த அண்மைச் செய்திகள் இதுவரை 20,917 பேர் குணமடைந்துள்ளனர்; குணமாகும் விகிதம் 31.15% ஆக உயர்வு.
प्रविष्टि तिथि:
11 MAY 2020 5:27PM by PIB Chennai
இதுவரை 20,917 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், குணமாகும் விகிதம் 31.15 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுவரையில் நோய்த் தாக்குதலுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 67,152 ஆக உள்ளது. நேற்றில் இருந்து 4,213 பேருக்குப் புதிதாக இந்த நோய்த் தாக்குதல் கண்டறியப்பட்டுள்ளது.
பல்வேறு மருத்துவ தொழில் நிபுணர்களின் பணியைப் பாராட்டியுள்ள மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன், கோவிட்-19 நோய்த் தாக்குதலை எதிர்த்துப் போராடுவதில் உறுதியைக் காட்டி வரும் , குறிப்பாக கடந்த 3 மாதங்களில் உறுதியுடன் செயல்பட்டு வரும் மருத்துவர்களை நினைத்து இந்தியா பெருமைப்படுகிறது என்று கூறினார். டாக்டர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களை சமூகத்தில் ஒதுக்கி வைத்து பார்க்கக் கூடாது என்றும், பொது மக்களுக்கு ஆற்றி வரும் சேவைகளுக்காக அவர்களைப் பாராட்ட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். டாக்டர்கள், நர்ஸ்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு நாம் மரியாதை, ஆதரவு ஒத்துழைப்பு அளிக்க வேண்டிய தருணம் இது என்று அவர் தெரிவித்தார்.
மாவட்ட அளவில் கோவிட்-19 சிகிச்சை மையங்களுக்கான வழிகாட்டுதல்களை சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதை பின்வரும் இணையதளச் சுட்டியில் காணலாம்:
https://www.mohfw.gov.in/pdf/DistrictlevelFacilitybasedsurveillanceforCOVID19.pdf
(रिलीज़ आईडी: 1623049)
आगंतुक पटल : 220
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam