பிரதமர் அலுவலகம்
புத்த பூர்ணிமாவை முன்னிட்டு காணொலி காட்சி மூலம் சர்வதேச வேசக் கொண்டாட்டத்தில் பிரதமர் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, சிறப்புரை ஆற்றுகிறார்.
Posted On:
06 MAY 2020 8:45PM by PIB Chennai
நாளை மே 7ம் தேதி நடைபெறும் புத்த பூர்ணிமா நிகழ்ச்சியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
உலகளாவிய புத்த மதத்தினரின் அமைப்பான சர்வதேச புத்த மதத்தினர் கூட்டமைப்புடன் (ஐபிசி) மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் இணைந்து, காணொலி காட்சி மூலமான பிரார்த்தனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் உலகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அனைத்து புத்த மதத் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.
பிரதமர் திரு.நரேந்திர மோடி, இந்த நிகழ்ச்சியில் நாளை காலை சிறப்புரை ஆற்றுகிறார்.
உலக அளவில் தற்போது கோவிட்-19 தொற்று பரவலால் ஏற்பட்டுள்ள தாக்கத்தினால் புத்த பூர்ணிமா, காணொலி காட்சி மூலமாக விசாக தினம் கொண்டாடப்படுகிறது.
கோவிட்-19 தொற்று முதல்நிலை போர்வீரர்களையும், இதில் பலியானவர்களையும் கவுரவிக்கும் வகையில் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேபாளத்தில் உள்ள லும்பினி புனித தோட்டம், மஹாபோதி கோயில், இந்தியாவில் உள்ள புத்தகயா, முல்கந்தா குடி விகாரா, சாரநாத், பரிநிர்வாணா ஸ்தூபா, குஷிநகர் ஆகியவற்றில் இருந்து பிரார்த்தனைகளும், இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க அனுராதாபுரம் ஸ்தூபா வளாகத்தில் உள்ள ருவண்வெலி மகா செயா மற்றும் நேபாளத்தில் உள்ள பவுத்தநாத் சுவாவாம்பு, நமோ ஸ்தூபாவில் இருந்து பிரித் உச்சாடனங்களும் ஒளிபரப்பாகும்.
மத்திய கலாச்சாரத்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.பிரகலாத் சிங் படேல் மற்றும் மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை இணையமைச்சர் திரு.கிரண் ரிஜிஜூவும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.
புத்த பூர்ணிமா நாளான வேசக், ததகதா கவுதம புத்தமரின் பிறந்த நாளாகவும், அறிவொளி தரும் நாளாகவும், மகா பரிநிர்வாணா நாள் என மூன்று நிகழ்ச்சிகளின் ஆசிர்வதிக்கப்பட்ட நாளாக உள்ளது.
(Release ID: 1621783)
Visitor Counter : 206
Read this release in:
Punjabi
,
Malayalam
,
Marathi
,
Assamese
,
Bengali
,
English
,
Urdu
,
Hindi
,
Manipuri
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada