நிதி அமைச்சகம்

பிரதமர் ஏழைகள் மறுவாழ்வு திட்ட தொகுப்பு உதவிகள்: இதுவரையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் சுமார் 39 கோடி பயனாளிகளுக்கு ரூ.34,800 கோடி நிதி உதவி

Posted On: 06 MAY 2020 11:41AM by PIB Chennai

டிஜிட்டல் பணப் பட்டுவாடா வசதியைப் பயன்படுத்தி பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வு திட்ட தொகுப்பு உதவிகளின் கீழ் மே 5 ஆம் தேதி வரையில் ரூ.34,800 கோடி அளவுக்கு 39 கோடி பேருக்கு நிதி உதவி அளிக்கப் பட்டுள்ளது. கோவிட்-19 பாதிப்பால் முடக்கநிலை அமல் செய்யப்படும் சூழ்நிலையில், மக்களுக்கு இந்த உதவிகள் வழங்குவது குறித்து  மார்ச்  26 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் தொகுப்பு உதவிகள் வழங்குவதில், பெண்கள், ஏழை மூத்த குடிமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு ரொக்க உதவிகள் மற்றும் உணவு தானியங்கள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. இந்த உதவிகளின் தொகுப்பு விரைவில் வழங்கப்படுவதை மத்திய, மாநில அரசுகள் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருகின்றன.

நேரடியாக பயனாளிகள் கணக்கில் பணம் செலுத்தும் திட்டத்தின் மூலம் இடைத்தரகர்கள் தேவையில்லாமல் போவதால், இதன் செயல்திறன் மேம்பட்டுள்ளது. பயனாளிகள் வங்கிக் கிளைக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல், அவர்களின் கணக்குகளிலேயே நேரடியாகப் பணம் செலுத்தப் படுகிறது.

பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வு திட்டத்தின் உதவிகள் தொகுப்புத் திட்டத்தில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன:

  • பிரதமரின் வேளாண் திட்ட முதல் தவணையாக 8.19 கோடி பயனாளிகளுக்கு முன்கூட்டியே ரூ.16,394 கோடி வழங்கப்பட்டது.
  • வங்கிகளில் ஜன் தன் கணக்கு வைத்திருக்கும் 20.05 கோடி (98.3%) பெண்களுக்கு முதல் தவணை உதவித் தொகையாக ரூ.10,025 கோடி வழங்கப்பட்டது. ஜன் தன் கணக்கு வைத்திருக்கும் பெண்கள் வாடிக்கையாளர் என்ற நிலையில் பணப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 8.72 கோடியாக (44%) உள்ளது. மே 5 ஆம் தேதி வரையில் ஜன் தன் கணக்கு வைத்திருக்கும் பெண்கள் 5.57 கோடி பேருக்கு இரண்டாவது தவணைக்காக ரூ.2,785 கோடி செலுத்தப்பட்டுள்ளது.
  • முதியோர் ஓய்வூதியர், விதவையர், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையாக 2.82 கோடி பேருக்கு ரூ.1405 கோடி வழங்கப் பட்டுள்ளது. பயனாளிகள் 2.812 கோடி பேருக்கும் உரிய பயன்கள் கொண்டு போய் சேர்க்கப்பட்டுள்ளன.
  • கட்டடங்கள்,  கட்டுமானத் தொழிலாளர்கள் 2.20 கோடி பேருக்கு ரூ.3492.57 கோடி அளவிலான நிதி உதவிகள் அளிக்கப்பட்டுள்ளன.
  • இதுவரையில் 36 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் 67.65 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு உணவு தானியங்களை ஏப்ரல் மாத ஒதுக்கீட்டில் பெற்றுள்ளன. இந்த 36 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் ஏப்ரல் மாதத்துக்கு 60.33 கோடி பயனாளிகளுக்கு 30.16 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு உணவு தானியங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. 22 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில்  மே மாதத்துக்கு 12.39 கோடி பயனாளிகளுக்கு 6.19 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு உணவு தானியங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
  • பல்வேறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு 2.42 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு வகைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 19.4 கோடி பயனாளிகளில் 5.21 கோடி பேருக்கு பருப்பு வகைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
  • இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரையில், பிரதமரின் உஜ்வாலா திட்ட பயனாளிகள் 5.09 கோடி சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பதிவு செய்துள்ளனர். இவற்றில் ஏற்கெனவே 4.82 கோடி சிலிண்டர்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
  • தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து, திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியம் இல்லாத வகையில் 9.6 லட்சம் உறுப்பினர்கள் தங்கள் கணக்குகளில் இருந்து ரூ.2985 கோடி அளவுக்கு பணம் எடுத்துக் கொண்டுள்ளனர்.
  • 44.97 லட்சம் தொழிலாளர்களுக்கான 24 சதவீத தொழிலாளர் வருங்கால நிதித் திட்ட பங்களிப்பாக ரூ.698 கோடி செலுத்தப் பட்டுள்ளது.
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தில், 01.04.2020ல் இருந்து ஊதியம் உயர்வுக்கு அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் 5.97 கோடி மனித வேலை நாட்கள் அளவுக்கு வேலைகள் உருவாக்கப் பட்டுள்ளன. மேலும், ஊதியம் மற்றும் பொருட்களின் நிலுவைகளை வழங்குவதற்காக பணம் எடுப்பதற்கு மாநிலங்களுக்கு ரூ.21,032 கோடி வழங்கப்பட்டுள்ளது.
  • அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மையங்களில் வேலை பார்க்கும் மருத்துவ அலுவலர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. 22.12 லட்சம் சுகாதாரப் பணியாளர்களுக்கான இத்திட்டத்தை நியூ இந்தியா அசூரன்ஸ் நிறுவனம் அமல் செய்கிறது.

 

பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வு திட்ட தொகுப்பு உதவிகள் 05/05/2020 வரையில் நேரடி பயன் வழங்கல் விவரம்

 

திட்டம்

பயனாளிகள் எண்ணிக்கை

தொகை

பிரதமரின் ஜன்தன் திட்டத்தில் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கான உதவி

1 வது தவணை - 20.05 கோடி (98.3%)

2வது தவணை - 5.57 கோடி

1வது தவணை - 10025 கோடி

2வது தவணை – 2785 கோடி

என்.எஸ்.ஏ.பி. உதவி (வயதானவிதவையர் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள்)

2.82 கோடி (100%)

1405 கோடி

பிரதமரின் வேளாண் திட்டத்தின் கீழ் முன்கூட்டியே வழங்கிய உதவி

8.19 கோடி

16394 கோடி

கட்டடம் பிற கட்டுமான தொழிலாளர்களுக்கு உதவி

2.20 கோடி

3493 கோடி

தொழிலாளர்களுக்கு 24% பங்களிப்பு

.45 கோடி

698 கோடி

 

மொத்தம்

39.28 கோடி

34800 கோடி



(Release ID: 1621567) Visitor Counter : 266