ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

கோவிட் 19 நிலைமையில் பிரதமர் ஜன் ஔஷதி கேந்திரங்கள் (PMJAK) மிக முக்கியமான பங்காற்றுகின்றன: மான்சுக் மாண்டவியா

Posted On: 04 MAY 2020 5:44PM by PIB Chennai

கோவிட் -19  பரவல் நிலைமைகளில் ஜன் ஷதி கேந்திரங்கள் மிக முக்கியமான பங்காற்றி வருகின்றன என்று மத்திய கப்பல் மற்றும் ரசாயனம் மற்றும் உரத்துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். தரமான மருந்துகளை குறைந்த கட்டணத்தில் வாங்குவதற்காக, நாளொன்றுக்கு சுமார் 10 லட்சம் பேர், 6000 ஜன் ஷதி கேந்திரங்களுக்கு வருகிறார்கள். இந்தக் கேந்திரங்கள் மூலம் ஹைட்ராக்ஸி குளோரோகுவின் மருந்தும் விற்பனை செய்யப்படுகிறது.

 

மத்திய மருந்தாளுமைத் துறை மேற்கொண்ட, பிரதமர் பாரதிய ஜன் ஷதி பரியோஜனா (PMBJP) என்ற உன்னதமான திட்டத்தின் கீழ்தான் ஜன் ஓளஷதி கேந்திரங்கள் திறக்கப்பட்டுள்ளன. அனைத்து ஜெனரிக் மருந்துகளும் தரமானதாக, குறைந்த கட்டணத்தில் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற பிரதமரின் கனவு இத்திட்டத்தின் மூலம் நனவாகிறது.

 

பிரதமர் பொறுப்பேற்றதிலிருந்தே, பிரதமர் திரு நரேந்திர மோடி ஜன் ஷதி கேந்திராக்கள் திறப்பதற்கு மிகவும் ஊக்கமளித்து வருகிறார். ஐந்தரை ஆண்டு கால ஆட்சியில், நாடு முழுவதும் சுமார் 6000 ஜன் ஷதி கேந்திரங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில், சராசரியான சந்தை விலையை விட 50 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை குறைவான கட்டணத்தில், தரமான மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன.

 



(Release ID: 1621016) Visitor Counter : 231