வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்

மூங்கில் வளம் மிகுந்துள்ள நிலையில், கோவிட் நோய் பாதிப்புக்குப் பிந்தைய காலகட்டத்தில் இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன: டாக்டர் ஜிதேந்திர சிங்.

Posted On: 03 MAY 2020 5:07PM by PIB Chennai

இந்தியாவில் மூங்கில் வளம் அதிகமாக இருப்பதால், கோவிட் பாதிப்புக்குப் பிந்தைய காலத்தில் பொருளாதார வல்லரசாக மாறுவதற்கு இந்தியாவுக்கு வாய்ப்புகள் உள்ளன என்று  வட கிழக்குப் பிராந்திய வளர்ச்சிக்கான (தனிப் பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், மக்கள் குறைதீர்வு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை மத்திய இணை அமைச்சர்  டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

மூங்கில் வளம் குறித்த மாநாட்டில் காணொளி மூலம் அமைச்சர் உரையாற்றிய போது இந்தக் கருத்தைத் தெரிவித்தார். வடகிழக்குப் பிராந்திய வளர்ச்சி அமைச்சகம், வேளாண்மை அமைச்சகத்தின் பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய துறைகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்தியாவின் மூங்கில் வளத்தில் 60 சதவீதம் அளவுக்கு வட கிழக்குப் பிராந்தியத்தில் இருப்பதாகத் தெரிவித்த அவர், இது பெரிய சாகதமான சூழ்நிலையாக இருக்கும் என்று கூறினார். வட கிழக்குப் பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு அதிகபட்ச முன்னுரிமை தரும் நிலையில் இதை பெரிய வளமாகப் பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். சுதந்திரம் பெற்றதில் இருந்து பெற்றிராத வளமான வாய்ப்புகளை இத் துறையில் உருவாக்க முடியும் என்று அவர் கூறினார். நூறு ஆண்டுகள் பழமையான இந்திய வனச் சட்டத்தை மோடி அரசு 2017இல் திருத்தியது பற்றிக் குறிப்பிட்ட அவர், இதன் விளைவாக வீடுகளில் மூங்கில் வளர்ப்பதற்கு அனுமதி தரப்பட்டுள்ளது என்றும், இதனால் மூங்கிலை அடிப்படையாகக் கொண்ட வாழ்வாதாரங்கள் பெருகும் என்றும் கூறினார்.


(Release ID: 1620707) Visitor Counter : 182