உள்துறை அமைச்சகம்
கொவிட்-19 முடக்க நிலை கட்டுப்பாடுகளால் நாடெங்கிலும் தவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்
Posted On:
01 MAY 2020 4:47PM by PIB Chennai
கொவிட்-19 முடக்க நிலை கட்டுப்பாடுகளால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தவித்துக் கொண்டிருக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், யாத்ரிகர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் மற்றவர்கள் செல்வதற்காக, ரயில்வே அமைச்சகம் சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்து ஆணை பிறப்பித்துள்ளது.
இவர்கள் செல்வதற்கு வசதியாக, மாநில அரசுகள் / யூனியன் பிரதேசங்களுடன் ஒருங்கிணைக்கும் பணிக்காக தனி அலுவலர்களை ரயில்வே அமைச்சகம் நியமிக்க உள்ளது. பயணச் சீட்டு விற்பனை, சமூக இடைவெளி மற்றும் பிற பாதுகாப்பு நடவடிக்கைகளை, ரயில் நிலையங்கள், நடைமேடைகள் மற்றும் ரயில்களுக்குள் கடைபிடிப்பதற்காக விரிவான நெறிமுறைகளையும் ரயில்வே அமைச்சகம் வெளியிட உள்ளது.
Click here to see the Official Communication to States/UTs : https://static.pib.gov.in/WriteReadData/userfiles/MHA%20Order%2001.05.2020%20-%20Special%20Trains%20for%20Stranded%20Persons.jpeg
(Release ID: 1620124)
Visitor Counter : 262
Read this release in:
Punjabi
,
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam