மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

பல்வேறு தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவங்களைத் தாக்கல் செய்வதற்கான தேதிகள் தேசிய சோதனை முகமையால் நீட்டிப்பு / மாற்றியமைப்பு

Posted On: 30 APR 2020 7:42PM by PIB Chennai

கோவிட்-19 பெருந்தொற்று பரவலைத் தொடர்ந்து பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ பலவேறு தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தாக்கல் செய்யும் தேதியை நீட்டிக்கவோ, மாற்றியமைக்கவோ வேண்டும் என்று தேசிய சோதனை முகமை என்டிஏவுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அதன்படி, என்டிஏ பல்வேறு தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான தேதியை மேலும் நீட்டித்தும், மாற்றியமைத்தும் அறிவித்துள்ளது.

நீட்டிக்கப்பட்ட/ மாற்றியமைக்கப்பட்ட தேதிகள் வருமாறு-

 

வரிசை

எண்

தேர்வு

தற்போதைய தேதிகள்

மாற்றிய மைக்கப்பட்ட/ நீட்டிக்கப்பட்ட தேதிகள்*

 

முதல்

வரை

முதல்

வரை

 

01

ஹோட்டல் மேலாண்மைக்கான தேசிய கவுன்சில்

 

  (NCHM) JEE-

2020

01.01.2020

30.04.2020

01.03.2020

15.05.2020

 

02

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (IGNOU) நுழைவுத் தேர்வு-2020 Ph.D. and OPENMAT(MBA)

28.02.2020

30.04.2020

01.03.2020

15.05.2020

 

03

இந்திய வேளாண் ஆராய்ச்சிகவுன்சில் (ICAR)-2020

01.03.2020

30.04.2020

01.03.2020

15.05.2020

 

 

04

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு

 (JNUEE)-2020

02.03.2020

30.04.2020

02.03.2020

15.05.2020

 

05

அகில இந்திய ஆயுஷ் முதுநிலைப்பட்ட நுழைவுத் தேர்வு

(AIAPGET)-2020

01.05.2020

31.05.2020

06.05.2020

05.06.2020

 

‘*’  தாக்கல் செய்யப்படும் ஆன்லைன் விண்ணப்பப் படிவங்கள் மாலை 4 மணி வரை பெற்றுக்கொள்ளப்படும். செலுத்தப்படும் கட்டணம் இரவு 11.50 மணி வரை பெறப்படும்.

உரிய கட்டணத்தை கிரெடிட், டெபிட் அட்டைகள், நெட் பாங்கிங், யுபிஐ, பே டிஎம் மூலம் செலுத்தலாம்.

15.05.2020க்குப் பின்னர் நிலைமையை ஆய்வு செய்து, நுழைவு அட்டைகளைப் பதிவிறக்கம் செய்வதற்கான மற்றும் தேர்வு குறித்த விரிவான அட்டவனை தனியாக சம்பந்தப்பட்ட வலைதளங்களில் வெளியிடப்படும். இதை www.nta.ac.in என்ற தளத்தில் காணலாம்.

கல்வியாண்டின் அட்டவனையின் முக்கியத்துவத்தை என்டிஏ புரிந்து கொண்டிருக்கும் அதே நிலையில், மாணவர்கள் உள்பட ஒவ்வொரு குடிமகனின் நலனையும் அது சமமாகப் பாவித்துள்ளது.

தேர்வுகள் குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர் கவலைப்படத் தேவையில்லை என என்டிஏ எதிர்பாக்கிறது. மேலும், இந்தக் கால நிலையை, தேர்வுக்கு தயாராவதில் மாணவர்களுக்குப் பெற்றோர் உதவ வேண்டும். படிப்பதில் இடைவெளி ஏதாவது இருந்தால் அதனைச் சரி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். தேர்வுகள் பற்றிய தற்போதைய நிகழ்வுகள் குறித்து என்டிஏ அவ்வப்போது மாணவர்களுக்குத் தெரிவிப்பதுடன், மாற்றங்களையும் போதிய கால அவகாசத்துடன் அறிவிக்கும்.

தற்போதைய நிகழ்வுகள் பற்றித் தெரிந்து கொள்ள பெற்றோரும், மாணவர்களும் சம்பந்தப்பட்ட தேர்வுகள் பற்றிய வலைதளங்களை www.nta.ac.in அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு 8287471852, 8178359845, 9650173668, 9599676953, 8882356803 என்ற தொலைபேசி எண்களையும் தொடர்பு கொள்ளலாம்.

-------------------------------------------------------------------



(Release ID: 1620016) Visitor Counter : 214