பிரதமர் அலுவலகம்
பிரதமர் நரேந்திர மோடி, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா இடையே தொலைபேசி உரையாடல்
Posted On:
29 APR 2020 8:19PM by PIB Chennai
பிரதமர் நரேந்திர மோடி பங்களாதேஷ் குடியரசின் பிரதமர் ஷேக் ஹசீனா - உடன் இன்று தொலைபேசி மூலம் உரையாடினார்.
ரமலான் புனித மாதத்தையொட்டி பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கும், பங்களாதேஷ் மக்களுக்கும், பிரதமர் மோடி, தமது சார்பிலும் இந்திய மக்களின் சார்பிலும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
உலக அளவிலான கோவிட்19 தொற்று தாக்கத்தினால், தங்களது பகுதியின் நிலைமைகள் குறித்தும், தத்தமது நாடுகளில் இந்த நோயை ஒழிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் இரு தலைவர்களும் பகிர்ந்து கொண்டனர்.
சார்க் நாடுகளின் தலைவர்களுக்கிடையே மார்ச் 15ம் தேதி அன்று ஒப்புக்கொள்ளப்பட்ட சிறப்பு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர். சார்க் கோவிட் 19, அவசரகால நிதியத்திற்கு 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் அளித்தமைக்கு பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு, பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
இந்த மண்டலத்தில், கோவிட்19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்வதற்கு தலைமை ஏற்றுள்ளதற்காகவும், பங்களாதேஷிற்கு மருத்துவப் பொருட்களும், திறன் கூட்டுவதற்கான உதவிகளும் அளித்ததற்காகவும், பிரதமர் மோடிக்கு பிரதமர் ஷேக் ஹசீனா நன்றி தெரிவித்தார்.
சாலை வழி, ரயில் வழி, உள்நாட்டு நீர்வழி மற்றும் வான்வழி போக்குவரத்து மூலமாக எல்லைகளுக்கிடையிலான அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவது தொடருவது குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். இரு நாடுகளுக்கும் இடையே நிலவுகின்ற வரலாறு, கலாச்சாரம், மொழி, சகோதரத்துவம் ஆகிய பந்தங்களை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கும் இடையே, மிகச்சிறந்த முறையில் உள்ள, இரு தரப்பு உறவுகள் குறித்து திருப்தி தெரிவித்தார். கோவிட் 19 தொற்று பரவுவதைத் தடுப்பதற்கும், இந்த பெருந்தொற்றினால் ஏற்படும் சுகாதார, பொருளாதார பாதிப்புகளை அகற்றவும், பங்களாதேஷுக்கு உதவுவதற்கு இந்தியா எப்பொழுதும் தயாராக உள்ளதாக பிரதமர் உறுதியளித்தார்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த முஜிப் பர்ஷோவின் போது, பிரதமர் ஷேக் ஹசீனா வும், நட்புறவு கொண்ட பங்களாதேஷ் மக்கள் அனைவரும், நல்ல ஆரோக்கியத்துடனும், நலமுடனும் இருக்க, தமது நல்வாழ்த்துக்களைப் பிரதமர் மோடி தெரிவித்துக் கொண்டார்.
*****
(Release ID: 1619896)
Visitor Counter : 233
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam