சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 குறித்த அண்மைச் செய்திகள்

Posted On: 30 APR 2020 5:37PM by PIB Chennai

அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் கொவிட் சாராத சுகாதார நடவடிக்கைகள் நடைபெறுவதை உறுதி செய்வதற்காகபோதிய ரத்தக் கையிருப்பை உறுதி செய்யுமாறு அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் சுகாதார அமைச்சர்களுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் கடிதம் எழுதியுள்ளார். குறிப்பாக, தலசீமியா, அரிவாள் செல் சோகை மற்றும் ஹீமோபிலியா என்னும் குருதி உறையாமல் போகும் தன்மை ஆகிய ரத்தக் குறைபாடுகளால் தொடர் ரத்த மாற்றம் தேவைப்படுவோருக்காக அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவசர சிகிச்சைகள் தேவைப்படும் நோயாளிகளுக்கு அவை கிடைப்பதற்காக, அனைத்து சுகாதார வசதிகளும், குறிப்பாக தனியார் துறையில், செயல்பாட்டில் இருப்பதை உறுதி செய்யுமாறு மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. கூழ்மப்பிரிப்பு, ரத்த மாற்றம்கீமோதெரபி மற்றும் வழக்கமான நோயாளிகளுக்கு சேவைகளை வழங்க பல தனியார் மருத்துவமனைகள் மறுத்து வருவதாகத் தெரிய வந்துள்ளதாகவும், இது ஏற்றுக்கொள்ள முடியாததென்றும் மாநிலங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் 15 ஏப்ரல், 2020 அன்று வெளியிட்டிருந்த வழிமுறைகளின் படி, பொது முடக்கத்தின் போது அனைத்து சுகாதாரச் சேவைகளும் செயல்பாட்டில் இருக்க வேண்டும் என்று மாநிலங்கள்/யூனியன் பிரேதசங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக தனியார் துறையில் சேவை வழங்குபவர்களுக்கு போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படலாம்கூழ்மப்பிரிப்புக்கு 7, ஏப்ரல் 2020 அன்றும், ரத்த தானம் மற்றும் மாற்றத்துக்கு 9 ஏப்ரல், 2020 அன்றும் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகமும் ஒரு விரிவான வழிமுறையை நிலையான செயல்பாட்டு முறையுடன் வெளியிட்டிருந்தது. அவற்றை  https://www.mohfw.gov.in/ என்னும் முகவரியில் காணலாம்.

கொவிட்-19 பரவலில் போது அத்தியாவசிய சுகாதாரச் சேவைகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய, சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் 20 ஏப்ரல், 2020 அன்று ஒரு வழிகாட்டுதலை வெளியிட்டது. குழந்தை பிறப்பு மற்றும் குழந்தை நலம், நோய்த் தடுப்பு, காச நோய், தொழு நோய், ஏந்திகள் வழியாகப் பரவும் நோய்கள், மற்றும் புற்றுநோய், கூழ்மப்பிரிப்பு போன்ற தொற்றாத நோய்கள் ஆகியவற்றுக்கு அத்தியாவசிய சேவைகளை அளிப்பதை குறித்ததாகும் இது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் 17 ஏப்ரல், 2020 அன்று வெளியிட்ட கொவிட்-19க்கான பரிசோதனை வழிமுறைகளையும் பின்பற்றுமாறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்க்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

சுகாதாரச் சேவை வழங்குபவர்கள் மத்தியில் இந்த நெறிமுறை பரப்பப்பட வேண்டும், மற்றும்  கொவிட்-19 பரிசோதனை நெறிமுறைப்படி தான் நடத்தப்பட வேண்டும்.

முக்கியமான சேவைகள், குறிப்பாக பரிசோதனை வலியுறுத்தப்படும் சேவைகளை மறுத்தால், அது குறித்த குறைகள் வேகமாக களையப்படுதல் உறுதிசெய்யப்பட வேண்டும் என மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. சுகாதாரச் சேவைகள் துறையினருடன் கலந்தாலோசித்து அவர்களின் நிச்சயமில்லாத்தன்மையை குறைத்து, மருத்துவ மையங்கள் மற்றும் மருத்துவமனைகள் செயல்பாட்டில் தொடர்ந்து இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்

8,324 நபர்கள் இது வரை குணமடைந்துள்ளனர். இது நமது மொத்த குணமடையும் விகிதத்தை 25.19 சதவீதத்திற்கு எடுத்துச் செல்கிறது. தற்போது வரை உறுதிப்படுத்தப்பட்டுள்ள பாதிப்புகள் 33,050. இந்தியாவில் உள்ள கொவிட்-19 உறுதிபடுத்தப்பட்டுள்ள பாதிப்புகள், நேற்றிலிருந்து 1718 என்னும் அளவில் அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இது வரை நடந்துள்ள மரணங்களை ஆய்வு செய்யும் போது, பாதிப்புகளின் இறப்பு விகிதம் 3.2 சதவீதம் ஆகவும், இதில் ஆண்கள் 65 சதவீதம் மற்றும் பெண்கள் 35 சதவீதம் ஆகவும் இருக்கின்றனர். வயது விகிதத்தை பார்க்கும் போது, 14 சதவீதம் பேர் 45 வயதுக்கு குறைவானவர்களாகவும், 34.8 சதவீதம் பேர் 45-60 வயதுக்குட்டபட்டவர்களாகவும், 51.2 சதவீதம் பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும் இருக்கின்றனர். அதில் 42 சதவீதம் பேர் 60 முதல்75 வயதினராகவும், 9.2 சதவீதம் பேர் 75 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும் மற்றும் 78 சதவீதம் பேர் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் இதர நோய்களைக் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர்.

இரட்டிப்பு ஆகும் விகிதத்தை நாடு முழுவதும் ஆய்வு செய்த போது, பொது முடக்கத்துக்கு முன்னர் இருந்த 3.4 நாட்களில் இரட்டிப்பாகும் நிலையிலிருந்து மாறி, தற்போது இது 11 நாட்களாக இருப்பது தெரிய வந்துள்ளது.

நாட்டின் சராசரியை விட குறைவான இரட்டிப்பு விகிதம் இருக்கும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் பின்வருமாறு:

தில்லி, உத்திர பிரதேசம், ஜம்மு - காஷ்மீர், ஒடிஷா, ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இரட்டிப்பு விகிதம் 11 முதல் 20 நாட்கள் வரை இருக்கிறது. கர்நாடகா, லடாக், ஹரியானா, உத்திரகாண்ட் மற்றும் கேரளா ஆகியவற்றின் இரட்டிப்பு விகிதம் 20 முதல் 40 நாட்கள் ஆகும். அஸ்ஸாம், தெலங்கானா, சத்தீஸ்கர் மற்றும் ஹிமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இரட்டிப்பு விகிதம் 40 நாட்களுக்கும் அதிகம் ஆகும்.(Release ID: 1619754) Visitor Counter : 24