அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

பொது முடக்கத்துக்கு இடையே, ஆய்வு மேம்பாடு, தொழில்நுட்பங்கள் மற்றும் பொருள்கள் மூலம் கொவிட் 19 பெருந்தொற்றை எதிர்கொள்ள ஸ்ரீ சித்திரத் திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் தயாராக உள்ளது.

Posted On: 29 APR 2020 12:30PM by PIB Chennai

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தேசிய முக்கியத்துவம் பெற்ற அமைப்பான ஸ்ரீ சித்ரத் திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (SCTIMST), ஆராய்ச்சி - தொழில்நுட்பங்கள் மற்றும் புதுமைகள் மூலம் இந்தியாவின் கொவிட் 19க்கு எதிரான போரில், தற்போதைய தேவைகளைப் பூர்த்தி செய்து தனித்து விளங்குகிறது.

தேசிய பொதுமுடக்கத்துக்கு மிகவும் முன்பாகவே வெளிநாட்டில் இருந்து திரும்பிய மருத்துவர் ஒருவருக்கு கொவிட் - 19 பாதிப்பு உறுதியானதால், பல பணியாளர்களை இந்த நிறுவனம் தனிமைப்படுத்தி இருந்தாலும், நோய்களைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றக்கூடிய பல தொழில்நுட்பங்களையும் பொருள்களையும் உருவாக்கி வெளிக்கொண்டு வந்து ஸ்ரீ சித்ரத் திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் தேவைக்கேற்ப எழுந்து நிற்கிறது. மூன்றே வாரங்களில் தயாரிக்கப்பட்ட கொவிட் -19 உறுதிப்படுத்தும் பரிசோதனைக் கருவி, துரித பரிசோதனைக்கான இந்தியாவின் அவசரத் தேவையை பூர்த்தி செய்யலாம். முகக்கவசம், தலை உறை மற்றும் முகப் பாதுகாப்பு கவசங்கள் ஆகியவற்றைத் தூய்மைபடுத்துவதற்கு சுகாதாரப் பணியாளர்களால் மருத்துவமனைகளிலும் பொது இடங்களிலும் உபயோகப்படுத்தப்படும் புற ஊதா அடிப்படையிலான முகக்கவச சேகரிப்புத் தொட்டி, பாதிக்கப்பட்ட சுவாசக் கசிவுகளின் பாதுகாப்பான மேலாண்மைக்காக, சுவாச திரவம் மற்றும் இதர உடல் திரவங்களை திடப்படுத்துதல் மற்றும் கிருமி நீக்கலுக்கான சிறப்பான உறிஞ்சும் தன்மை உள்ள பொருள், மற்றும் கொவிட் -19 நோயளிகளை பரிசோதிப்பதற்காக கிருமி நீக்கம் செய்யப்பட்ட தடுப்புப் பரிசோதனை அறை ஆகியவை மற்ற ஆராய்ச்சி  மேம்பாட்டுப் பணிகளாகும்.

 

கொவிட் - 19 பத்தே நிமிடத்தில் உறுதிப்படுத்தும் பரிசோதனைக் கருவி, மாதிரி எடுப்பது முதல் முடிவு வருவது வரை (RNA பஞ்சில் எடுப்பது முதல் RT-LAMP கண்டுபிடித்தல் வரை) அனைத்தையும் இரண்டு மணி நேரத்துக்குள்ளாகவே சொல்லிவிடும். இந்த வகையில் உலகத்தின் முதல் ஒரு சிலவற்றில் இதுவும் ஒன்று. மாதிரிகளின் துரிதப் பரிசோதனையைக் குறைந்த விலையில் செய்ய அனுமதிக்கும் இந்தக் கருவியில், ஒரே அடுக்கில் ஒரே கருவியில் மொத்தம் 30 மாதிரிகளைப் பரிசோதனை செய்யலாம்.

முகக்கவசங்கள் போன்ற உபயோகப்படுத்தப்பட்ட பொருள்களைத் தூய்மைப்படுத்துவதன் மூலம், குறிப்பாக மருத்துவமனைகளில் தொற்று சங்கிலியைச் சிதைப்பதற்கு, சித்ரா புற ஊதா சார்ந்த முகக்கவச சேகரிப்புத் தொட்டி உதவும்.

***    


(Release ID: 1619242) Visitor Counter : 202