விவசாயத்துறை அமைச்சகம்
                
                
                
                
                
                
                    
                    
                        ஊரடங்குக்கு மத்தியில் நாடு முழுவதும் கோதுமை அறுவடை விறுவிறுப்பாகத் தொடர்கிறது
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                28 APR 2020 1:34PM by PIB Chennai
                
                
                
                
                
                
                ஊரடங்குக்கு இடையேயும், கோதுமை அறுவடை நாடு முழுவதும் விறுவிறுப்பான வேகத்தில் தொடர்கிறது. நடப்பாண்டு (Kharif 2020) அறுவடையின் போது, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மூலம் அரசின் நிலையான இயக்க நடைமுறை பின்பற்றப்படுகிறது. விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும், கொரானா வைரசைக் கட்டுப்படுத்துவதற்கும் இந்திய அரசின் வேளாண்மைத் துறை, மற்றும் விவசாயிகள் கூட்டுறவு நலத்துறை, ஆகியவை இணைந்து மாநிலங்களுக்கு நிலையான இயக்க நடைமுறை (SOP) குறித்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. 
மாநிலங்கள் அறிவித்தபடி, கோதுமைப் பயிரின் அறுவடை மத்தியப்பிரதேசத்தில் 98 முதல் 99 சதவீதம், ராஜஸ்தானில் 92 முதல் 95 சதவீதம், உத்தரபிரதேசத்தில் 85 முதல் 88 சதவீதம், ஹரியானாவில் 55 முதல் 60 சதவீதம், பஞ்சாபில் 60 முதல் 65 சதவீதம் மற்றும் இதர மாநிலங்களில் 87 முதல் 88 சதவீதம் ஆகும்.
குறுவை  சாகுபடி 2020-21க்கான அறுவடை தற்போது நடைபெற்று வரும் நிலையில், விலை ஆதரவுத் திட்டத்தின் (PSS) கீழ் குறைந்தபட்ச ஆதரவு விலையில் விவசாயிகளிடமிருந்து பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களைக் கொள்முதல் செய்வது தற்போது கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் நடந்து வருகிறது. ஊரடங்கு காலத்தில் இந்தப் பயிர்களின் கொள்முதல் விவரம் வருமாறு:
	- ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் இருந்து 72,415.82 மெட்ரிக் டன் கடலைப் பருப்பு (Chana) வாங்கப்பட்டுள்ளது.
- தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் மற்றும் ஒடிசா ஆகிய 7 மாநிலங்களில் இருந்து 1,20,023.29 மெட்ரிக் டன் துவரம் பருப்பு வாங்கப்பட்டுள்ளது
- ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானா ஆகிய 3 மாநிலங்களில் இருந்து 1,83,400.87 மெட்ரிக் டன் கடுகு வாங்கப்பட்டுள்ளது.
                
                
                
                (Release ID: 1618921)
                Visitor Counter : 202
                
                
                
                    
                
                
                    
                
                Read this release in: 
                
                        
                        
                            English 
                    
                        ,
                    
                        
                        
                            Urdu 
                    
                        ,
                    
                        
                        
                            हिन्दी 
                    
                        ,
                    
                        
                        
                            Marathi 
                    
                        ,
                    
                        
                        
                            Manipuri 
                    
                        ,
                    
                        
                        
                            Bengali 
                    
                        ,
                    
                        
                        
                            Assamese 
                    
                        ,
                    
                        
                        
                            Punjabi 
                    
                        ,
                    
                        
                        
                            Gujarati 
                    
                        ,
                    
                        
                        
                            Odia 
                    
                        ,
                    
                        
                        
                            Telugu 
                    
                        ,
                    
                        
                        
                            Kannada 
                    
                        ,
                    
                        
                        
                            Malayalam