மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

கொவிட்-19 விளைவாக உருவாகியுள்ள சூழ்நிலைகள் குறித்து நாடு முழுவதிலும் இருக்கும் பெற்றோர்களிடம், மத்திய மனித வள மேம்பாடு அமைச்சர், இணையக் கருத்தரங்கு மூலம் உரையாடினார்

Posted On: 27 APR 2020 6:46PM by PIB Chennai

கொவிட்-19 விளைவாக உருவாகியுள்ள சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதிலும் இருக்கும் பெற்றோர்களிடம், மத்திய மனித வள மேம்பாடு அமைச்சர், திரு. ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்', இணையக் கருத்தரங்கு மூலம் உரையாடினார். ஆன்லைன் கல்வியைப் பற்றி அமைச்சகத்தால் நடத்தப்படும் பல்வேறு பிரச்சாரங்களைப் பற்றியும், திட்டங்கள் குறித்தும் இணையக் கருத்தரங்கின் போது, அனைத்து பெற்றோர்களுக்கும் அமைச்சர் தெரிவித்தார். மாணவர்களின் கல்விச் செயல்பாடுகளைப் பற்றி அமைச்சகம் அக்கறையோடு இருப்பதாகவும், அதன் காரணமாகவே, தற்போது அமலில் உள்ள பல திட்டங்களை போர்கால அடிப்படையில் நாங்கள் செயல்படுத்தினோம் என்றும், இதனால் நாட்டில் உள்ள 33 கோடி மாணவர்கள் பயனடைவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்த மத்திய அமைச்சர், தற்போது முன்னெப்போதும் கண்டிராத நெருக்கடியை நாடு சந்தித்து வருவதாகத் தெரிவித்தார். தங்கள் குழந்தைகளின் படிப்பைப் பற்றியும், எதிர்காலம் குறித்தும் கவலைப்படுவதால், பெற்றோர்களுக்கு இது இன்னும் கஷ்டத்தை அளிக்கிறது. மாணவர்களின் ஒளிமயமான எதிர்காலத்துக்காக அவர்களுக்குத் தரமான கல்வியை அளிக்க மனித வள மேம்பாடு அமைச்சகம் உறுதி பூண்டுள்ளதாக திரு. பொக்ரியால் பெற்றோர்களுக்கு உறுதியளித்தார். இந்த திசையில், -பாட்ஷாலா, தேசிய திறந்தவெளிக் கல்வி வளங்களின் களஞ்சியம் (NROER), ஸ்வயம், வீட்டுக்கு நேரடியாக வரும் (DTH) ஸ்வயம் பிரபா அலைவரிசை ஆகியவற்றின் மூலமாக அனைத்து மாணவர்களுக்கும் கல்வியைத் தொடர்ந்து வழங்க அமைச்சகம் முயல்வதாக மத்திய அமைச்சர் கூறினார்.

ஆன்லைன் கல்விக் கொள்கையை வலுப்படுத்துவதற்காக நாங்கள் பாரத் பதே ஆன்லைன் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளோம், இதன் மூலம் நாடெங்கிலும் உள்ள பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் இருந்து ஆலோசனைகளை வரவேற்றுள்ளோம் என்று திரு. பொக்ரியால் தெரிவித்தார். பத்தாயிரத்துக்கும் அதிகமான ஆலோசனைகள் வந்துள்ளன. அமைச்சகம் இவற்றைப் பரிசீலித்து வழிகாட்டுதல்களை விரைவில் வெளியிடும்.

***



(Release ID: 1618877) Visitor Counter : 161