நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
                
                
                
                
                
                
                    
                    
                        மத்திய  இருப்புக்கு துரிதமாக நடை பெறும் கோதுமை கொள்முதல் நடவடிக்கைகள்
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                27 APR 2020 7:36PM by PIB Chennai
                
                
                
                
                
                
                
நாட்டில் கோதுமை கொள்முதல் செய்யக்கூடிய அனைத்து முக்கிய மாநிலங்களில் இருந்தும் கோதுமை கொள்முதல் செய்யும் பணிகள் வெகு விரைவாக நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 26 ம் தேதி வரையிலான காலத்தில், மத்திய இருப்புக்கு 88.61 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் பஞ்சாபிலிருந்து அதிகபட்சமாக 48.27 லட்சம் மெட்ரிக் டன் மற்றும் ஹரியானாவில் இருந்து 19.07 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கொள்முதல் நடவடிக்கைகளுக்கான கால அளவை வைத்துப் பார்க்கையில், இந்தப் பருவத்தில் 400 லட்சம் மெட்ரிக் டன் இலக்கை அடைய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவிட் 19 வைரஸ் பரவும் அச்சுறுத்தல் நிலவுவதைக் கருத்தில் கொண்டு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடனும், மண்டிகளில் சமூக இடைவெளியை உறுதி செய்து கொண்டு, கொள்முதல் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
 
விவசாயிகள் எந்தவித சிரமத்திற்கும் உள்ளாகி விடக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவதற்காக அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப் படுகின்றன. தேவைக்கும் அதிகமாக உள்ள இடங்களிலிருந்து, தேவை உள்ள பகுதிகளுக்கு, உணவு தானியங்கள் அனுப்பப்படும் பணியை இந்திய உணவுக் கழகம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. பொது முடக்க காலத்தின்போது ரயில் மூலமான சரக்குப்போக்குவரத்து, 2000 எண்ணிக்கையைத் தாண்டியது. ஏப்ரல் 27 ம் தேதி வரையிலான காலத்தில் 2087 ரயில்கள் மூலம் 58.44 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியப் பொருட்கள் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ், உணவு தானியங்கள் தேவைப்படும் பல இடங்களுக்கும் ஏற்றிச் செல்லப்பட்டன.
 
                
                
                
                
                
                (Release ID: 1618876)
                Visitor Counter : 198
                
                
                
                    
                
                
                    
                
                Read this release in: 
                
                        
                        
                            Gujarati 
                    
                        ,
                    
                        
                        
                            English 
                    
                        ,
                    
                        
                        
                            Urdu 
                    
                        ,
                    
                        
                        
                            Marathi 
                    
                        ,
                    
                        
                        
                            हिन्दी 
                    
                        ,
                    
                        
                        
                            Bengali 
                    
                        ,
                    
                        
                        
                            Assamese 
                    
                        ,
                    
                        
                        
                            Manipuri 
                    
                        ,
                    
                        
                        
                            Punjabi 
                    
                        ,
                    
                        
                        
                            Odia 
                    
                        ,
                    
                        
                        
                            Telugu 
                    
                        ,
                    
                        
                        
                            Kannada