பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதைக் குறைக்கும் எண்ணம் இல்லை, அப்படி எந்த ஒரு திட்டமும் அரசின் எந்த மட்டத்திலும் விவாதிக்கப்படவோ அல்லது சிந்திக்கப்படவோ இல்லை: டாக்டர். ஜிதேந்திர சிங்
Posted On:
26 APR 2020 7:02PM by PIB Chennai
அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 50 ஆக குறைக்க அரசு திட்டமிட்டு வருவதாக ஊடகங்களின் ஒரு பிரிவில் வந்த செய்திகளை திட்டவட்டமாக மறுத்த மத்திய வட கிழக்கு மாகாண வளர்ச்சி அமைச்சக இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர், டாக்டர். ஜிதேந்திர சிங், ஓய்வு பெறும் வயதைக் குறைக்கும் எந்த எண்ணமும் இல்லை என்றும், அப்படி எந்த ஒரு திட்டமும் அரசின் எந்த மட்டத்திலும் விவாதிக்கப்படவோ அல்லது சிந்திக்கப்படவோ இல்லை என்றும் தெரிவித்தார்.
அரசு வட்டாரங்களை அல்லது பணியாளர் மற்றும் பயிற்சித் துறையை மேற்கோள் காட்டி, இப்படி ஒரு தவறான தகவலை சில தூண்டப்பட்ட சக்திகள், ஊடகத்தின் ஒரு பிரிவில் கடந்த சில நாட்களாக மீண்டும் மீண்டும் பரப்பி வருவதாக டாக்டர். ஜிதேந்திர சிங் கூறினார். தொடர்புடையவர்களின் மனதில் உள்ள குழப்பத்தைக் களைய ஒவ்வொரு தடவையும் சரியான மறுப்பு தெரிவிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். நாடு கொரோனா நெருக்கடியை சந்தித்து வரும் போது அந்தப் பெருந்தொற்றை சிறப்பாக கையாள்வதற்காக ஒட்டு மொத்த உலகமும் பிரதமர் திரு. நரேந்திர மோடியைப் புகழ்ந்து வரும் வேளையில், இவ்வாறான ஊடகச் செய்திகளை விதைத்து அரசு செய்து வரும் அனைத்து நல்ல செயல்களையும் இருட்டடிப்பு செய்ய சில சக்திகள் தீய எண்ணங்களோடு செயல்படுவது துரதிர்ஷ்டவசமானது என்று அவர் தெரிவித்தார்.
***
(Release ID: 1618618)
Visitor Counter : 211
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu