சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

வருமான வரி டிரிபியூனல் முதன் முறையாக காணொலிக் காட்சி மூலம் விசாரணை

प्रविष्टि तिथि: 24 APR 2020 7:19PM by PIB Chennai

வருமான வரித் துறை மேல்முறையீட்டு டிரிபியூனல் டிவிஷன் பெஞ்ச் காணொலிக் காட்சி மூலம் முதன்முறையாக அவசர மனு ஒன்றை விசாரித்து பைசல் செய்துள்ளது. டிரிபியூனலின் தலைவர் நீதிபதி பி.பி. பட் தலைமையில் இந்த விசாரணை நடைபெற்றது. இந்த டிரிபியூனலின்  79 ஆண்டு கால வரலாற்றில், காணொலிக் காட்சி மூலம் விசாரணை நடந்திருப்பது இதுவே முதல்முறை. கோவிட்-19 தொற்று பொதுமுடக்க நிலை அமல் காரணமாக டிரிபியூனல் மூடப்பட்டிருப்பதால், டிரிபியூனலின் மும்பை அமர்வில், அதன் தலைவர் நீதிபதி பட், துணைத் தலைவர் திரு. பிரமோத் குமார் என இரண்டு உறுப்பினர்கள் இந்த விசாரணையை தங்கள் வீட்டு அலுவலகங்களில் இருந்து விசாரித்து பைசல் செய்தனர்.

வருமான வரி மதிப்பீட்டுக்கு உள்ளாகும் நபர்கள் அல்லது வருவாய்த் துறை சார்பில், தேவையான காலக்கட்டங்களில் அவசர விஷயங்கள் குறித்து தாக்கல் செய்யப்படும் மனுக்களை காணொலிக் காட்சி மூலம் விசாரிக்க, 27 இடங்களில் உள்ள வருமான வரித் துறை மேல்முறையீட்டு டிரிபியூனல் டிவிஷன் பெஞ்ச் அமர்வுகளில்  இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.

*****


(रिलीज़ आईडी: 1618129) आगंतुक पटल : 224
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Kannada