PIB Headquarters

கொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு

Posted On: 24 APR 2020 7:05PM by PIB Chennai

 

24.04.2020

 • ஆயுஷ்

· ஆயுஷ் சுகாதார பிரிவுகளில் கோவிட் 19 தொற்று தீர்வுகளுக்கான தேடல்:கோவிட்19 தொற்று நோய்த்தடுப்பிலும் சிகிச்சை மேலாண்மையிலும் ஆயுஷ் இடையீடுகள் / மருந்துகளின் தாக்கத்தை மதிப்பீடு செய்வதற்காக, குறுகிய கால ஆய்வு திட்டங்களை ஆதரிக்க ஒரு செயல்முறையை ஆயுஷ் அமைச்சகம் அறிவித்தது.வெளிப்புற (அதாவது, ஆயுஷ் அமைச்சக நிறுவனத்துக்கு வெளியில் இருந்து) ஆய்வு வகையின் கீழ் வரும் இந்த திட்டத்தில் பங்கு கொள்ள கோவிட்19 பாதிப்புகளின் மேலாண்மையில் ஈடுபட்டுள்ள மருத்துவமனைகள் / நிறுவனங்கள் அழைக்கப்பட்டன. சார்ஸ்-கோவி-2 நோய்த்தொற்று மற்றும் கோவிட்19 நோயின் தடுப்பு மற்றும் சிகிச்சை மேலாண்மையில் ஆயுஷ் இடையீடுகள் / மருந்துகளின் பங்கு மற்றும் தாக்கத்தை மதிப்பீடு செய்வது தொடர்பாக இந்த திட்டங்கள் இருக்க வேண்டும்.அதிகபட்சம் ஆறு மாத கால அளவு கொண்ட, நிறுவன நெறிமுறைகள் குழுவின் ஒப்புதல் உள்ள திட்ட முன்மொழிதல்களுக்கு, ஆயுஷ் மருத்துவர்களை ஈடுபடுத்துதல், தொழில்நுட்ப மனித ஆற்றல், ஆய்வக விசாரணைகள் மற்றும் தொடர்புடைய அவசரத் தேவைகளுக்காக ரூ. 10 லட்சம் வரை நிதி உதவிக்கு பரிசீலிக்கப்படும். தகுதி அளவுகோல்கள், விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்ப படிவம் ஆகியவை ஆயுஷ் அமைச்சகத்தின் வலைதளமான ayush.gov.in-இல் பதிவேற்றப்பட்டுள்ளன. https://main.ayush.gov.in/event/mechanism-support-short-term-research-projects-evaluating-impact-ayush-interventions-cum என்பது அந்த வலைப்பக்கத்துக்கான சுட்டி ஆகும். மின்னஞ்சல் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்படும். emrayushcovid19@gmail.com என்பது மின்னஞ்சல் முகவரி ஆகும்.விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி 01/05/2020 https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID= 1617786

 

 • தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
 • கோவிட்-19 நெருக்கடி சூழ்நிலையில் மக்களுக்கு சேவையாற்றுவதற்கு, ஓய்வறியாத உழைப்பைத் தொடர வேண்டும் என்று தபால் துறையினருக்கு திரு. சஞ்சய் தோட்ரே வேண்டுகோள்:கோவிட்-19 பரவல் காலத்தில் தபால் துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தகவல் தொடர்பு மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் திரு. சஞ்சய் தோட்ரே, காணொளிக் காட்சி மூலம் ஆய்வு நடத்தினார். தபால்துறை மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள் பற்றி திருப்தி தெரிவித்த அவர், தனி நபர் இடைவெளியைப் பராமரித்தலின் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி நாட்டு மக்களுக்கு அதிகபட்ச சேவை அளிப்பதில் தபால் துறையினர் ஆர்வம் காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆதார் அடிப்படையிலான பணப்பட்டுவாடா நடைமுறையை தபால் துறையினர் பிரபலப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய அவர், பயனாளிகளின் வீட்டு வாசலிலேயே பணம் பட்டுவாடா செய்வதில் மாநில நிர்வாகத்தினர், மாவட்ட அதிகாரிகளுடன் கோட்டத் தபால் தலைமை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். முடக்கநிலை அமல் காலத்தில் 2020 ஏப்ரல் 20ஆம் தேதி வரையில், ரூ.28 ஆயிரம் கோடி மதிப்பிலான 1.8 கோடி தபால் நிலைய சேமிப்புக் கணக்குப் பரிவர்த்தனைகள் நடந்திருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். ரூ.2100 கோடி அளவுக்கான 84 லட்சம் வங்கிக் கணக்குகளுக்கு செய்யப்பட்ட பி.பி.பி. பரிவர்த்தனைகள் இதில் அடங்காது. மேலும், நாடு முழுக்க ரூ.135 கோடி அளவுக்கு 4.3 லட்சம் ஏ.டி.எம். பரிவர்த்தனைகள் நடந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.இந்த காலக்கட்டத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான 15 லட்சம் ஆதார் அடிப்படையிலான பணப் பட்டுவாடாக்கள் செய்யப்பட்டுள்ளன. முடக்கநிலை காலத்தில் 52 லட்சம் பயனாளிகளுக்கு சேமிப்புக் கணக்குகளில் ரூ.480 கோடி அளவுக்கு நேரடியாக பணம் செலுத்தப்பட்டுள்ளது. கிராமப் பகுதிகளில் வாழும் சாமானிய மக்களுக்கு மட்டுமின்றி, முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு, ஆதார் அடிப்படையிலான பணப்பட்டுவாடா நடைமுறை மிகவும் உதவிகரமாக அமைந்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு அத்தியாவசிய பார்சல்களை கொண்டு போய் சேர்ப்பதில், மாநிலத்துக்குள்ளும், மாநிலங்களுக்கு இடையிலுமான சேவைகள் குறித்தும் அமைச்சரிடம் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.சேவைகளை மக்கள் எளிதில் பயன்படுத்திக் கொள்ள வசதியாக, உதவி மையங்களின் தொடர்பு எண்கள் பற்றிய தகவலைப் பரவச் செய்யவேண்டும் என்று வட்டார / மாநிலப் பிரிவு அதிகாரிகளை அமைச்சர் கேட்டுக்கொண்டார். https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID= 1617744

 

 

 • பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
 • கானொளி மாநாட்டின் மூலம் கொவிட்-19ஐ எதிர்ப்பதில் ஜம்மு காஷ்மீரின் (J&K) தயார் நிலையை மத்திய இணை அமைச்சர் (பணியாளர், பொது குறைகள் மற்றும் ஓய்வூதியத்துறை) டாக்டர் ஜிதேந்திர சிங் மதிப்பாய்வு செய்கிறார். வடகிழக்குப் பிராந்திய வளர்ச்சி அமைச்சகத்திற்கான மத்திய இணை அமைச்சர் மற்றும் பிரதம மந்திரி அலுவலக இணை அமைச்சரான டாக்டர் ஜிதேந்திர சிங், கொவிட்-19 வைரசை எதிர்ப்பதில் ஜம்மு காஷ்மீரின் (J&K) தயார் நிலையை இன்று மதிப்பாய்வு செய்தார். யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீரின் (J&K) மூத்த அதிகாரிகள், அரசு மருத்துவ நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகளின் தலைவர்கள் ஆகியவர்களுடன் கானொளி மாநாட்டின் மூலம் மறு ஆய்வு நடைபெற்றது. கொரோனா வைரசைத் திறம்பட எதிர்த்துப் போராடுவதற்காக நோயாளிகளை நேரடியாகக் கையாளும் யூனியன் பிரதேசத்தின் மருத்துவ சகோதரத்துவத்தை, குறிப்பாக இளநிலை மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகளை அமைச்சர் பாராட்டினார். கொவிட்-19 ஐ எதிர்த்துப் போராடும் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது என்றார் அவர். தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் கேரள மாநிலத்தைப் போலவே ஜம்மு காஷ்மீர் சிறந்த மாநிலமாக உருவெடுத்துள்ளது என்றார். டாக்டர் ஜிதேந்திர சிங் கொவிட்-19ஐ எதிர்த்துப் போராட ஆரோக்கியசேதுபயன்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். மருத்துவ மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பில் அரசு மிகவும் அக்கறை கொண்டுள்ளது என்றும், இந்தக் காரணத்திற்காக சுகாதாரப் பணியாளர்களைப் பாதுகாப்பதற்கான கட்டளை அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். தரமான தனி நபர் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பிற கருவிகள் கிடைப்பதை அதிகரிக்க, யூனியன் பிரதேசங்களின் கோரிக்கையின் அடிப்படையில், யூனியன் பிரதேசங்கள் தொடர்ந்து தனி நபர் பாதுகாப்பு உபரகணங்களையும் மற்றும் கொரோனா வைரசிற்கான சோதனைக் கருவிகளையும் பெறுகின்றன என்று அமைச்சர் தெரிவித்தார். மதத்தலைவர்களுடன் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், வீடுகளில் இருந்து பிரார்த்தனை செய்து ஒத்துழைக்குமாறு மக்களைக் கேட்டுக் கொள்ளும் வீடியோக்களும் பரப்பப்படுவதாகவும் மாண்புமிகு அமைச்சருக்குத் தெரிவிக்கப்பட்டது. அனைத்து முன்னணி ஊழியர்களுக்கும் மக்களுக்கும் ஆயுஷ் மருந்துகள் விநியோகிக்கப்படுகின்றன. https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1617787

 

 

 

 • புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
 • இந்தியாவில் சம்பளப்பட்டியல் ஆய்வு- ஒரு முறையான வேலைவாய்ப்புக் கண்ணோட்டம் :மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம், நாட்டில் வேலைவாய்ப்புக் கண்ணோட்டம் பற்றிய செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. தெரிந்தெடுக்கப்பட்ட சில அரசு முகமைகளிடம் இருந்து கிடைத்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) தொழிலாளர் காப்புறுதித்திட்டம் (ESI) , தேசிய ஓய்வூதியத்திட்டம் (NPS) போன்ற நிர்வாக ஆவணங்களின் அடிப்படையில், 2017 செப்டம்பர் முதல், 2020 பிப்ரவரி வரையிலான தரவின் மூலம் சில பரிமாணங்களில் முன்னேற்றம் மதிப்பிடப்பட்டுள்ளது. விரிவான குறிப்பு இணைக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் சம்பளப்பட்டியல் ஆய்வைக் காண இங்கு கிளிக் செய்யவும். Click here to see PDF on Payroll Reporting in India https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID= 1617785

 

 • பிரதமர் அலுவலகம்
 • சுய சார்போடும், தன்னிறைவோடும் இருப்பது தான் கொரோனா பெருந்தொற்றில் இருந்து கற்று கொண்ட மிகப்பெரிய பாடம்: பிரதமர் 'இரண்டு அடி தூரம்' - கொவிட்-19ஐ எதிர்த்து போராட கிராமப்புற இந்தியாவின் மந்திரம் இது தான்: பிரதமர்.இ-கிராம் சுவாராஜ்யா செயலி மற்றும் ஸ்வமித்வா திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்.:தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் 2020ஐ முன்னிட்டு, நாடெங்கிலும் உள்ள கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்களுடன் காணொளிக் காட்சி மூலம் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாடினார். இந்த நிகழ்ச்சியின் போது, ஒருங்கிணைந்த இ-கிராம் சுவாராஜ்யா வலைதளம் மற்றும் செயலியையும், ஸ்வமித்வா திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.கிராமப் பஞ்சாயத்து வளர்ச்சித் திட்டங்களை தயாரிக்கவும், அமல்படுத்தவும் இ-கிராம் மின்னணு சுவாராஜ்யா உதவுகிறது. நிகழ்நேரக் கண்காணிப்பையும், பொறுப்புக்கூறலையும் இந்தத் தளம் உறுதி செய்கிறது. கிராமப் பஞ்சாயத்து அளவு வரை டிஜிட்டல்மயமாக்கலில் இந்த வலைத்தளம் ஒரு முக்கியமான படியாகும்.ஆறு மாநிலங்களில் பரிசோதனை முறையில் அறிமுகப்படுத்தப்படும் ஸ்வமித்வா திட்டம், ஆளில்லாத சிறு விமானங்கள் மூலமும், சமீபத்திய கணக்கெடுப்பு முறைகளின் படியும் கிராமப்புறக் குடியிருப்பு நிலங்களை ஆவணப்படுத்த உதவுகிறது. வரைமுறைப்படுத்தப்பட்ட திட்டமிடுதல், வருவாய் வசூல் மற்றும் கிராமப் பகுதிகளில் உள்ள சொத்துரிமைகள் பற்றிய தெளிவை வழங்குதல் ஆகியவற்றை இந்தத் திட்டம் உறுதி செய்கிறது. உரிமையாளர்கள் நிதி நிறுவனங்களில் கடன் பெற விண்ணப்பிக்க இது வழிகளை திறக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் அளிக்கப்படும் உடைமைப் பத்திரங்கள் மூலமாக சொத்து தொடர்பான பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படலாம்.நாடு முழுவதிலும் இருந்து கலந்து கொண்ட ஊராட்சித் தலைவர்களிடம் பேசிய பிரதமர், மக்கள் வேலை செய்யும் விதத்தை கொரோனா மாற்றியுள்ளதாகவும், நல்லதொரு பாடத்தைக் கற்பித்துள்ளதாகவும் கூறினார். ஒருவர் எப்போதுமே சுய சார்போடு இருக்க வேண்டும் என்று இந்த பெருந்தொற்று கற்றுக்கொடுத்திருப்பதாக அவர் தெரிவித்தார்"நாம் என்றுமே கற்பனை செய்திராத சவால்களையும், சிக்கல்களையும் இந்தப் பெருந்தொற்று நமக்குக் கொடுத்துள்ள போதிலும், வலிமையான செய்தியுடன் கூடிய ஒரு நல்ல படிப்பினையையும் நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது. சுய சார்போடும் தன்னிறைவோடும் நாம் இருக்க வேண்டும் என்று அது நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. நம் நாட்டுக்கு வெளியே நாம் தீர்வுகளை தேடக்கூடாது என்று அது நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. இது தான் நாம் கற்றுக் கொண்ட மிகப்பெரிய பாடம்.""ஒவ்வொரு கிராமமும் அதன் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத்தக்க வகையில் தன்னிறைவோடு இருக்க வேண்டும். அதே போல், ஒவ்வொரு மாவட்டமும் அதன் அளவில் தன்னிறைவோடு இருக்க வேண்டும், ஒவ்வொரு மாநிலமும் அதன் அளவில் தன்னிறைவோடு இருக்க வேண்டும், மற்றும் ஒட்டுமொத்த நாடும் அதன் அளவில் தன்னிறைவோடு இருக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.கிராமங்களுக்கு தன்னிறைவை அளிப்பதற்கும், கிராமப் பஞ்சாயத்துகளை வலிமையாக்குவதற்கும் முயற்சிப்பதில் அரசு கடினமாக உழைத்ததாக திரு. நரேந்திர மோடி கூறினார்."முன்பிருந்த வெறும் 100இல் இருந்து, கிட்டத்தட்ட 1.25 லட்சம் பஞ்சாயத்துகள் அகண்ட அலைவரிசை இணையம் மூலம் கடந்த ஐந்து வருடங்களில் இணைக்கப்பட்டுள்ளது. அதே போல், பொதுச் சேவை மையங்களின் எண்ணிக்கையும் 3 லட்சத்தை தாண்டியுள்ளது," என்றார் அவர்.இந்தியாவிலேயே கைபேசிகள் தயாரிக்கப்படுவதால், திறன்பேசிகளின் விலை குறைந்து ஒவ்வொரு கிராமத்தையும் குறைந்த விலை திறன்பேசி அடைந்துள்ளதாகக் கூறிய அவர், இது டிஜிட்டல் கட்டமைப்பை சிற்றூர் அளவில் மேலும் வலுவடையச் செய்யும் என்றார்."பஞ்சாயத்துகளில் வளர்ச்சி, நாட்டின் மேம்பாட்டையும், ஜனநாயகத்தின் மேம்பாட்டையும் உறுதி செய்யும்," என்று பிரதமர் கூறினார்.இன்றைய நிகழ்ச்சி, பிரதமருக்கும் கிராம பஞ்சாயத்து பிரிதிநிதிகளுக்கும் நேரடி உரையாடலை ஏற்படுத்தக் கிடைத்த ஒரு வாய்ப்பாகும்.ஊராட்சித் தலைவர்களுடனான உரையாடலின் போது, தனி நபர் இடைவெளியை எளிமையான முறையில் விளக்க 'இரு கெஜ தூரம்' என்னும் மந்திரத்தை வழங்கியதற்காக, கிராமங்களை பிரதமர் பாராட்டினார்.ஊரக இந்திய கொடுத்த 'இரண்டு அடி தூரம்' என்னும் முழக்கம் மக்களின் அறிவைப் பறைசாற்றியதாக அவர் கூறினார். இந்த சுலோகத்தை மேலும் பாராட்டிய அவர், தனி நபர் இடைவெளியை மேற்கொள்ள மக்களை அது ஊக்கப்படுத்துவதாகத் தெரிவித்தார்.தன்னிடத்தில் உள்ள அளவான வளங்களுக்கிடையிலும் சவாலை உத்வேகத்துடன் எதிர்கொண்ட இந்தியா, புதிய சக்தி மற்றும் புதிய வழிகளின் மூலம் முன்னேறிச் செல்லும் தனது உறுதியைக் காட்டியுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்."கிராமங்களின் ஒன்றிணைந்த சக்தி தான் இந்தியா முன்னேறிச் செல்வதற்கு உதவுகிறது," என்று அவர் கூறினார்.இந்த முயற்சிகளுக்கிடையே, நம்மில் ஒருவரின் கவனக்குறைவு கூட ஒட்டுமொத்த கிராமத்தையே ஆபத்தில் தள்ளி விடும், அதன் பின் நிம்மதிக்கு வாய்ப்பே இருக்காது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும், என்று வலியுறுத்தினார்.தனிமைப்படுத்துதல், தனி நபர் இடைவெளி மற்றும் முகங்களைக் கவசங்களைக் கொண்டு மறைத்தல் ஆகியவற்றை உறுதி செய்து கொண்டே, தங்களது கிராமங்களில் தூய்மைப் பிரச்சாரங்களுக்காக வேலை செய்து, வயது முதிர்ந்தோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் இதர தேவையுள்ளோரின் நலன்களைப் பாதுகாக்க வேண்டும் என்று ஊராட்சி தலைவர்களை பிரதமர் கேட்டுக்கொண்டார்.கொவிட்-19இன் பல்வேறு அம்சங்கள் குறித்து ஒவ்வொரு குடும்பத்துக்கும் சரியான தகவலை வழங்க வேண்டும் என்று ஊராட்சித் தலைவர்களை அவர் கேட்டுக்கொண்டார்.கிராமப்புற இந்தியாவில் உள்ள மக்களை ஆரோக்கிய சேதுசெயலியைப் பதிவிறக்குமாறு கேட்டுக்கொண்ட அவர், தங்கள் பஞ்சாயத்துப் பகுதியில் உள்ள ஒவ்வொருவரும் இந்தச் செயலியைப் பதிவிறக்குவதை உறுதி செய்யுமாறு பஞ்சாயத்துப் பிரதிநிதிகளை கேட்டுக்கொண்டார்.கிராமங்களில் உள்ள ஏழை மக்கள் சிறப்பான சுகாதாரச் சேவைகள் பெறுவதை உறுதி செய்ய தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார். கிராமத்தில் உள்ள ஏழைகளுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டம் பெரிய நிவாரணமாக உருவாகியுள்ளதாகக் கூறிய அவர், கிட்டத்தட்ட ஒரு கோடி ஏழை நோயாளிகள் இந்தத் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சையைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.e-NAM மற்றும் GEM வலைதளம் ஆகிய டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்தி கிராமப்புறத் தயாரிப்புகளுக்கு நல்ல விலை கிடைப்பதற்காக பெரிய சந்தைகளை அடையுமாறு அவர் வலியுறுத்தினார்.ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா, பீகார், உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் அஸ்ஸாம் அகிய இடங்களில் இருக்கும் ஊராட்சித் தலைவர்களுடன் பிரதமர் உரையாடினர்.தன்னாட்சி என்பது கிராமங்களின் தன்னாட்சி அடிப்படையிலானது என்னும் மகாத்மா காந்தியின் கருத்தாக்கத்தை அவர் நினைவு கூர்ந்தார். சாஸ்திரங்களை மேற்கோள் காட்டிய அவர், ஒற்றுமை தான் அனைத்து வலிமைக்கும் ஆதாரம் என்று மக்களுக்கு நினைவூட்டினார்.பஞ்சாயத்து ராஜ் தினத்துக்காகவும், தங்கள் ஒருங்கிணைந்த முயற்சிகள், ஒற்றுமை மற்றும் உறுதியால்  கொரோனாவை வீழ்த்தியதற்காகவும், பிரதமர் ஊராட்சி தலைவர்களை வாழ்த்தினார். https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID= 1617884
 • பிரதமர் திரு நரேந்திர மோடியும், சிங்கப்பூர் பிரதமர் மாண்புமிகு லீ சியன் லூங்கும் தொலைபேசி மூலம் கலந்துரையாடினர் பிரதமர் திரு நரேந்திர மோடி நேற்று (23 ஏப்ரல் 2020) சிங்கப்பூர் பிரதமர் மாண்புமிகு லீ சியன் லூங்குடன் தொலைபேசி மூலம் கலந்துரையாடினார்.: இரண்டு தலைவர்களும் கோவிட்-19 பெருந்தொற்று ஏற்படுத்தி உள்ள சுகாதார மற்றும் பொருளாதார சவால்கள் குறித்த கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.  பெருந்தொற்றுக்கு எதிராக தங்களது நாடு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் அத்தொற்று ஏற்படுத்தும் பொருளாதார மற்றும் சமூக பாதிப்புகளை எதிர்கொண்டு அதனைச் சமாளிக்க எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்த அண்மைத் தகவல்களை இருவரும் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டனர்.  சிங்கப்பூருக்கு மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட இன்றியமையாத பொருட்கள் விநியோகத்தை தொடர்ந்து மேற்கொள்வதற்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று பிரதமர் உறுதி அளித்துள்ளார். மேலும் சிங்கப்பூரில் உள்ள இந்திய குடிமக்களுக்குத் தேவையான உதவிகளையும் அளித்து வருவதற்காக சிங்கப்பூர் பிரதமருக்கு அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். தற்போதைய சூழலில் இந்தியா சிங்கப்பூர் நாடுகளுக்கு இடையிலான திட்டம் சார்ந்த ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.  கோவிட்-19 ஏற்படுத்தி உள்ள தற்போதைய மற்றும் எதிர்கால சவால்களை இரண்டு நாடுகளும் இணைந்து எதிர்கொண்டு செயலாற்ற அவர்கள் சம்மதித்துள்ளனர். தற்போதைய நெருக்கடி காலத்தில் சிங்கப்பூர் மக்கள் ஆரோக்கியத்துடன் நல்வாழ்வு வாழ்வதற்கான தனது வாழ்த்துகளையும் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துக் கொண்டார். https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID= 1617887

 

 • பாதுகாப்பு அமைச்சகம்
 • கோவிட்-19 நோயை எதிர்கொள்வதற்கு இராணுவப்படைகளின் தயார்நிலை மற்றும் நோய்க்கு எதிரான நடவடிக்கைகள் பற்றி மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் பரிசீலனை கோவிட்-19 நோய்க்கு எதிரான போராட்டத்திற்கு இராணுவப்படைகள் தயார் நிலையில் உள்ளனவா என்றும், கோவிட்-19 நோய்க்கு எதிரான நடவடிக்கைகள் குறித்தும், இராணுவப்படைத் தளபதிகளுடன் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் இன்று காணொளி மாநாடு மூலம் பரிசீலித்தார்.பாதுகாப்பு அமைச்சருடன் இராணுவ விவகாரங்கள் துறைச் செயலாளரும், முப்படைத் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், இராணுவப் படைப் பிரிவுத் தலைமைத் தளபதி எம்.எம்.நராவனெ, கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் விமானப்படைத் தலைவர் ஏர் சீப் மார்ஷல் ஆர் கே எஸ் படவ்ரியா, பாதுகாப்புத்துறைச் செயலாளர் டாக்டர்.ராஜேஷ் குமார் பாதுகாப்பு நிதிச் செயலர் திருமதி. கார்கி கவுல் ஆகியோர் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.கோவிட்-19 நோய்க்கு எதிரான போராட்டத்திற்காக மேற்கொள்ளப்பட்ட தயாரிப்பு நடவடிக்கைகளில் பங்காற்றியதற்கும், உள்ளாட்சி சிவில் நிர்வாகங்களுக்கு உதவி அளிக்கும் இராணுவப் படையினரின் பங்கு குறித்தும் பாதுகாப்பு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.கோவிட்-19 நோய்க்கு எதிரான போராட்டத்தில், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள இராணுவப்படைகள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும், இவ்வாறு கோவிட்-19 நோய்க்கு எதிரான போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டிருக்கும் போது, இந்த நிலைமையை வேறு யாரும் தவறான முறையில் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்து விடக்கூடாது என்றும் திரு ராஜ்நாத் சிங் கூறினார்.நிதி ஆதாரங்களைச் செலவிடுகையில், கோவிட்-19 நோய் பாதிப்பின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சுமைகளைக் கருத்தில் கொண்டு, எதையும் வீணாக்காமல் செலவழிக்கத் தேவையான நடவடிக்கைகளை இராணுவப்படைகள் எடுக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.இராணுவப்படையினர் அனைவரும் இணைந்து பணியாற்றுவதன் அவசியத்தை வலியுறுத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர், முழு ஊரடங்கு விலக்கப்பட்ட பிறகு, பொருளாதாரத்தை மீண்டும் நிலை நிறுத்துவதற்கு, எவ்வாறு இராணுவம் உதவமுடியும் என்றும், என்னென்ன பணிகளை விரைவில் செய்து முடிக்கலாம் என்று அடையாளம் கண்டு, அவற்றை முன்னுரிமைப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.இராணுவப்படையினருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுவிடாமல் இருப்பதற்காக மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், உள்ளாட்சி சிவில் நிர்வாகத்திற்கு இராணுவம் எவ்விதமாக உதவி வருகிறது என்றும் முப்படை தளபதிகளும் பாதுகாப்பு அமைச்சருக்கு எடுத்துக் கூறினார்கள்.கோவிட்-19 நோய் பரவல் காலத்தின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன; பல்வேறு உடன்படிக்கைகளில் தேவையான திருத்தங்களைக் கொண்டு வருவது; மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் இதர முகமைகள் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலின் படி பல்வேறு பயிற்சிகளை (drills) மேற்கொள்வது; அந்தந்தப் பகுதிகளில் உள்ள முன்னாள் இராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரைக் கவனித்துக் கொள்வது போன்ற பணிகளையும் இராணுவம் மேற்கொண்டு வருகிறது. https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1617894

 

 • சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
 • கோவிட்-19 குறித்த அண்மைச் செய்திகள்:பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று நாடு முழுக்க உள்ள கிராமப் பஞ்சாயத்து அலுவலர்களுடன் காணொளிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். முடக்கநிலை அமலைப் பராமரிப்பதில் தங்கள் முயற்சிகள் மற்றும் அனுபவங்களை கிராமப் பஞ்சாயத்து அலுவலர்கள் பகிர்ந்து கொண்டனர். நெருக்கடியான காலத்தில் உண்மையான பாடங்களை நாம் கற்றுக் கொள்ள முடியும் என்று கூறிய பிரதமர், சுயசார்பு என்ற மிகப் பெரிய பாடத்தை இப்போது நாம் கற்றுக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்தார். கட்டமைப்பு வசதிகளைப் பலப்படுத்திக் கொள்ள பஞ்சாயத்துகள் நடவடிக்கைகள் எடுப்பதுடன், சிறப்பான விழிப்புநிலையைப் பராமரிக்கும் பொருட்டு, நோய் பாதிப்புக்கு ஆளாகும் மற்றும் அவர்களுடன் தொடர்புள்ளவர்களை நல்ல முறையில் தடமறிதல் செய்வதற்கு ``ஆரோக்கிய சேது'' செயலியைப் பதிவிறக்கம் செய்யும்படி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.அனைத்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர்கள் மற்றும் அத் துறையின் செயலாளர்களுடன் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் இன்று காணொளிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். கோவிட்-19 சூழ்நிலையைக் கையாளுதலில் எடுத்த நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத் தேவைகளை சமாளிக்க ஆயத்தநிலை குறித்து அவர் ஆய்வு செய்தார். இதுவரை மாநிலங்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட அவர், அதிக அளவில் நோய்த் தாக்குதல் கண்டறியப்படும் அல்லது நோயாளிகள் எண்ணிக்கை வேகமாக இரட்டிப்பாகும் மாவட்டங்கள் குறித்தும், மரண விகிதம் அதிகமாக இருக்கும் மாவட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.கண்காணிப்பு, வீடு வீடாகச் சென்று நோய் பாதிப்பைக் கண்டறிதல், ஆரம்ப நிலையிலேயே நோய் பாதிப்பைக் கண்டறிந்து உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிப்பதன் மூலம் நோயாளிகளுக்கு உரிய காலத்தில் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வது ஆகியவை மூலம் மரணங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதில் மாநிலங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் வலியுறுத்தினார். டாக்டர்கள் மற்றும் முன்கள சுகாதாரத் துறைப் பணியாளர்கள், கோவிட்-19 பாதிப்பு உள்ள அல்லது பாதிப்பு ஏற்பட்டு குணமான நோயாளிகளை தயக்கத்துடன் அணுகுதல் மற்றும் பாரபட்சமாக நடத்துதல் போன்றவை இல்லாமல் இருப்பதற்காக மேற்கொள்ளப் பட்டுள்ள நடவடிக்கைகளை சுகாதார அமைச்சர்கள் நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.முன்னதாக உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) உறுப்பு நாடுகளின் சுகாதார அமைச்சர்களுடன் காணொளிக் காட்சி மூலம் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் கலந்துரையாடினார். கோவிட்-19 நோய்க் கட்டுப்பாட்டில் இந்தியா இதுவரை கடந்து வந்த பாதை குறித்த தகவல்களை அவர்களுடன் அமைச்சர் பகிர்ந்து கொண்டார். சமுதாயப் பங்கேற்பு மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு முயற்சிகள் என்ற இரட்டைக் கோட்பாடுகளின் அடிப்படையில் இந்தியாவின் முயற்சிகள் அமைந்திருப்பதாக அமைச்சர் கூறினார்.இன்றைய நிலவரத்தின்படி, நாட்டில் முன்னர் கொரோனா வைரஸ் தாக்குதல் கண்டறியப்பட்ட 15 மாவட்டங்களில், கடந்த 28 நாட்களாகப் புதிய நோயாளிகள் யாரும் கண்டறியப்படவில்லை. அவற்றுடன் மேலும் புதிய மாவட்டங்கள் - சத்தீஸ்கரில் துர்க் மற்றும் ராஜ்நந்த்கான், மத்தியப் பிரதேசத்தில் சிவபுரி ஆகியவை இதில் இணைந்துள்ளன.மேலும் 23 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் 80 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களில், புதிதாக யாருக்கும் நோய் கண்டறியப்படவில்லை. பயிற்சி பெற்ற நிபுணர்கள் அளிக்கும் சுகாதாரம் மற்றும் பொது மக்களுக்கான தகவல்களும், குடிமக்களின் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில்களை அறியவும் @CovidIndiaSeva என்ற ட்விட்டர் இணைப்பு வசதியளிக்கிறது. உடனுக்குடன் இதன் மூலம் தகவல்களை அறிய முடிகிறது இப்போதைய நிலவரத்தின்படி 4,748 பேர் குணமடைந்துள்ளனர். நோய் பாதித்தவர்களில் குணமடையும் சராசரி 20.57 சதவீதமாக உள்ளது. நேற்றில் இருந்து, மேலும் 1684 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப் பட்டுள்ளது. இதுவரையில் மொத்தம் 23,077 பேருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டு, 718 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1617897

 

 • பாதுகாப்பு அமைச்சகம்
 • மத்திய ஆயுதக் காவல் படைக்கு (சி ஆர் பி எப்) நேரடியாக நியமிக்கப்பட்ட 51-வது தொகுதி அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகளின் பயிற்சி நிறைவு விழா புதுதில்லியில் இன்று நடைபெற்றது. கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் குறிப்பிட்டபடி, சமூக இடைவெளி விதிமுறைகளைத் தீவிரமாகப் பின்பற்றி, 42 அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்ட அடிப்படைப் பயிற்சி நிறைவு நிகழ்ச்சி காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. சிஆர்பிஎப் தலைமை இயக்குநர் ஏ.பி. மகேஸ்வரி, மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷாவின் உரையை காணொலி காட்சி மூலம் வாசித்தார்.உள்துறை அமைச்சர், பயிற்சி பெற்ற அதிகாரிகளிடம் நிகழ்த்திய தமது உரையில், ‘’ பயிற்சியை முடித்துள்ள நீங்கள், நடைமுறை செயல்பாடுகளை நிறைவு செய்வதிலும், உங்கள் கடமைகளை நிறைவேற்றுவதிலும் உள்ள ஏராளமான சவால்களை மிகத்திறமையுடன் சமாளிக்கும் அளவுக்கு முதிர்ச்சியைப் பெற்றிருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்’’ என்று கூறினார். நாட்டின் பாதுகாப்பில் சி ஆர் பி எப் -பின் மகத்தான பங்களிப்பைப் பாராட்டிய திரு.அமித் ஷா, நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பில் சிஆர்பிஎப் முதுகெலும்பாக திகழ்கிறது என்றார். நாட்டைப் பாதுகாப்பதில், தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த 2200-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் பின் தீரமிக்க தியாகிகளுக்கு அவர் புகழாரம் சூட்டினார். பயிற்சி அதிகாரிகளிடம் உரையாற்றிய உள்துறை அமைச்சர், ‘’பயிற்சி முடித்து பணியில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள், சிஆர்பிஎப்புக்கு புதிய சக்தியை ஊட்டுவார்கள் என்று நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். உங்களுக்கு கீழ் பணியாற்றும் வீரர்களுக்கு முன்னணியில் தலைமை ஏற்று திறமையாக செயல்படுவீர்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன்’’ என்று கூறினார். நாட்டுக்கான சேவையை தங்கள் முக்கிய கடமையாகக் கருத வேண்டும் என பயிற்சி அதிகாரிகளுக்கு ஊக்கமூட்டிய திரு.ஷா, ‘’உங்கள் கடமைகளை நேர்மையுடனும், ஈடுபாட்டுடனும் நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்றும், உங்களைத் தூய்மையானவராக நிலைநாட்டுவதில் வெற்றி பெறுவீர்கள் என்றும் நான் திடமாக நம்புகிறேன். நேர்மை, ஒற்றுமை, நாட்டின் இறையாண்மை ஆகியவறைக் கட்டிக்காத்து, இந்தப் படையின் பெருமையையும், புகழ்மிகு பாரம்பரியத்தையும் நீங்கள் வளமைப்படுத்துவீர்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்’’ எனக் கூறினார். இறுதியாக, பயிற்சி பெற்ற அதிகாரிகள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் சிஆர்பிஎப்பைப் பாராட்டிய உள்துறை அமைச்சர், ‘’தேச நிர்மாணத்துடன் நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புக்கும் நீங்கள் முக்கிய பங்களிப்பீர்கள் என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன் ‘’ என்றார். காணொலி மூலம் இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய உள்துறை இணையமைச்சர் திரு. ஜி .கிஷன் ரெட்டி, அதிகாரிகளின் வெற்றிகரமான பயிற்சி நிறைவைப் பாராட்டினார். நாட்டின் பாதுகாப்பு, ஒற்றுமை, இறையாண்மையைக் காக்கும் வகையில் உயிர் நீத்த 2200 சிஆர்பிஎப் வீரர்களுக்கு நாடு தனது மரியாதையை செலுத்துவதாகக் கூறினார். https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1617902

 

 • உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
 • கோவிட்-19 பெருந்தொற்றின் போது விமானப் போக்குவரத்து ஊழியர்களும், அத்துறையினரும் ஆற்றிய மிகச் சிறந்த முயற்சிகளுக்காக திரு ஹர்தீப் சிங் பாராட்டு கோவிட்-19 பெருந்தொற்றின் போது, உயிர்நாடி உடான் திட்டத்தின்படி நாடெங்கும் உள்ள மக்களுக்கு உயிர் காக்கும் மருந்துகள், அத்தியாவசியப் பொருட்கள் ஆகியவற்றை கொண்டு சேர்க்க, சிவில் விமானப் போக்குவரத்து ஊழியர்களும், அத்துறையினரும் ஆற்றிய மிகச் சிறந்த முயற்சிகளுக்காக சிவில் விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு ஹர்தீப் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.  இன்று தமது ட்விட்டரில் இதைத் தெரிவித்துள்ள அமைச்சர், உயிர்நாடி உடான் விமானங்கள் இதுவரை 3,43,635 கிலோ மீட்டர் பயணம் செய்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். உயிர் நாடி உடான் திட்டத்தின்படி ஏர் இந்தியா, அல்லயன்ஸ் ஏர், இந்திய விமானப் படை மற்றும் தனியார் விமானங்கள் ஆகியன 347 விமானங்களை இயக்கியுள்ளன. இவற்றில் 206 விமானங்களை ஏர் இந்தியா, அல்லயன்ஸ் ஏர் நிறுவனங்கள் இயக்கியுள்ளன. இதுநாள் வரை 591.66 டன் சரக்குகள் அனுப்பப்பட்டுள்ளன . https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1617905

 

 • பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்

· பி.எம்.எம் இஸ்பெட் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை ஜேஎஸ்டபிள்யூ ப்ராஜக்ட்ஸ் நிறுவனம் வாங்குவது தொடர்பான திட்டத்திற்கு சிசிஐ ஒப்புதல்:பி.எம்.எம் இஸ்பெட் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை ஜேஎஸ்டபிள்யூ ப்ராஜக்ட்ஸ் நிறுவனம் வாங்குவது தொடர்பான திட்டத்திற்கு இந்தியப் போட்டி ஆணையகம் (சிசிஐ) ஒப்புதல் அளித்துள்ளது. கூடுதல் தகவல்களுக்கு : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1617874 https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1617907

 

 • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
 • கொவிட்-19 பரவலைக் கண்காணித்துக் கட்டுப்படுத்த டிஜிட்டல் மேற்பார்வை.உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியலுக்கான மையம் (Centre for Cellular & Molecular Biology - CCMB) மற்றும், மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியலுக்கான நிறுவனம் ( Institute of Genomics and Integrative Biology - IGIB) ஆகியவை வேறு சில நிறுவனங்களோடு இணைந்து, உயிரியல், தொற்றுநோயியல் மற்றும் நோய் பாதிப்பைப் பற்றிப் புரிந்து கொள்ள, நாவல் கொரோனா வைரஸ் பரவலின் டிஜிட்டல் மற்றும் மூலக்கூறு கண்காணிப்பு குறித்து பணிபுரிகின்றன.கொடூரமான நாவல் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட சிலர், எந்த விதமான அறிகுறிகளையோ நோயுற்றத்தன்மையையோ ஏன் வெளிப்படுத்துவதில்லை? சிலர் பெரிதும் பாதிக்கப்பட்டு சாவின் எல்லை வரை செல்லும் போது, சில பேர் எவ்வாறு எந்த பாதிப்பும் இல்லாமல் வைரசின் பாதிப்பில் இருந்து வெளியே வருகிறார்கள்? தடுப்பு மருந்து மற்றும் மருந்துகள் குறித்த நம்முடைய முயற்சிகள் வீணைடையும் அளவுக்கு வைரஸ் வேகமாக மாறி வருகிறதா? அல்லது மாற்றம் முக்கியமற்றதா? இவ்வாறான பல கேள்விகளுக்கு உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் விடை தேடி வருகின்றனர்.நாவல் கொரோனா வைரசின் டிஜிட்டல் மற்றும் மூலக்கூறு கண்காணிப்பு மூலம், விடை தெரியாத பல கேள்விகளுக்கான துப்பினை விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர். IGIBஇல் அமையப் போகும் இந்த மையத்தில், அனைத்து ஆய்வகங்கள், ஆய்வு மையங்கள் மற்றும் மருத்துவமனைகள் தங்கள் தகவல்களை மேகப் பகிர்தல் மூலம் பகிர்வார்கள்.வைரஸ், நோயாளி, நோய் சிகிச்சை முறை என்ற மூன்று கட்டங்களில் இந்தக் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். வைரஸ் அளவிலான கண்காணிப்பு என்பது வைரசின் மரபணுவை குறிக்கிறது. https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1617940

 

 • கோவிட் 19 நோய் கண்டறிவதற்கான பிசிஆர் PCR மற்றும் LAMP லேம்ப் சோதனைகளுக்காக காந்த, நேனோ துகள் அடிப்படையிலான, RNA பிரித்தெடுக்கும் கிட் ஒன்றை ஸ்ரீ சித்திர திருநாள் நிறுவனம் தயாரித்துள்ளது:கோவிட் 19 நோய் உள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான பரிசோதனை செய்வதற்காக எடுக்கப்படும் மாதிரிகளில் இருந்து RNAவைத் தனியாக பிரித்தெடுப்பதற்கான புதிய தொழில்நுட்பத்திலானசித்ரா மேக்னா என்று பெயரிடப்பட்டுள்ள ஆர்என்ஏ பிரித்தெடுக்கும் கிட் ஒன்றை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பான ஸ்ரீ சித்திரத் திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப  நிறுவனம் தயாரித்துள் கோவிட் 19 நோயின் வைரஸுக்குக் காரணியான SARS-COV-2 வைரஸ், ஆர்என்ஏ வைரஸ் ஆகும். இது, ஒரு உயிரினம், உயிர் வாழ்வதற்கு தேவையான மரபணு தகவல்களை கொண்டு செல்லும் அனைத்து உயிரணுக்களுக்குள்ளும் நீளமான ஓர் இழை கொண்ட பாலிமரிக் பொருளாகும். தொண்டையிலிருந்து அல்லது மூக்கிலிருந்து எடுக்கப்படும் மாதிரியில் உள்ள வைரஸில், ஆர்என்ஏ உள்ளதா என்பதை உறுதி செய்வது, இந்த வைரஸைக் கண்டறிய உதவும். நோய் உள்ளதா என்று கண்டறிவதற்காக சேகரிக்கப்பட்ட மாதிரி, இதற்கென குறிப்பிடப்பட்ட சூழல்களில், வைரல் போக்குவரத்து மீடியம் மூலமாக சோதனைக் கூடத்திற்கு எடுத்துச் செல்லப்படும். LAMP லேம்ப் சோதனைக்காக மட்டுமல்லாமல் RT PCR ஆர்டி பி சி ஆர் சோதனைக்காகவும், நோயாளிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் இருந்து, அதிகபட்ச தூய்மை கொண்ட ஆர்என்ஏக்களைப் பிரித்தெடுப்பதற்கு சித்ரா மேக்னா பயன்படுத்தப்படும். அதிகபட்ச தரம் கொண்ட, அதிக அளவில் உள்ள ஆர்என்ஏ க்களை, தரம் குறையாமல் பிரித்தெடுப்பது என்பது பிசிஆர் அல்லது லேம்ப் சோதனைகளில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்த சோதனைகளில் ஆர் என் ஏடிஎன்ஏ-வாக மாற்றப்படுகிறது. ஒரு சில இந்தியத் தயாரிப்புகளைத் தவிர, பெரும்பாலான RNA பிரித்தெடுக்கும் கிட்டுகள் இறக்குமதி செய்யப்படுபவை. நாட்டில் பெரும் எண்ணிக்கையில் RT PCR சோதனைகளை மேற்கொள்வதற்கு, அதிக அளவில் கிட்டுகள் கிடைக்காமல் இருப்பது, மிகுந்த சிரமத்தையளிக்கும். https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1617943

 

 

 • உள்துறை அமைச்சகம்
 • கோவிட்-19 தொற்று தாக்குதலைக் கட்டுப்படுத்துதல் குறித்து நிலைமையை ஆய்வு செய்து, மாநிலங்களின் முயற்சிகளை சிறப்பாக மேன்மைப்படுத்துவதற்கு அமைச்சகங்களுக்கு இடையிலான மத்திய குழுக்களை மத்திய அரசு உருவாக்கியது :நாட்டில் சில மாவட்டங்களில் பொது முடக்கநிலை விதிகள் மீறப்படுவதால், தீவிர சுகாதாரப் பிரச்சினைகள் உருவாகி கோவிட்-19 நோய் பரவும் ஆபத்து ஏற்பட்டு, பொது மக்கள் நலன்களைப் பாதிப்பதாக உள்ளது. களத்தில் முன் நின்று பணியாற்றும் சுகாதார அலுவலர்கள் மீது தாக்குதல், காவல் துறையினர் மீது தாக்குதல், சமூக இடைவெளி நடைமுறைகளை சந்தைகளில் மீறுதல், தனிமைப்படுத்தல் மையங்கள் அமைப்பதை எதிர்த்தல் போன்ற வகைகளில் விதிமுறைகள் மீறப்படுகின்றன.இதையடுத்து அமைச்சகங்களுக்கு இடையிலான மத்தியக் குழுக்களை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. குஜராத்துக்கு இரண்டு குழுக்களும், தெலங்கானா, தமிழகம், மகாராஷ்டிரா (முன்னதாக அமைக்கப்பட்ட மும்பை-புனே குழுவின் பொறுப்புடைமை பகுதி விரிவாக்கம் செய்யப்படுகிறது) மாநிலங்களுக்கு தலா ஒரு குழுவும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் நேரடியாக நிலைமையை ஆய்வு செய்து, மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு குறைகளை நிவர்த்தி செய்வதற்குத் தேவையான அறிவுறுத்தல்களை மாநில நிர்வாகங்களுக்கு வழங்குவதுடன், மத்திய அரசுக்கு தங்களது அறிக்கையை  அனுப்பி வைக்கும்.ஆமதாபாத் மற்றும் சூரத் (குஜராத்); தானே (மகாராஷ்டிரா); ஹைதராபாத் (தெலங்கானா); சென்னை (தமிழ்நாடு) போன்ற முக்கிய தீவிர பாதிப்புப் பகுதி மாவட்டங்கள் அல்லது தீவிர பாதிப்புப் பகுதி நிலைக்கு மாறிக் கொண்டிருக்கும் மாவட்டங்களில் நிலைமை தீவிரமாக உள்ளது. மத்திய அரசின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, கோவிட்-19 தொற்று தாக்குதலைக் கட்டுப்படுத்த மாநில அரசுகளின் முயற்சிகளை மேன்மைப்படுத்த இந்தக் குழுக்கள் உதவி செய்யும்.பேரழிவு மேலாண்மைச் சட்டம் 2005-ன் கீழ் அளிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி முடக்கநிலை அமல் செய்யப்படுதல், மக்களின் ஒத்திசைவு, அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் நிலை, வீடுகளை விட்டு வெளியே வரும்போது மக்கள் சமூக இடைவெளி வரம்புகளை கடைபிடித்தல், மருத்துவமனை கட்டமைப்புகள், மருத்துவமனை வசதிகளின் ஆயத்தநிலை மற்றும் மாவட்டத்தில் உள்ள மாதிரிகள் பரிசோதனை புள்ளிவிவரங்கள், சுகாதாரத் துறை அலுவலர்களின் பாதுகாப்பு, மருத்துவப் பரிசோதனைக்கான உபகரணத் தொகுப்புகள் கிடைக்கும் நிலை, தனிப்பட்ட முழு உடல் பாதுகாப்புக் கவச உடைகள் முகக் கவச உறைகள் மற்றும் இதர பாதுகாப்பு சாதனங்கள் கிடைக்கும் நிலை, தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களுக்கான நிவாரண முகாம்களில் உள்ள சூழ்நிலைகள் உள்ளிட்ட அம்சங்களை இந்தக் குழுக்கள் ஆய்வு செய்யும்.தீவிர பாதிப்புப் பகுதி மாவட்டங்கள் / அந்த நிலையை நோக்கிச் செல்லும் மாவட்டங்களில் மேற்குறிப்பிட்ட விஷயங்களில் கட்டுப்பாடுகள் இல்லாமல் விதிமீறல்கள் அனுமதிக்கப்பட்டால், பெரிய அளவில் நோய்த் தொற்று பரவக் கூடிய அல்லது தொகுப்பு நிலையில் பரவக் கூடிய ஆபத்து ஏற்பட்டு, நாட்டு மக்களுக்கு தீவிர சுகாதாரக் கேடு ஏற்படும் ஆபத்து உள்ளது. பேரழிவு மேலாண்மைச் சட்டம் 2005-ன் 35(1), 35(2)(a), 35(2)(e) மற்றும் 35(2)(i) பிரிவுகளின் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி இந்தக் குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. பேரழிவு மேலாண்மைச் சட்டம் 2005-ன் கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களைவிட கடுமையான விதிமுறைகளை மாநில அரசுகள் அமல் செய்யலாம் என்றாலும், அவை நீர்த்துப் போகும்படி செய்யக் கூடாது என்று மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1617942

 

 • காணொலி காட்சி மூலம் 51 வது தொகுதி சிஆர்பிஎப் அதிகாரிகளின் பயிற்சி நிறைவு விழா
  தேச நிர்மாணத்துடன் நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புக்கும் முக்கிய பங்களிப்பீர்கள் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளேன்; அமித் ஷா:மத்திய ஆயுதக் காவல் படைக்கு (சி ஆர் பி எப்) நேரடியாக நியமிக்கப்பட்ட 51-வது தொகுதி அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகளின் பயிற்சி நிறைவு விழா புதுதில்லியில் இன்று நடைபெற்றது. கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் குறிப்பிட்டபடி, சமூக இடைவெளி விதிமுறைகளைத் தீவிரமாகப் பின்பற்றி, 42 அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்ட அடிப்படைப் பயிற்சி நிறைவு நிகழ்ச்சி காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. சிஆர்பிஎப் தலைமை இயக்குநர் ஏ.பி. மகேஸ்வரி, மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷாவின் உரையை காணொலி காட்சி மூலம் வாசித்தார்.உள்துறை அமைச்சர், பயிற்சி பெற்ற அதிகாரிகளிடம் நிகழ்த்திய தமது உரையில், ‘’ பயிற்சியை முடித்துள்ள நீங்கள், நடைமுறை செயல்பாடுகளை நிறைவு செய்வதிலும், உங்கள் கடமைகளை நிறைவேற்றுவதிலும் உள்ள ஏராளமான சவால்களை மிகத்திறமையுடன் சமாளிக்கும் அளவுக்கு முதிர்ச்சியைப் பெற்றிருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்’’ என்று கூறினார்.நாட்டின் பாதுகாப்பில் சி ஆர் பி எப் -பின் மகத்தான பங்களிப்பைப் பாராட்டிய திரு.அமித் ஷா, நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பில் சிஆர்பிஎப் முதுகெலும்பாக திகழ்கிறது என்றார். நாட்டைப் பாதுகாப்பதில், தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த 2200-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் பின் தீரமிக்க தியாகிகளுக்கு அவர் புகழாரம் சூட்டினார். பயிற்சி அதிகாரிகளிடம் உரையாற்றிய உள்துறை அமைச்சர், ‘’பயிற்சி முடித்து பணியில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள், சிஆர்பிஎப்புக்கு புதிய சக்தியை ஊட்டுவார்கள் என்று நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். உங்களுக்கு கீழ் பணியாற்றும் வீரர்களுக்கு முன்னணியில் தலைமை ஏற்று திறமையாக செயல்படுவீர்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன்’’ என்று கூறினார். நாட்டுக்கான சேவையை தங்கள் முக்கிய கடமையாகக் கருத வேண்டும் என பயிற்சி அதிகாரிகளுக்கு ஊக்கமூட்டிய திரு.ஷா, ‘’உங்கள் கடமைகளை நேர்மையுடனும், ஈடுபாட்டுடனும் நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்றும், உங்களைத் தூய்மையானவராக நிலைநாட்டுவதில் வெற்றி பெறுவீர்கள் என்றும் நான் திடமாக நம்புகிறேன். நேர்மை, ஒற்றுமை, நாட்டின் இறையாண்மை ஆகியவறைக் கட்டிக்காத்து, இந்தப் படையின் பெருமையையும், புகழ்மிகு பாரம்பரியத்தையும் நீங்கள் வளமைப்படுத்துவீர்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்’’ எனக் கூறினார். இறுதியாக, பயிற்சி பெற்ற அதிகாரிகள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் சிஆர்பிஎப்பைப் பாராட்டிய உள்துறை அமைச்சர், ‘’தேச நிர்மாணத்துடன் நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புக்கும் நீங்கள் முக்கிய பங்களிப்பீர்கள் என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன் ‘’ என்றார். காணொலி மூலம் இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய உள்துறை இணையமைச்சர் திரு. ஜி .கிஷன் ரெட்டி, அதிகாரிகளின் வெற்றிகரமான பயிற்சி நிறைவைப் பாராட்டினார். நாட்டின் பாதுகாப்பு, ஒற்றுமை, இறையாண்மையைக் காக்கும் வகையில் உயிர் நீத்த 2200 சிஆர்பிஎப் வீரர்களுக்கு நாடு தனது மரியாதையை செலுத்துவதாகக் கூறினார். https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1617902

 

 • மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
 • நாட்டில் தகவல் தொழில்நுட்பச் சேவைகளின் நிலை குறித்து திரு. சஞ்சய் தோட்ரே ஆய்வு. 75 மில்லியன் மக்கள் ஏற்கனவே ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்: மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பம் , தொலைத்தொடர்பு மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் திரு. சஞ்சய் தோத்ரே, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்கள்  கொவிட்-19 ஊரடங்கு முடக்கக் காலத்தில், முன்னெடுத்துள்ள முயற்சிகள் பற்றி காணொளி வாயிலாக இன்று ஆய்வு மேற்கொண்டார். சமூக இடைவெளி விதிமுறைகளைப் பின்பற்றும் அதே நேரத்தில், எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் மனநிறைவை அளிப்பதாகக் கூறிய அமைச்சர், இந்தத் துறைகள் நாட்டின் சேவையில் தங்களை முழுஅளவில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.ஏழரை கோடி மக்கள் ஏற்கனவே ஆரோக்கியசேதுசெயலியைத் தங்கள் கைபேசிகளில் பதிவிறக்கம் செய்துள்ளதாக அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது. இந்தச் செயலி, கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் மிக முக்கியமான கருவிகளில் ஒன்றாகவும், உலகப் பெருந்தொற்று பரவும் சூழலில், சாதாரண மக்களுக்கு உயிர்நாடிகளில் ஒன்றாகவும் திகழ்கிறது என அவர் கூறினார். ஜம்மு-காஷ்மீர் போன்ற 2ஜி சேவை மட்டும் உள்ள, அல்லது இணையத் தொடர்பு குறைவாக உள்ள பிராந்தியங்களிலும், இந்தச் செயலியைப் பிரபலப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த தொழில்துறைகள் பற்றி ஆர்வம் கொண்டுள்ள அமைச்சர்