பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

பாஸ்பேட், பொட்டாசியம் உரங்களுக்கான ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியக் கட்டண நிர்ணயத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 22 APR 2020 3:39PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில்,      2020-21ம் ஆண்டுக்கு பாஸ்பேட், பொட்டாசியம் உரங்களுக்கு ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியக் கட்டணத்தை நிர்ணயிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ஒப்புதல் அளிக்கப்பட்ட ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியக் கட்டணம் வருமாறு;-

கிலோ ஒன்றுக்கு மானியக் கட்டணம் ( ரூபாயில்)

N

 

P

 

K

 

S

18.789

 

14.888

 

10.116

 

2.374

 

       

 

 

இந்த மானியத் திட்டத்தின் கீழ், அம்மோனியம் பாஸ்பேட் கலப்பு உரத்தையும் (NP 14:28:0:0)  சேர்ப்பதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

2020-21 –ம் ஆண்டுக்கான பாஸ்பேட், பொட்டாசியம் உரங்களுக்கு வழங்கப்படும் மானியத்தால் எதிர்பார்க்கப்படும் செலவு ரூ.22,186.55 கோடி.

பாஸ்பேட், பொட்டாசியம் உரங்கள் மீது, மத்திய அமைச்சரவைக்குழு ஒப்புதல் அளித்துள்ள மானியக் கட்டணம் உர நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.

--------(Release ID: 1617208) Visitor Counter : 64