பாதுகாப்பு அமைச்சகம்

இந்தியக் கடற்படை மருத்துவமனைக் கப்பலான பதஞ்சலி, கர்வாரில் கொவிட்-19க்கு எதிரான போரில் முன்னணியில் நிற்கிறது.

Posted On: 19 APR 2020 1:23PM by PIB Chennai

கர்வாரில் உள்ள இந்திய கடற்படையின் மருத்துவமனையான பதஞ்சலி,  உத்தர கன்னட மாவட்டத்தில் இருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து, கொவிட்-19க்கு எதிரான போரில் முன்னணியில் நிற்கிறது.

கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகளின் முதல் குழுவை வரவேற்க, 24 மணி நேரத்தில் அனைத்து விதத்திலும் இந்தியக் கடற்படையின் கப்பல் மருத்துவமனையான பதஞ்சலி (Indian Naval Hospital Ship – Patanjali) தயார்படுத்தப்பட்டது. இது வரை அனுமதிக்கப்பட்ட கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்ட ஒன்பது நோயாளிகளின் பராமரிப்பை, மூன்று மருத்துவர்கள், ஒன்பது மருத்துவப் பணியாளர்கள் மற்றும் ஒன்பது ஆதரவுப் பணியாளர்களைக் கொண்ட குழு உறுதி செய்தது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒன்பது நோயாளிகளில், எட்டு பேர் இது வரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 16 ஏப்ரல் அன்று அனுமதிக்கப்பட்ட தற்போது உள்ள ஒரே நோயாளியை மருத்துவமனை பராமரித்து வருகிறது. அவருக்கும் சிகிச்சை பலனளித்துக் கொண்டிருக்கிறது



(Release ID: 1616040) Visitor Counter : 153