உள்துறை அமைச்சகம்

கோவிட்-19 நோய்த் தாக்குதலைத் தடுப்பதற்கான முடக்கநிலை அமல் நடவடிக்கைகள் 2020 மே 3 ஆம் தேதி வரை தொடரும்

Posted On: 14 APR 2020 7:49PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு இன்று ஆற்றிய உரையில், கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு நாட்டில் அமல் செய்யப்பட்ட முடக்கநிலை காலம் 2020 மே 3 ஆம் தேதி வரையில் தொடரும் என்று அறிவித்தார்.

அந்த அறிவிப்பைத் தொடர்ந்து அனைத்து மத்திய அரசு அமைச்சகங்கள் / துறைகள், மாநில / யூனியன் பிரதேசங்களின் அரசுகள் மற்றும் நிர்வாகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் தொகுக்கப்பட்ட வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ள முடக்கநிலை அமல் நடவடிக்கைகள், மே 3 ஆம் தேதி வரையில் தொடரும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, முடக்கநிலை அமலாக்கம் நீட்டிக்கப்பட்டிருப்பதால், பல்வேறு செயல்பாடுகள் குறித்து, பல்வேறு துறைகளில் அமல் செய்யப்பட்ட அனைத்துக் கட்டுப்பாடுகளும், தொடர்ந்து அமலில் இருக்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.மத்திய உள்துறை அமைச்சகத்தின் தொகுக்கப்பட்ட வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ள இந்தக் கட்டுப்பாடுகளை மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள் / துறைகளும், மாநில / யூனியன் பிரதேச அரசுகள் மற்றும் நிர்வாகங்களும் கடுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரழிவு மேலாண்மைச் சட்டம் 2005இன் கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு  உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் நீர்த்துப் போகச் செய்துவிடக் கூடாது என்று வலியுறுத்தப் பட்டுள்ளது.

 

முடக்கநிலை நீட்டிப்பு நடவடிக்கைகள் குறித்த உத்தரவைக் காண இங்கே கிளிக் செய்யவும்

 

*****


(Release ID: 1614647)