பாதுகாப்பு அமைச்சகம்
ஐ எஸ் ஓ 3 தரத்திலான 1.10 லட்சம் பாதுகாப்பு கவச உடைகளை தயாரிக்க ராணுவ தளவாட தொழிற்சாலை வாரியம் திட்டமிட்டுள்ளது
Posted On:
14 APR 2020 2:41PM by PIB Chennai
ராணுவ தளவாட தொழிற்சாலை வாரியம் ஐ எஸ் ஓ 3 தரத்திலான பாதுகாப்பு கவச உடைகளை வழங்கத் தொடங்கியுள்ளது எச் எல் எல் லைஃப்கேர் நிறுவனத்திலிருந்து 1.10 லட்சம் முதற்கட்ட கவச உடை தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெறுகிறது. இந்த பணியானது 40 நாட்களில் முடிக்கப்படும்.
மேலும் தொழிற்சாலைகள் வாரியம் இரண்டு மீட்டர் அளவிலான சிறப்பு கூடாரங்களையும் உருவாக்கியுள்ளது, அவை மருத்துவ அவசரநிலையின் போது நோயாளிகளைத் தனிமைப்படுத்தி பரிசோதிக்கவும் சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தப்படலாம். இந்த கூடாரத்துணி தண்ணீர்புகாத லேசான எஃகு மற்றும் அலுமினிய அலாய் ஆகியவற்றால் ஆனவை. இதன் விநியோகம் ஏற்கனவே தொடங்கிவிட்டன.
கைகளை சுத்தம் செய்யும் கிருமி நாசினியின் உற்பத்தி போர்கால அடிப்படையில் தயாரிக்கபடுவதுடன் 70,000 லிட்டருக்கும் அதிகமான கிருமி நாசினி ஏற்கனவே வெவ்வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இரத்த ஊடுருவல் சோதனைக்கு இரண்டு பரிசோதனை நிலையங்கள், ஒன்று சென்னையிலும் மற்றொன்று கான்பூரிலும் நிறுவப்பட்டுள்ளன.
•••••••••••••••
(Release ID: 1614380)
Visitor Counter : 149
Read this release in:
Kannada
,
Gujarati
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Telugu