பாதுகாப்பு அமைச்சகம்

கொவிட்-19னால் ஊரடங்கு அமலில் உள்ள போது, விமானம் இயங்க ஆதரவாக விசாகப்பட்டினம் விமானநிலையத்திலிருந்து இருபத்தி நான்கு மணிநேரமும் (24 x 7) விமானங்களை இயக்க இந்திய கடற்படை உதவுகிறது.

Posted On: 14 APR 2020 12:41PM by PIB Chennai

தற்போதைய கொவிட்-19 தொற்றுநோய் சூழலில், கொரொனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு தழுவிய ஊரடங்கு கடைபிடிக்கபட்டு வரும் நிலையில், விசாகப்பட்டினத்தின் கிழக்கு கடற்படை விமான நிலையம் (INS Dega - ENC), மக்களும், இராணுவமும் இணைந்து உபயோகிக்க ஏதுவாக இருபத்தி நான்கு மணிநேரமும் இயங்குகிறது. தேவையான அனைத்து பாதுகாப்பு சேவைகளும் விமான நிலைய வசதிகளும் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்வதற்காக விமானநிலையத்தில் சுழற்சி முறையில் ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஏற்பாடு அனைத்து சிறப்பு விமானங்களும், ஸ்பைஸ்ஜெட்டின் (Spice jet) சரக்கு விமானமும் அவற்றின் செயல்பாடுகளைத் தங்கு தடையின்றி தொடர்ந்து நடத்த உதவி செய்கிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதிலிருந்து இதுவரை, 15 வகையான சரக்கு விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்திய கடற்படை வழக்கமான கடல்சார் கண்காணிப்புப் பணிகளை இரவு பகலாக தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. விமான நிலையத்திலிருந்து இயக்கபடும் INAS 311, ENC இன் (Dornier squadron) விமானம் வழக்கமான கடல்சார் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கூடுதலாக, மற்ற அனைத்து விமானப் படைகளும் பணிக்குத் தயாராக வைக்கப்பட்டுள்ளதுடன், தேவை ஏற்பட்டால் உடனடியாக இயக்கப்படவும் தயார் நிலையில் உள்ளன.

•••••••••••••••



(Release ID: 1614370) Visitor Counter : 159