உள்துறை அமைச்சகம்

கோவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் பயணக் கட்டுப்பாடுகளின் காரணமாக இந்தியாவில் தற்போது தங்கி இருக்கும் வெளிநாட்டு குடிமக்களுக்கு ஏப்ரல் 30, 2020 வரை தூதரகச் சேவைகள் வழங்க அனுமதி

Posted On: 13 APR 2020 2:38PM by PIB Chennai

கோவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை தவிர்க்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகமானது பயணக்கட்டுப்பாடுகளின் காரணமாக இந்தியாவிலேயே தற்போது தங்கி இருக்கும் வெளிநாட்டு குடிமக்களுக்கு ஏப்ரல் 30ம் தேதி வரை கட்டணமில்லாமல் தூதரகச் சேவைகளை வழங்குவதற்கு அனுமதி வழங்கி உள்ளது. இந்த அனுமதியை அமைச்சகம் மார்ச் 28ம் தேதி அன்று வெளியிட்டது. (https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1613895)

உலகின் பல நாடுகளில் கோவிட்-19 தொற்று பரவிக் கொண்டிருப்பதன் காரணமாக இந்தியாவில் சிக்கித் தவிக்கின்ற மற்றும் இந்திய அரசு விதித்துள்ள பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக தங்கள் நாடுகளுக்கு திரும்ப முடியாமல் இருக்கின்ற வெளிநாட்டு குடிமக்களின் வழக்கமான விசா, இ-விசா அல்லது தங்கி இருப்பதற்கான நிபந்தனை ஆகியவற்றின் அனுமதி காலம் காலாவதியாகி விடலாம். அப்படி காலாவதியான விசாக்கள் அல்லது பிப்ரவரி 01ம் தேதி நள்ளிரவு முதல் ஏப்ரல் 30ம் தேதி நள்ளிரவு வரை காலாவதியாகும் விசாக்கள் கட்டணம் ஏதுமில்லாமல்  ஏப்ரல் 30ம் தேதி  நள்ளிரவு வரை நீட்டிக்கப்படும். இந்த விசா நீட்டிப்புக்கு வெளிநாட்டினர் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.



(Release ID: 1614007) Visitor Counter : 194