பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் பத்திரிகைச் செய்தி
Posted On:
11 APR 2020 11:04AM by PIB Chennai
மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு மற்றும் நாடு முழுவதும் உள்ள அதன் கிளை அமர்வுகள் எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு விரைவாக வழக்குகளை பைசல் செய்வதற்கான முயற்சிகளை எப்போதும் எடுத்து வந்துள்ளன. அதே போன்று நிவாரணம் வேண்டி இந்தத் தீர்ப்பாயத்திற்கு வருகின்றவர்கள் மனநிறைவு அடையும் வகையில் செயல்படவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உண்மையைக் கூறவேண்டுமென்றால், பிப்ரவரி 2020 வரை வழக்குகளைத் தீர்த்து வைக்கும் விகிதமானது குறிப்பிடத்தக்க அளவிலேயே இருந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று திடீர்ப் பரவலின் காரணமாக, தனி நபர் இடைவெளி கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் அமர்வுகள் மாற்றப்பட்டன. ஆனால் இந்த முறையில் அமர்வு நடத்துவதும் கூட, 22 மார்ச் முதல் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளின் அடிப்படையில் முடியாததாகிவிட்டது. முழு அடைப்பு அறிவிக்கப்பட்ட பிறகு, வழக்கறிஞர்களோ அல்லது தீர்ப்பாயத்தின் ஊழியர்களோ பணிக்கு வர முடியாத நிலையில் தீர்ப்பாயத்தின் கிளைகள் செயல்பட முடியாத நிலைக்கு ஆளாகிவிட்டன. விசாரணைகளை காணொளிக் காட்சி மூலம் நடத்தக் கூடிய வாய்ப்பும் முடியாத நிலையில் உள்ளது. ஏனெனில் அதற்கேற்ற உபகரண உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. மேலும், இதற்கான உபகரணங்களை முழு அடைப்பு காலகட்டத்தில் உடனடியாக வாங்க முடியாத சூழலும் உள்ளது. முதன்மை அமர்வுக்கு ஏப்ரல் 2 முதல் 12ஆம் தேதி வரை குறுகியகால விடுமுறை என ஏற்கனவே பட்டியலிடப்பட்டு இருந்தது.
15.04.2020 முதல் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஏற்பவே தீர்ப்பாயத்தின் செயல்பாடுகள் குறித்து முடிவு எடுக்கப்படும். நீதிமன்றங்களை நடத்துவதற்கான வாய்ப்பு சிறிது கிடைத்தாலும் கூட அதை நிச்சயம் பயன்படுத்திக் கொண்டு நீதிமன்றம் கட்டாயமாகச் செயல்படும்.
*********
(Release ID: 1613278)
Visitor Counter : 222
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam