பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

கோவிட்-19 பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஓய்வூதியர்களுடன் இணையவழி பயிலரங்கில் பங்கேற்றார் டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 09 APR 2020 4:15PM by PIB Chennai

கோவிட்-19 பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் அது தொடர்பான பிரச்சினைகளை விவாதிக்க, வடகிழக்குப் பிராந்திய மேம்பாடு, பிரதமர் அலுவலம், பொதுமக்கள் குறைதீர்வு, பணியாளர் நலன், ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளி துறைகள் அடங்கிய உள்துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு)  டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமையில் இணையவழி பயிலரங்கு ஒன்றுக்கு ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலன் துறை இன்று ஏற்பாடு செய்திருந்தது.  22 நகரங்களில் இருந்து சுமார் 100 ஓய்வூதியர்கள் இதில் கலந்து கொண்டு கலந்துரையாடினர். எய்ம்ஸ் டைரக்டர் டாக்டர் ரன்தீப் குலேரியா, எய்ம்ஸ் மருத்துவமனை முதியோர் மருத்துவத் துறை அசோசியேட் பேராசிரியர் டாக்டர் பிரசன் சாட்டர்ஜி ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர். கொரோனா வைரஸ் பரவுதல் பற்றி நிபுணர்கள் விரிவாக விளக்கினர். இப்போதைய சூழ்நிலை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை, தீர்வுக்கான வழிமுறைகள் பற்றி அவர்கள் விவரமாக எடுத்துக் கூறினர்.

ஓய்வூதியர்களுடன் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், இந்த நோயால் உயிரிழப்பு வயது முதிர்ந்தவர்களில் தான் அதிகமாக இருக்கிறது என்றும், இளவயதினருக்கு நோய்த் தொற்று அதிகம் உள்ளது என்றும் கூறினார்.  இருந்தாலும் வயது முதிர்ந்தவர்களுக்கு நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருப்பதால், கோவிட்-19 தாக்குவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்த நோய்த் தொற்றுக்கு எதிரான செயல்பாடுகளில், நல்ல ஆரோக்கியமான நடவடிக்கைகள் முக்கிய பங்கு வகிப்பதாக அவர் கூறினார். ஓய்வூதியர்கள் Aaroygaya Setu  ஆப்-ஐ பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.  கோவிட் -19 தொடர்பான சமீபத்திய தகவல்கள் அதில் சேர்க்கப்படுவதாகவும், கோவிட்-19 பாதித்த நபருடன் உங்களுக்குத் தொடர்பு ஏற்பட்டால் எச்சரிக்கை செய்வதற்காகவும் அந்த ஆப் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

 

<><><><><>


(Release ID: 1612632) Visitor Counter : 201