வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

கோவிட்-19 குறித்த விசாரணைகளைக் கையாள்வதற்கு ஏற்ற வகையிலான ஸ்வச்சதா செயலியின் புதிய பதிப்பினை அறிமுகம் செய்தது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

Posted On: 09 APR 2020 1:08PM by PIB Chennai

தற்போது செயல்பாட்டில் உள்ள Swachhata-MoHUA  செயலியைப் புதுப்பித்து காணொலிக் காட்சி மூலம் அறிமுகம் செய்திருப்பதாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது. கோவிட்-19 நெருக்கடி குறித்து அமைச்சகத்தின் செயலாளர் திரு. துர்காசங்கர் மிஸ்ரா தலைமையில் நடைபெற்ற அந்த காணொலிக் காட்சியில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், நகரங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தூய்மையான பாரதம் (நகர்ப்புறம்) திட்டத்தின் கீழ் மக்களிடம் பிரபலமான குறைதீர்வு உதவியாக இருந்த Swachhata-MoHUA செயலியில் ஏற்கெனவே 1.7 கோடிக்கும் அதிகமான நகர்ப்புற பயனாளர்கள் உள்ளனர். கோவிட்-19 தொடர்பான அவர்களது புகார்களைப் பெற்று சம்பந்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு மூலம் தீர்க்கப்படுவதற்கு உதவும் வகையில், புதுப்பிக்கப்பட்ட, பலம் சேர்க்கப்பட்டதாக புதிய செயலி இருக்கிறது.

ஏற்கெனவே பிரபலமாக இருக்கும் இந்த செயலிக்கு மக்களின் வரவேற்பு மூலம் கிடைத்த நற்பெயரைப் பயன்படுத்தி, கோவிட் நோய்த்தொற்று காலத்தில் மக்களுக்கு நல்ல முறையில் உதவி செய்யும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், புதிதாக சேர்த்துள்ள பிரிவுகள் ஏற்கெனவே அந்த செயலியில் உள்ள பிரிவுகளின் மீது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது.இரண்டு பிரிவுகளிலுமே குடிமக்கள் தங்கள் குறைகளைப் பதிவு செய்யலாம்.

காணொளிக் காட்சி மூலம் பேசிய திரு. மிஸ்ரா, ``நகர்ப்புறங்களுக்கான தூய்மையான பாரதம் திட்டத்தின் கீழ், கோவிட்-19 நெருக்கடி காலத்தில் குடிமக்களின் பாதுகாப்பையும், ஆரோக்கியத்தையும் உறுதிப் படுத்த நாங்கள் கூட்டாக சேர்ந்து பாடுபட்டு வருகிறோம். மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் நகரங்களுக்கு வசதிகளை அளிப்பதற்கு, கோவிட்-19 குறித்த குறைகளைத் தெரிவிக்க இந்த செயலியில் 9 புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப்போதைய சூழ்நிலையில் இன்னும் அதிகமான உதவிகள் கிடைக்கச் செய்யும் வகையில் அவை அமைந்துள்ளன'' என்று கூறினார்.

புதிய 9 பிரிவுகளில் பின்வருவன இடம் பெற்றிருக்கும்:

  • கோவிட்-19 காலத்தில் மருந்துகள் அடித்தல் / கழிவுகள் அகற்றுதலுக்கான கோரிக்கை
  • கோவிட்-19 காலத்தில் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு மீறப்படுதல்
  • கோவிட்-19 காலத்தில் முடக்கநிலை விதிகள் மீறப்படுதல்
  • கோவிட்-19 பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கும் நபர்கள் பற்றி தகவல் அளிப்பது
  • கோவிட்-19 காலத்தில் உணவுக்குக் கோரிக்கை வைத்தல்
  • கோவிட்-19 காலத்தில் தங்குமிடத்திற்குக் கோரிக்கை வைத்தல்
  • கோவிட்-19 காலத்தில் மருந்துக்குக் கோரிக்கை வைத்தல்
  • கோவிட்-19 பாதித்த நோயாளியை அழைத்துச் செல்ல உதவி கோருதல்
  • தனிமைப்படுத்தல் பகுதியில் இருந்து கழிவுகளை அகற்ற கோரிக்கை வைத்தல்

புதுப்பிக்கப்பட்ட செயலியின் புதிய பதிப்பின் சோதனி முயற்சியாக குறிப்பிட்ட சில மாநிலங்கள் மற்றும் நகரங்களில் பகிரப்பட்டது. அங்கு கிடைத்த வரவேற்பின் அடிப்படையில், இப்போது நாடு முழுக்க அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை காணொளிக் காட்சியில் பங்கேற்றிருந்த மாநில திட்ட இயக்குநர்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின்  பிரதிநிதிகள் வரவேற்றனர்.கோவிட்-10 தொடர்பான குறைகளைத் தீர்க்க Swachhata-MoHUA  வின் மூலம் நல்ல பயன் கிடைக்கும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.  தங்கள் நகரில் தூய்மையை மேம்படுத்துவதில் மக்கள் தீவிர பங்காற்ற முடியும் என்பதைக் காட்டுவதற்கான சிறந்த டிஜிட்டல் வசதியாக இந்தச் செயலி உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை பொறுப்பேற்கும் நிலைக்கு ஆட்படுத்தவும் இது உதவியாக இருக்கும்.

தொடர்ந்து புதிய தகவல்களைப் பெற தூய்மையான பாரதம் திட்டத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகத் தளங்களில் தொடர்பில் இருந்திடுங்கள்:

இணையதளம்: www.swachhbharaturban.gov.in

முகநூல் பக்கம் (Page): Swachh Bharat Mission - Urban

டுவிட்டர் கணக்கு - @SwachhBharatGov

 

பிற்சேர்க்கை -!A 'கோவிட்-19 Swachhata-MoHUA செயலிப் பிரிவுகள் குறித்த கேள்விகளும், அவற்றுக்கான பதில்களும்

 

வ. எண்.

கேள்விகள்

பதில்கள்

1

Swachhata-MoHUA செயலியில் கோவிட்-19 பிரிவின் கீழ் பதியப்படும் புகார்களைத் தீர்த்து வைப்பதற்கான பொறுப்பு அதிகாரி யார்?

 

இந்த செயலியில் வரும் அனைத்துப் புகார்களையும் தீர்த்து வைக்க வேண்டியது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்பு. இதில் பதிவு செய்யப்படும் புகார்கள் முக்கியமானவை என்பதால், நேரடியாக தீர்த்து வைப்பது அல்லது தொடர்புடைய துறையுடன் குடிமக்களை தொடர்பு ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் உடனடியாகத் தீர்வு காண வேண்டும். புகார்கள் தீர்த்து வைக்கப்படுவதை உறுதி செய்வதற்கு, புகார்களின் தற்போதைய நிலவரம் குறித்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் கண்காணிக்க வேண்டும்.

2

கோவிட்-19 பிரிவுகளில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பின்  தூய்மைக் கணக்கெடுப்பு/குப்பைகள் இல்லாத நகரங்கள்/ திறந்த வெளியில் மலம் கழித்தல் மதிப்பீடுகள் இடம் பெறுமா?

இல்லை. புதிய கோவிட்-19 பிரிவுகளின் கீழான புகார்கள் மற்றும் தீர்வுகள் அமைப்பின்  தூய்மைக் கணக்கெடுப்பு/குப்பைகள் இல்லாத நகரங்கள்/ திறந்த வெளியில் மலம் கழித்தல் மதிப்பீடுகள் நடைமுறைகளின்படி மதிப்பீடு செய்யப்படாது. கோவிட்-19 நோய்த் தொற்று காலத்தில் குடிமக்களுக்கு உதவி செய்வதற்காகவும், தங்கள் குடிமக்களைப் பற்றி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் அறிந்து கொள்ள மேலும் ஒரு களத்தை உருவாக்கித் தரும் வகையிலும் தான் இந்தப் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

3

இப்போதுள்ள Swachhata-MoHUA செயலியில் கோவிட்-19 தொடர்பான புதிய பிரிவுகள் சேர்த்திருப்பதால், இப்போதுள்ள பிரிவுகள் என்னவாகும்?

Swachhata-MoHUA-ன் கீழ் உள்ள பழைய பிரிவுகள் மற்றும் புதிய கோவிட்-19 பிரிவுகள் எல்லாமே செயல்பாட்டில் இருக்கும். இதில் எந்தப் பிரிவுகளிலும் குடிமக்கள் புகார்களைப் பதிவு செய்யலாம். கூடிய விரைவில் அவற்றுக்குத் தீர்வு காணப்படும்.

4

புகார்களை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் எப்படி கண்காணிக்கும்?

Swachhata செயலியில் வரும் புகார்களை www.swachh.city மூலம் கண்காணித்த அதே மாதிரியாக, Swachh.city அறிவிப்புப் பலகை பகுதியில் அனைத்துப் புகார்களையும் கண்காணிக்கலாம்.

5

மருந்துப் புகை பரவச் செய்தல் / கழிவுகள் அகற்றல் ஆகியவற்றை வெவ்வேறு பிரிவுகளாகப் பிரிக்கலாமா?

புகாருக்கான பிரிவு மாறாது. இருந்தாலும், புகார்தாரர் தனது கோரிக்கையை ``More info'' பகுதியில் தெரிவிக்கலாம். அல்லது குறிப்பிட்ட கோரிக்கைகளை அறிய புகார்தாரரை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தொடர்பு கொள்ளலாம்.

6

கோவிட்-19 கழிவை முறையின்றி அகற்றுதல் பற்றி புகார் செய்ய தனி பிரிவு சேர்க்கலாமா?

இது'Request Waste Pickup from Quarantine Area’ என்ற பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.

7

தனி நபர் இடைவெளி விதிமீறல் பற்றி புகார் தெரிவிக்க தனிப் பிரிவு சேர்க்கப்படுமா?

இது ‘Violation of Lockdown during COVID-19’ என்ற பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.

 

8

அதிக பாதிப்பு இருக்கும் வாய்ப்புள்ள பகுதிகளில் முகக்கவச உறை அணியாதது பற்றி தனிப் பிரிவு சேர்க்கப்படுமா?

இது ‘Violation of Lockdown during COVID-19’ என்ற பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது

9

நோய்த் தொற்று நீக்கம்/கிருமிநீக்கம் கோரிக்கை குறித்து தனிப்பிரிவு சேர்க்கப்படுமா?

இதை Request for Fogging/Sanitation during COVID-19’ என்ற புதிய பிரிவின் கீழ் சேர்க்கலாம்.

 

10

உணவுக்கான கோரிக்கையை தவிர்க்கலாம், குடிமக்கள் அதை தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது.

கோவிட்-19 நோய்த் தொற்று பரவலில் இது முக்கியமானது. தேவையான நிலையில் இருக்கும் குடிமக்களுக்கு உணவு கிடைப்பதை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு உறுதி செய்திட வேண்டும்.

உணவு, தங்குமிடம், மருந்து, போக்குவரத்து போன்ற கோரிக்கைகளை அந்தப் பகுதியில் உள்ள தொடர்புடைய முகமை / தன்னர்வ அமைப்புகள் / கடைகள் / விற்பனையாளருக்கு அனுப்பிவிட்டு, கோரிக்கை வைத்தவருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இருந்தாலும், கோரிக்கை இறுதியாக தீர்த்துவைக்கப்படும் வரை அதை கண்காணித்திட வேண்டும்.

11

தனிமைப்படுத்தல் அல்லது முடக்கநிலை விதிமீறல்களை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு நேரடியாகக் கையாளாமல், காவல் துறை / மாவட்ட நிர்வாகம் கையாள்வது எப்படி இருக்கும்?

குறிப்பிட்ட புகார் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தகவல் தெரிவித்து, அதற்கான பதில் Swachhata  செயலியில் தெரிவிக்கப்பட வேண்டும்.

12

இந்த செயலிதொடர்பான தொழில்நுணுக்கப் பிரச்சினைகளைத் தீர்க்க உதவி மையம் ஏதும் உள்ளதா?

அனைத்து விசாரணைகளையும் swachhbharat@janaagraha.org -இல் அனுப்பலாம்.

தீர்க்கப்படாத விஷயங்கள் குறித்தவற்றை பின்வரும் தொடர்பில் தெரிவிக்கலாம்:

சுமித் அரோரா, ஜனாகிரஹா: 9818359033;

பிரபல் பரத்வாஜ், தேசிய PMU, SBM (U): 7838606896

 

********


 



(Release ID: 1612615) Visitor Counter : 223