உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

ஜோர்ஹட், திமாபூர், இம்பால், இதர வட கிழக்கு பகுதிகளுக்கு லைஃப்லைன் உடான் விமானங்கள் மருத்துவ எடுத்துச் சென்றன‌

Posted On: 07 APR 2020 5:03PM by PIB Chennai

விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் லைஃப்லைன் உடான் திட்டத்தின் கீழ், தொலைதூர மற்றும் மலைப் பகுதிகள் உட்பட நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் மருத்துவ சரக்குகளை எடுத்து செல்ல இது வரை 152 சரக்கு விமானங்கள் நாடெங்கும் இயக்கப்பட்டுள்ளன. ஏர் இந்தியா, அலையன்ஸ் ஏர், இந்திய விமானப் படை மற்றும் தனியார் விமான நிறுவனங்களின் ஆதரவுடன், 200 டன்னுக்கும் அதிகமான மருத்துவ சரக்குகள் பொது முடக்கக் காலத்தில் இது வரை எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் பெட்டிகள் (கிட்), ஹெச் எல் எல் (ஹிந்துஸ்தான் லேட்டக்ஸ் லிமிடெட்) சரக்குகள் மற்றும் இதர அத்தியாவசிய சரக்குகளை ஏப்ரல் 6ம் தேதி அன்று, வட கிழக்குப் பகுதிகள் மற்றும் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கும் லைஃப்லைன் உடான் விமானங்கள் எடுத்துச் சென்றன. விவரங்கள் வருமாறு:

லைஃப்லைன் 1 (இந்திய விமானப் படை): தில்லி ‍– ராஞ்சி - பாட்னா-ஜோர்ஹட் – லெங்க்புய் – இம்பால் – குவாஹத்தி.  குவாஹதிக்கான இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் 50 பெட்டிகள், அஸ்ஸாமுக்கான செஞ்சிலுவை 800 கிலோ சரக்கு உட்பட, மேகலயாவுக்கான 672 கிலோ சரக்கு, மணிப்பூரின் 300 கிலோ மிச்ச சரக்கு, நாகாலாந்தின் மிச்ச சரக்கு, திப்ருகருக்கான இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் சரக்கு, மிசோராமுக்கான 300 கிலோ சரக்கு, ராஞ்சிக்கான 500 கிலோ சரக்கு மற்றும் பாட்னாவுக்கான இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் 50 கிலோ பெட்டிகள் அனுப்பப்பட்டுள்ளன.

லைஃப்லைன் 2 அலையன்ஸ் ஏர் (ஏடிஆர்): தில்லி-வாரணாசி-ராய்ப்பூர் –ஹைதராபாத்-தில்லி வாரணாசிக்கான‌ இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (50 கிலோ) பெட்டிகள், ராய்ப்பூருக்கான இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (50 கிலோ) பெட்டிகள், ஹைதரபாத்துக்கான இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (50 கிலோ) பெட்டிகள், விஜயவாடாவுக்கான இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (50 கிலோ) பெட்டிகள், மற்றும் ஹைதராபாத்துக்கான (1600 கிலோ) சரக்கு ஆகியவற்றை எடுத்து சென்றது.

லைஃப்லைன் 3 ஏர் இந்தியா (ஏ 320): மும்பை‍-பெங்களூரு-சென்னை-மும்பை ஜவுளி அமைச்சகத்தின் சரக்குகள், பெங்களூருக்கான ஹெச் எல் எல் சரக்கு, சென்னைக்கான ஹெச் எல் எல் சரக்கு.

லைஃப்லைன் 4 ஸ்பைஸ் ஜெட் எஸ் ஜி (7061): தில்லி- சென்னை சென்னைக்கான இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் சரக்கை எடுத்து சென்றது.

லைஃப்லைன் 5: ஏர் இந்தியா தனி விமானம் (ஏ 320) தில்லி-டேராடூன் டேராடூனுக்கான‌ இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் சரக்கை எடுத்து சென்றது.

 



(Release ID: 1612143) Visitor Counter : 176